உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரையில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகள்:

மருதர்பெரும்பதி ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேய திருப்பதி அமைப்பதற்கு எண்ணிய போது பெருமைக்குரிய அருட்கவி சி.வினாசித்தம்பி அவர்களால் இப்பதிமீது பாடப்பெற்ற முதலாவது பாடல் பின்வருமாறு.

"சிந்தனைக் கரியோனாகிச்
சிவனுருத் தாங்கி இராம
மந்திரமூர்த்தியாகி வருமடி யாருக்கெல்லாம்
பந்தனை நீக்கி வேண்டும்
பலனெலாம் கொடுக்கும் செல்வச்
சுந்தரஆஞ்சனேய
சுவாமியே போற்றி போற்றி....."

ஸ்ரீ சுந்தர ஆஞ்சனேயர் திருவுருவம் , அழகனாய் கோலம் கொண்டு காண்பவர் கண்ணுக்கெல்லாம் கண்கொள்ளா காட்சியாக அமைந்து காணப்படுகின்றது. இத் திருவுருவத்தில் தியானத்தின் மேன்மைக்காக கண்மலா் மூடிக்காணப்படுகின்றது. அத்துடன் அருட்பெரும் கரத்தைக் கூப்பி இதயமேல் அணைவுசெய்து கோலமாம் கோலங்கொண்டு காட்சியளிக்கின்றது. அத்துடன் வடிவுடை மன்னனாகி சிரசின்கண் அழகு முடியும் , மார்பினில் வண்ணக்கோல நறுமண மாலைகளும் அணிந்து காணப்படுகின்றது. ஸ்ரீ சுந்தர ஆஞ்சனேயர் பக்த அடியவனான திரு வ. சிவநேசன் அவர்களின் கலியுகம் காக்கும் செல்வன் எனும் தலைப்பில் அமைந்த பாடல் மூலம் இவ் ஆஞ்சநேயரின் மகிமையை அறிந்து கொள்ளலாம்.

இவ் இராஜ கோபுர அழகை விபரித்து கும்பாபிடேக நாளில் ”எம்குலம் நிமிர்ந்து வாழ . . . ” எனும் துதிப்பாடல் உதயன் பத்திரிகையில் இடம்பெற்றது.

துதிப்பாடல்

[தொகு]

 உருத்திர மூர்த்தம் கொvண்ட சுந்தர ஆஞ்சநேயன்
 தூலமாம் லிங்கமாகிக் கோயிலின் வாசல் முன்னே
 மாமலை போன்ற வண்ணக் கோபுரம் மேலே நின்று
 ஆசியை வழங்கும் காட்சி காண்பவர் மேலோர் தாமே

 இயற்கையின் வனப்புக் கொண்ட தெய்வீகச் சூழல் தன்னில்
 குடியென்ன அமர்ந்த எங்கள் சுந்தர ஆஞ்சநேயன்
 தனெக்கெனக் கோயிலகிக் அற்புதக் கோலத்தோடு
 கோபுரம் மேலே நின்றான் குடிமுழு தாள என்றே

 கோபுரம் லிங்கமாக மருங்கினில் நாதம் சேர
 காண்பவர் மனதில் இராமன் தோற்றமாய் வந்து நிற்க
 கோபுர நடுவில் அனுமன் நின்றிடும் கோலம் காண்போம்

 குடமுழுக்கு காடி ஐயா குடி முழு தாண்டு எங்கள்
 குலமது நிமிர்ந்து வாழ நாட்டினில் அமைதி சேர
 இயற்கையின் அனர்த்தமின்றிக் நோய்பிணி இன்றி வாழ
 ஆசியை வழங்கி எம்மை ஆண்டிடும் ஐயா போற்றி