உள்ளடக்கத்துக்குச் செல்

பேன்டி கரிச்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Fanti drongo
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. atactus
இருசொற் பெயரீடு
Dicrurus atactus
Oberholser, 1899
வேறு பெயர்கள்

Dicrurus modestus atactus

பேன்டி கரிச்சான் (Fanti drongo)(டைகுருசு அட்டாக்டசு) என்பது டைக்ரூரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது சியரா லியோனி முதல் தென்மேற்கு நைஜீரியா வரை துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது.

1899ஆம் ஆண்டில் கானாவின் பேன்டி மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரியிலிருந்து அமெரிக்கப் பறவையியலாளர் ஹாரி சி. ஓபர்ஹோல்சாரால் பேன்டி கரிச்சான் விவரிக்கப்பட்டது. இவர் இதை வெல்வெட்- மேண்டட் கரிச்சான் (டைகுருசு மாடசுடசு) துணையினமாகக் கருதினார். டைகுருசு மாடசுடசு அட்டாக்டசு என்ற முச்சொற் பெயரினை அறிமுகப்படுத்தினார்.[1] அட்டாக்டசு என்பது பண்டைக் கிரேக்க சொல்லான ατακτος அட்டாக்டோசு என்பதிலிருந்து ("ஒழுங்கற்ற" அல்லது "சட்டமற்ற") வந்தது.[2] 2018-ல் வெளியிடப்பட்ட ஒரு மூலக்கூறு வகைப்பாட்டாய்வின் முடிவுகளின் அடிப்படையில், இது இப்போது ஒரு தனிச் சிற்றினமாகக் கருதப்படுகிறது.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Oberholser, Harry C. (1899). "A list of birds collected by Mr R.P. Currie in Liberia". Proceedings of the United States National Museum 22 (1182): 25–37 [35]. doi:10.5479/si.00963801.22-1182.25. https://biodiversitylibrary.org/page/32020720. 
  2. Jobling, J.A. (2019). del Hoyo, J.; Elliott, A.; Sargatal, J.; Christie, D.A.; de Juana, E. (eds.). "Key to Scientific Names in Ornithology". Handbook of the Birds of the World Alive. Lynx Edicions. பார்க்கப்பட்ட நாள் 4 February 2019.
  3. Fuchs, J.; De Swardt, D.H.; Oatley, G.; Fjeldså, J.; Bowie, R.C.K. (2018). "Habitat-driven diversification, hybridization and cryptic diversity in the Fork-tailed Drongo (Passeriformes: Dicruridae: Dicrurus adsimilis)". Zoologica Scripta 47 (3): 266–284. doi:10.1111/zsc.12274. 
  4. Gill, Frank; Donsker, David, eds. (2019). "Orioles, drongos, fantails". World Bird List Version 9.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 3 February 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேன்டி_கரிச்சான்&oldid=3441794" இலிருந்து மீள்விக்கப்பட்டது