உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மு. சி. பூரணலிங்கம் பிள்ளை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மு. சி. பூரணலிங்கம் பிள்ளை என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மு. சி. பூரணலிங்கம் பிள்ளை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

கருத்து[தொகு]

சிறீதரன் கனகு, இந்தத் தமிழ்ப்பெரியாரைப் பற்றிய இக்கட்டுரை முதற்பக்கக் கட்டுரையாக இருப்பதை அறிந்து மகிழ்கிறேன். 1902ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழை நீக்கிவிட்டு சமசுக்கிருதத்தையும் பாடமாக வைக்க வேண்டும் என்று சிலர் முயன்றிருக்கின்றனர். அப்போது பூரணலிங்கம் அவர்கள் இதனைக் கடுமையாக எதிர்த்தார் மட்டுமில்லை, அன்றே (அக்காலத்தே) சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை என்று ஒன்று நிறுவி நிலைப்பதற்குப் பெரும் பங்கு அளித்தவர். 1885ஆம் ஆண்டு அர்சன் பிரபு என்பாரிடம் சமசுக்கிருதத்தைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்தனர். "அப்போது பரிதிமாற்கலைஞரோடு சேர்ந்து பூரணலிங்கனார் செம்மொழியாக்கும் தகுதி தமிழுக்கே முழுமையாக உள்ளது என வாதிட்டார்" (இச்செய்திகளை மிக நேர்த்தியாக - தெ. மதுசூதனன் என்பார் ஆகத்து 2008 தென்றல் என்னும் இதழில் வெளியிட்டுள்ளார்). மேலும் பல பெருமைகளுக்கு உடையவர் பூரணலிங்கனார். மதுச்சுதனன் கட்டுரையில் கீழ்க்காணும் பத்தியும் எடுத்துரைக்கத் தக்கது.

மனித இனத்தை ஒன்றென அன்பு கொள்ளும் நாகரிகத்தையும் இயற்கையோடு இணைந்து சிந்திக்கும் வாழ்வியல் பண்பாட்டுச் சிந்தனைகளையும் தனித்துவமாக எடுத்துப் பேசினார். தமிழ்மொழி நீண்ட இலக்கண இலக்கிய வளங்களைக் கொண்டு விளங்குவதையும் தொகுத்து அரசுக்கு மனு அளித்தார். தமிழைச் செம்மொழியாக ஆக்க வேண்டிய தேவையை ஊர் ஊராகச் சென்று கருத்துப் பரப்புகை செய்தார். பரிதிமாற் கலைஞர், பூரணலிங்கம் பிள்ளை போன்றோர் இந்தக் கருத்து நிலை முகிழ்ப்பில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்து செயற்பட்டார்கள். இதன் விளைவாகத்தான் அவரவர் தாய்மொழியையே பாடமாக வைக்கும் ஆணையை அரசு பிறப்பித்தது.

இவரைப் பற்றி செம்மொழி மாநாட்டில் அதிகம் யாரும் பேசாதது ஒரு வருத்தமே. இவரைப் பற்றி இன்னும் சில பின்னர் பகிர்கிறேன்.

--செல்வா 15:06, 25 ஜூலை 2010 (UTC)