உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மினாங்கபாவ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மினாங்கபாவ் என்பதுதான் சரியான வழக்குச் சொல். அதில் எந்த மாற்றமும் இல்லை. மலேசியாவில் தமிழ், மலாய்ப் பள்ளிகளில் 20 ஆண்டுகள் ஆசிரியராக இருந்த அனுபவம் எனக்கு இருக்கிறது. பிள்ளைகளுக்கு வரலாறு போதிக்கும் போது மினாங்கபாவ் என்றுதான் போதிக்கிறோம். மினாங்கபாவு என்று யாரும் சொல்வது கிடையாது. மினாங்கபாவு என்று சொன்னால், யாருக்கும் புரியாது. தயவு செய்து மாற்றம் செய்ய வேண்டாம்.

இங்கே மலேசியாவில் மலாய்ச் சொற்களை மக்கள் எப்படி உச்சரிக்கிறார்களோ, அப்படியே தமிழிலும் விக்கிப்பீடியாவிலும் பயன்படுத்துவோம். இந்தோனேசிய மொழியிலும் மினாங்கபாவு என்று உச்சரிப்பு கிடையாது என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மினாங்கபாவ் தான் சரியான உச்சரிப்பு.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்பேச்சு --ksmuthukrishnan 03:48, 21 சனவரி 2015 (UTC)[பதிலளி]

நீங்கள் சொல்வது பிழை, முத்துக் கிருஷ்ணன். நான் இந்தோனேசியாவில் வசிக்கிறேன். இந்தோனேசிய மொழியும் அறிவேன். ஆயினும் நீங்கள் சொல்வது போல் எதுவும் கிடையாது.--பாஹிம் (பேச்சு) 05:22, 21 சனவரி 2015 (UTC)[பதிலளி]

மாற்றங்கள்

[தொகு]
சரி. மலாய் மொழியில்
  • aku - அக்கு - நான்
  • engkau - எங்காவ் - நீ
  • tak tahu - தாக் தாவ் - தெரியாது
  • bangau - பாங்காவ் - கொக்கு
  • wau - வாவ் - பட்டம்
  • mahu - மாவு - வேண்டும்
  • kalau - கலாவ் - இருந்தால்
  • beliau - பெலியாவ் - அவர்
  • tawau - தவாவ் - சபாவில் உள்ள நகரம்
  • pulau - பூலாவ் - தீவு

ஆக, பெயர்களை மாற்ற வேண்டும் என்றால் இந்த சொற்களுக்குப் பின்னால் வு எனும் எழுத்து வர வேண்டுமே. வழக்கத்திற்கு விட்டுவிடுவோம்.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்பேச்சு --ksmuthukrishnan 09:55, 21 சனவரி 2015 (UTC)[பதிலளி]

வு அல்ல. உண்மையில் உ தான் வருகிறது. ஆயினும் தமிழில் சொல்லின் இறுதியில் உயிரெழுத்து வரும் வழக்கம் குறைவாதலின் வு என்பதைப் பயன்படுத்துகிறோம். புரிந்துணர்வுக்கு நன்றி, முத்துக் கிருஷ்ணன்.--பாஹிம் (பேச்சு) 11:53, 21 சனவரி 2015 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மினாங்கபாவ்&oldid=1792257" இலிருந்து மீள்விக்கப்பட்டது