உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மூன்றாம் ராமா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றாம் ராமா என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

கூகுள் மொழிபெயர்ப்பில் மேம்பாடு தேவை

[தொகு]

@Balu1967, Parvathisri, Balajijagadesh, and Info-farmer: இக்கட்டுரையில் கூகுள் மொழிபெயர்ப்பு பயன்படுத்தி இருக்கிறீர்கள். அதை இன்னும் சீராக்கி எழுதிடத் தேவை உள்ளது. //ஆனால் அவர் தனது மனைவிகளில் எவரையும் ராணியாக வளர்க்கவில்லை.// போன்ற மொழிபெயர்ப்பு தவறு. //மரபுகளின்படி அவரது வாரிசு அசாதாரணமானது.// இது ஏன் அசாதாரணமானது என்ற தகவல் ஆங்கில விக்கியில் உள்ளது. தமிழில் இல்லை. இப்படி முழுமையான தகவல் இல்லாததால் கட்டுரையைப் புரிந்து கொள்ள கடினமாக உள்ளது. மரபுகளின்படி அவரது வாரிசு அசாதாரணமானது என்ற சொற்றொடரே பிழையான பொருள் தருவதாக அமைந்துள்ளது. இது போல் தங்களுடைய மற்ற கட்டுரைகளிலும் மேம்பாடு தேவை எனில் அவற்றைக் கவனித்துத் திருத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில், இவற்றை இப்போது திருத்தாமல் விட்டால் அப்படியே தங்கி விடும் வாய்ப்புகள் அதிகம். நடுவர்கள் அனைத்துக் கட்டுரைகளிலும் மொழிபெயர்ப்புத் தரத்தை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 18:28, 20 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

@Parvathisri, Balu1967, and Info-farmer: புரிதலுக்கு நன்றி. Fountain கருவியைப் போட்டியாளர் தவிர வேறு யாரும் பார்க்க மாட்டார்கள். இங்கு பேச்சுப் பக்கத்தில் இட்டால் மற்ற பயனர்களும் கவனித்து உதவலாம். 1000க்கு மேற்பட்ட அனைத்துப் போட்டிக் கட்டுரைகளிலும் ஆலோசனைகள் வழங்க முடியாவிட்டாலும், சில எடுத்துக்காட்டுகளைக் கூறினால், போட்டியாளர்கள் அவற்றைக் கருத்தில் கொண்ட செயல்பட உதவும். நன்றி. --இரவி (பேச்சு) 09:05, 21 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

மூன்றாம் இராமா கட்டுரை

[தொகு]

வணக்கம் இரவி. தங்களின் கவனிப்பு இன்னும் என்னை கவனத்துடன் செயல்படத் தூண்டுகிறது. மூன்றாம் இராமா கட்டுரையை மேம்படுத்தியுள்ளேன். கவனிக்கவும். நன்றி--பாலசுப்ரமணியன் (பேச்சு) 04:13, 21 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மூன்றாம்_ராமா&oldid=4074912" இலிருந்து மீள்விக்கப்பட்டது