உள்ளடக்கத்துக்குச் செல்

பைகி நடனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பைகி நடனம் (Paiki dance) பைங்கி மற்றும் பைகா என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் சார்க்கண்டு, சத்தீசுகர் மற்றும் ஒடிசாவின் சோட்டானக்பூர் பீடபூமி பகுதியின் சதானி நாக்புரி தற்காப்பு நாட்டுப்புற நடனம் ஆகும்.[1][2][3][4] இந்நடனத்தின் போது, மக்கள் வேட்டி, மயில் இறகுகள் கொண்ட தலைப்பாகை அணிவார்கள். இவர்கள் வலது கையில் வாளையும், இடது கையில் கேடயத்தையும் ஏந்தியபடி நாகரா, தக், செனாய் மற்றும் நரசிங்கின் இசைக்கருவிகளுக்கு ஏற்ப நடனமாடுகிறார்கள்.[3][5] இதில் ஆண்களே நடனமாடுவார்கள். இதில் ஆண்களின் வீரம் பிரதிபலிக்கிறது. பைகி நடனம் திருமணம் மற்றும் பிற விழாக்களில் நிகழ்த்தப்படுகிறது.[6][7] இடைக்காலத்தில் பாய்க் என்பது இடைக்காலத்தில் தரைப்படை வீரர்களைக் குறித்தது.[5][6] இந்நடனம் முதன்மையாக சோட்டா நாக்பூரில் நாகவன்ஷி வம்சத்தின் ஆட்சியின் போது தரைப்படை வீரர்களாக இருந்த ரௌதியாக்களால் நிகழ்த்தப்பட்டது.[1] இது குந்தி மற்றும் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் சில முண்டா பழங்குடியினரால் நிகழ்த்தப்படுகிறது.[8][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "बख्तर साय मुंडल सिंह के बताए राह पर चलें". https://www.bhaskar.com/jharkhand/gumla/news/go-on-the-trail-as-told-by-saqar-mundal-singh-062023-4307550.html. 
  2. Dance in India: An Annotated Guide to Source Materials. பார்க்கப்பட்ட நாள் 30 September 2022.
  3. 3.0 3.1 Jharkhand General Knowledge 2022. பார்க்கப்பட்ட நாள் 30 September 2022.
  4. Jharkhand Digdarshan. பார்க்கப்பட்ட நாள் 3 November 2022.
  5. 5.0 5.1 Ranjit Biswas (2020). "Military Technology of Medieval India -Special Emphasis on Prior of the Mughal Empire". academia.edu. பார்க்கப்பட்ட நாள் 30 September 2022.
  6. 6.0 6.1 "Folk Dances of Jharkhand – True Essence of Folk Culture". caleidoscope. பார்க்கப்பட்ட நாள் 30 September 2022.
  7. "आदिवासी नृत्य महोत्सव में झारखंड की गूंज, पाइका लोक नृत्य की शानदार प्रस्तुति". etvbharat. 28 December 2019. பார்க்கப்பட்ட நாள் 30 September 2022.
  8. "खूंटी : खूंटी की पाइका नृत्य का रूस ने माना था लोहा". https://www.livehindustan.com/jharkhand/ranchi/story-peg-russia-accepted-the-iron-of-peg-39-s-paika-dance-6115470.html. 
  9. N, Eshani; y. "Paika Dance of the Munda Tribe" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைகி_நடனம்&oldid=3672164" இலிருந்து மீள்விக்கப்பட்டது