உள்ளடக்கத்துக்குச் செல்

பேராசிரியர் (யாப்பருங்கல விருத்தி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாப்பருங்கலம் என்னும் யாப்பிலக்கணம் பற்றிய நூலுக்கு விருத்தியுரை ஒன்று உண்டு. அதனை யாப்பருங்க விருத்தி என்றே குறிப்பிடுவர். அந்த நூலில் சில மேற்கோள்கள் பேராசிரியர் என்னும் ஒருவர் பெயரைச் சுட்டுகின்றன.

  • பிறைநெடுமுடிக் கறைமிடற்றனார் பெயர் மகிழ்ந்த பேராசிரியர்
  • நீர் மலிந்த வார்சடையோன் பேர் மகிழ்த போராசிரியர்
  • பெண்ணொரு பாகன் பெயர் பகிழ்ந்த பேராசிரியர்
  • காமவேளைக் கறுத்த புத்தேள் நாமம் தாங்கிய நல்லாசிரியர்

என்று இவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]

நீர் மலிந்த வார்சடையோன் பேர் மகிழ்த போராசிரியர்

இலக்கணப் பாடல் எடுத்துக்காட்டு

மூவடி ஆகியும் நாலடி ஆகியும்

பாவடி வீழ்ந்து பாடலுள் நடந்தும்
கடிவரைவு இலவாய் அடிதொறும் தனிச்சொல்
திருத்தகு நிலைய விருத்தம் ஆகும் [2]

கருவிநூல்

[தொகு]
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

[தொகு]
  1. இவரது பெயர் வரும் சில இடங்களில் மயேச்சுரர் என்று வேறு பாடபேதங்களும் காட்டப்பட்டுள்ளன. மயேச்சுவரம் என்னும் யாப்பிலக்கணம் இயற்றிய புலவர் மயேச்சுரர். இவர் 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். இந்தப் பேராசிரியர் 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உரையாசிரியர் என மு. அருணாசலம் தெளிவுபடுத்துகிறார்.
  2. அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 205