உள்ளடக்கத்துக்குச் செல்

பைபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைபுளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஐதரசன் டைபுளோரைடு
பைபுளோரைடு எதிர்மின் அயனி
ஐதரசன் டைபுளோரைடு எதிர்மின் அயனி
இனங்காட்டிகள்
18130-74-0 Y
ChemSpider 35308425 N
InChI
  • InChI=1S/F2H/c1-3-2/q-1
    Key: LJRMFMQHZAVYNS-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • F[H][F-]
பண்புகள்
HF2
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

பைபுளோரைடு (bifluoride) என்பது HF2- என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் எதிர்மின் அயனியாகும்.

தயாரிப்பு[தொகு]

நிறமற்றதாகக் காணப்படும் இது பொதுவாக புளோரைடு உப்புகள் ஐதரோபுளோரிக் அமிலத்துடன் வினைபுரியும்போது உருவாகிறது.

பயன்[தொகு]

பைபுளோரைடு உப்புகளை மின்னாற்பகுப்பு வினைக்கு உட்படுத்தி புளோரின் வாயுவை வர்த்தக அளவில் தயாரிக்கப் பயன்படுகிறது.

கட்டமைப்பு[தொகு]

பைபுளோரைடு அயனியானது F−H பிணைப்பு நீளம் 114 பைக்கோமீட்டர் அளவு கொண்ட நேரியல் சமச்சீர்மைய அமைப்பைக் கொண்டுள்ளது.[1] பிணைப்பு வலிமை 155 கி.யூல்/மோல் என்ற அளவைக்காட்டிலும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[2] அணுக்கள் ஒரு 3-மைய 4-எலக்ட்ரான் பிணைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக மூலக்கூற்று சுற்றுப்பாதை கோட்பாடு தெரிவிக்கிறது.[3]

வினைகள்[தொகு]

பொட்டாசியம் பைபுளோரைடு, அமோனியம் பைபுளோரைடு போன்ற உப்புகள் புளோரைடு உப்புகளை ஐதரோபுளோரிக் அமிலத்துடன் வினைபுரியச் செய்து தயாரிக்கப்படுகின்றன.

MF + HF → M(HF2)   M = K+ or NH+
4

பொட்டாசியம் பைபுளோரைடு இரண்டாவது சமமான ஐதரசன் புளோரைடை இணைக்கிறது:[4]

K(HF2) + HF → K(H2F3)  

இவ்வுப்புகள் சூடுபடுத்தப்பட்டால் ஐதரசன் புளோரைடு விடுவிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Denne, W.A.; Mackay, M.F. (1971). "Crystal structure of p-toluidinium bifluoride". Journal of Crystal and Molecular Structure 1 (5): 311–318. doi:10.1007/BF01200805. 
  2. Emsley, J. (1980). "Very Strong Hydrogen Bonds". Chemical Society Reviews 9: 91–124. doi:10.1039/CS9800900091. https://archive.org/details/sim_chemical-society-great-britain-chemical-society-reviews_1980_9_1/page/91. 
  3. Pimentel, G. C. The Bonding of Trihalide and Bifluoride Ions by the Molecular Orbital Method. J. Chem. Phys. 1951, 19, 446-448. எஆசு:10.1063/1.1748245
  4. Aigueperse, Jean; Mollard, Paul; Devilliers, Didier; Chemla, Marius; Faron, Robert; Romano, René; Cuer, Jean Pierre (2005), "Fluorine Compounds, Inorganic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a11_307
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைபுளோரைடு&oldid=3521382" இலிருந்து மீள்விக்கப்பட்டது