உள்ளடக்கத்துக்குச் செல்

பேத் வில்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெத் வில்மேன்
Beth Willman
Photo of Willman outdoors
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
பணியிடங்கள்
  • ஆர்வார்டு சுமித்சோனியன் வானியற்பியல் மையம்
கல்வி கற்ற இடங்கள்
ஆய்வேடுதீர்க்கப்பட்ட பால்வெளி குள்ள விண்மீன் செயற்கைக்கோள்களுக்கான ஆய்வு (2003) (2003)
ஆய்வு நெறியாளர்ஜூலியானே தால்கந்தோன்

பேத் வில்மன் (Beth Willman) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் பேரியல் அளக்கைத் தொலைநோக்கியின் இணை இயக்குநரும் ஆவார். இவர் முன்பு ஆர்வார்டு கல்லுரியில் வானியல் இணைப் பேராசிரியராக இருந்துள்ளார்.[1]

கல்வி

[தொகு]

இவர் வானியற்பியலில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பிறகு இவர் வாழ்சிங்டன் பலகலைக்கழகத்தில் வானியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் அண்டவியல், துகள் இயற்பியல் மையத்தில் ஜேம்சு ஆர்த்தர் அய்வுறுப்பினராக இருந்துள்ளார்.இவர் ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையத்தின் கிளே ஆய்வுறுப்பினராகவும் இருந்துள்ளார்.

ஆராய்ச்சி

[தொகு]

இவர் தன் ஆய்வை அண்டவியலில் மேற்கொண்டார். இவர் அறியப்பட்ட புடவியில் பொலிவுகுன்றிய பால்வெளிகளை ஆய்வு செய்தார்.[2][3] இவர் தன் முதுமுனைவர் ஆய்வின்போது கண்டுபிடித்த வில்மன் 1 பால்வெளி இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.linkedin.com/in/beth-willman-8a7a1b11a/[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Spitz, Anna (October 2009). "Beth Willman—Enjoying New Challenges at LSST and in Philadelphia, PA". LSST E-News. Archived from the original on 4 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 4 February 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Haverford College—Beth Willman". Haverford.edu. Haverford College. Archived from the original on 29 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 4 February 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Finkbeiner, Ann (17 August 2012). "Beth Willman Really Does Have A Galaxy". The Awl. Archived from the original on 4 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 4 February 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேத்_வில்மன்&oldid=3978281" இலிருந்து மீள்விக்கப்பட்டது