உள்ளடக்கத்துக்குச் செல்

பேத்தாழை பொதுநூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேத்தாழை பொதுநூலகம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் முதல் முதலமைச்சராக பதவி வகித்த [[சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் முயற்சியினால் ஏறத்தாழ 5 கோடிகளுக்கு மேல் செலவிடப்பட்டு உருவாக்கப்பட்ட நூலகம். மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக முக்கியமான நூலகங்களில் பேத்தாழை பொதுநூலகமும் ஒன்றாகும். 2011.12.10 அன்று கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. இந்நூலகம் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்நூலகம் தரம்-2 நூலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

இந்நூலகத்தில் ஏறத்தாழ பதினைந்தாயிரத்துக்கு மேற்பட்ட நூல்கள் உள்ளன. சிறுவர் பகுதி, இரவல் பகுதி, உசாத்துணை பகுதி, பத்திரிகை சஞ்சிகைப்பகுதி,கணினிப் பகுதி, அருங்காட்சியகம் எனப் பல வசதிகளைக் கொண்ட இந்நூலகம் காலை 8.00 முதல் மாலை 8.30 மணிவரை அனைத்து பகுதிகளும், பண்டிகை நாட்கள் தவிர்ந்த அனைத்து நாட்களிலும் திறக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. கிழக்கு மாகாணத்தின் முன்னோடி நூலகமாக அமைய வேண்டும் என்கின்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட இந்நூலகத்தில் மாகாணத்தின் வேறெந்த நூலகங்களிலும் இல்லாதவாறு உலக புத்தக தினம், தேசிய வாசிப்பு மாதம் போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகின்றன. நூலகம் திறக்கப்பட்டு தற்போது நான்கு வருடங்கள் நிறைவடையவுள்ள தருணத்தில் ஏறத்தாழ 1700க்கு மேற்பட்ட வாசகர்களை அங்கத்தவர்களாகக் கொண்டு இந்நூலகம் இயங்கி வருகிறது.

நூலகத்தின் பகுதிகள்[தொகு]

நூலகத்தின் கீழ்தளத்தில் வரவேற்பாளர் பகுதி, பத்திரிகைப் பகுதி, சிறுவர் பகுதி, இரவல் வழங்கும் பகுதி என்பன அமைந்திருக்க மேல்தளத்தில் உசாத்துணைப் பகுதி, அருங்காட்சியகம், இணையப்பாவனைப் பகுதி போன்றன அமைந்துள்ளன.

நூலகம் பெற்றுள்ள விருதுகள்[தொகு]

2012ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி திணைக்களத்தின் சிறந்த தொழினுட்ப கட்டமைப்பைக் கொண்ட நூலகம் என்ற விருதினைப் பெற்ற இந்நூலகம்,2013ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை நூலகங்களுக்கான தரப்படுத்தல் போட்டியில் பிரதேச சபபைகளின்கீழ் இயங்கும் நூலக மட்டத்தில் தேசிய ரீதியாக முதலாம் இடத்தினைப் பெற்று, ஜனாதிபதி விருதும் பெற்றது.

நூலகம் காலாண்டு சஞ்சிகை[தொகு]

தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழி நூல்களையும், வாசகர்களையும் கொண்ட இந்நூலகத்திலிருந்து “நூலகம்“ என்கின்ற பெயரில் காலாண்டு சஞ்சிகையும் வெளிவந்து கொண்டிருக்கிறது. கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் கீழ் இந்நூலகம் செயற்பட்டு வருகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேத்தாழை_பொதுநூலகம்&oldid=3597491" இலிருந்து மீள்விக்கப்பட்டது