உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மானாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆண்டவர் கவிராயரின் சாபம்

[தொகு]

பனைத் தொழிலாளியின் கருப்பட்டியை ஏமாற்றி எடை போட்டு பணம் சேர்க்கும் வணிகரின் சொத்துகள் நிலைக்காமல் போகும் என்று ஆண்டவர் கவிராயர் என்பவர் எழுதிய செய்யுள் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

நெஞ்சுஎறிய நெடும்பனை ஏறி
இஞ்ச இஞ்ச காச்சி எடைபோட்டார் தன்முதலை
வஞ்ச கபடு செய்யும் மானாட்டாள் தேடும்முதல்
பிஞ்சுக்கும் பிற்கனைக்கும் ஒட்டாது

பொருள்

பனை ஏறும் தொழிலாளி ஒருவர் தனது நெஞ்சு காயம்பட நெடிய பனையை ஏறி பதனீர் இறக்கி அதை அடுப்பில் வைத்து வற்ற வற்றக் காய்ச்சி கருப்பட்டியாக வடிவமைத்து தனது முதலான கருப்பட்டியை எடை வைக்கிறார். அதனை எடைபோடும் வஞ்சக வியாபாரி தவறாக எடை போடுகிறார். அவ்வாறு எடை போட்டு சேர்க்கும் சொத்துக்கள்,அவரது சந்ததியினருக்கும் பின் சந்ததியினருக்கும் நிலைக்காது என்பதாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மானாடு&oldid=1506662" இலிருந்து மீள்விக்கப்பட்டது