உள்ளடக்கத்துக்குச் செல்

பேபாகன்

ஆள்கூறுகள்: 30°35′45″N 50°14′30″E / 30.59583°N 50.24167°E / 30.59583; 50.24167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Behbahan
بهبهان
Behbahan is located in ஈரான்
Behbahan
Behbahan
ஆள்கூறுகள்: 30°35′45″N 50°14′30″E / 30.59583°N 50.24167°E / 30.59583; 50.24167
நாடுஈரான்
மாகாணம்Khuzestan
மண்டலம்Behbahan
பாக்ச்சுCentral
மக்கள்தொகை
 (2016 Census)
 • நகர்ப்புறம்
1,22,604 [1]
நேர வலயம்ஒசநே+3:30 (IRST)
 • கோடை (பசேநே)ஒசநே+4:30 (IRDT)

பேபாகன் (Behbahan, பாரசீக மொழி: بهبهان‎, பிற பெயர்கள் : Behbahān, Behbehān)[2] என்ற இந்த நகரம், ஈரானின் கூசத்தான் மாகாணத்தின் பேபாகன் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். 1937 ஆம் ஆண்டு, இந்த நகராட்சி தோற்றுவிக்கப்பட்டது.

தகவற்பெட்டி விவரம்

[தொகு]
ஈரானின் 31 மாகாணங்கள்
கூசித்தான் மாவட்டங்கள்

ஆசியக் கண்டத்தின், மேற்குப் பகுதியில்[3][4], பதினெட்டு மத்திய கிழக்கு நாடுகள்[5][6] பரப்பளவில் இரண்டாவது பெரிய நாடக இருக்கும் நாடானது, ஈரான் நிலப்பரப்பானது, பல்வேறு நில ஆட்சிக்குரிய அரசுப் பணிகளுக்காக, முப்பத்தொரு மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.[7] அதில் இருக்கும் ஒரு மாகாணத்தின் பெயர், கூசித்தான் மாகாணம் ஆகும். இம் மாகாணத்தில் மட்டும், 26 கவுன்டிகள் என்று அழைக்கப்படும், தமிழகத்தின் மாவட்டங்கள் போன்ற ஆட்சி அமைப்பு உள்ளன. இந்த இருபத்தியாறு மாவட்டங்களில் ஒன்றான, பேபாகன் கவுன்டி / மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தின் தலைநகரமாக, இந்த நகரம் செயற்படுகிறது.

மக்கள் தொகை

[தொகு]

2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகரத்தின் மக்கள் தொகை 122,604 நபர்களைக் கொண்டிருந்தது. இதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட, அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அதாவது 2011 ஆம் ஆண்டு, 107,412 நபர்கள், இந்நகரத்தில் வாழ்ந்திருந்தனர். தற்பொழுது உள்ள மக்கள் தொகை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இந்நகரத்தின் மக்கள்தொகை அடர்வு +14.14% அதிகரித்துள்ளது.

காலநிலை

[தொகு]

பேபாகனின் காலநிலையானது, கோப்பன் காலநிலை வகைப்பாட்டின் படி, வெப்பமான அரை வறண்ட காலநிலை உள்ளது . இந்த நகரத்தின் காலநிலையானது ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியாகவே இருக்கும். அரிதாகவே மாறுபடும் தன்மைக் கொண்டதாகும். இந்நகரம் பெரும்பாலும் மிகவும் சூடான பகல் நாட்களும், குளிர்ந்த இரவுகளுடனும், பாலைவனம் போன்ற சூழ்நிலை நிலவுகிறது.

தட்பவெப்ப நிலைத் தகவல், Behbahan
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 17.0
(62.6)
18.2
(64.8)
20.1
(68.2)
28.1
(82.6)
32.9
(91.2)
39.5
(103.1)
42.4
(108.3)
43.7
(110.7)
42.2
(108)
35.0
(95)
27.2
(81)
20.5
(68.9)
30.57
(87.02)
தாழ் சராசரி °C (°F) 6.8
(44.2)
7.5
(45.5)
8.5
(47.3)
15.8
(60.4)
19.3
(66.7)
24.9
(76.8)
28.3
(82.9)
28.8
(83.8)
26.2
(79.2)
19.9
(67.8)
14.8
(58.6)
9.9
(49.8)
17.56
(63.61)
பொழிவு mm (inches) 54
(2.13)
41
(1.61)
50
(1.97)
11
(0.43)
5
(0.2)
0
(0)
0
(0)
5
(0.2)
0
(0)
0
(0)
43
(1.69)
116
(4.57)
325
(12.8)
ஆதாரம்: Climate-data.org

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.amar.org.ir/english
  2. பேபாகன் ஐ GEOnet Names Server இல் என்ற இணைப்பில் காணலாம்.
  3. ""CESWW" – Definition of Central Eurasia". Cesww.fas.harvard.edu. Archived from the original on 5 August 2010. பார்க்கப்பட்ட நாள் 1 August 2010.
  4. "Iran Guide". National Geographic. 14 June 2013. Archived from the original on 12 December 2009. பார்க்கப்பட்ட நாள் 21 June 2013.
  5. Beaumont, Blake & Wagstaff 1988, ப. 16.
  6. Koppes, CR (1976). "Captain Mahan, General Gordon and the origin of the term "Middle East"". Middle East Studies 12: 95–98. doi:10.1080/00263207608700307. 
  7. Gwillim Law, Statoids website. "Provinces of Iran". பார்க்கப்பட்ட நாள் 22 நவம்பர் 2019.


வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேபாகன்&oldid=3577910" இலிருந்து மீள்விக்கப்பட்டது