பேச்சு:மக்புல் ஃபிதா உசைன்
Appearance
சுதாகர்,
“இறையாண்மை” என்பது "sovereignty". உசைன் படம் வரைந்தது இந்து சமயத்தவரின் நம்பிக்கைகளை அவதூறு செய்தது என்பதே குற்றச்சாட்டு; “இறையாண்மைக்கு எதிராகச் செயல்படுவது” என்பது பொதுவாக தேச விரோதச் செயல்கள், தீவிரவாத நடவடிக்கைகள், இந்திய அரசுக்கு எதிரான செயல்பாடுகளைக் குறிக்கும். இங்கு நிகழ்ந்த சர்ச்சை சமய நம்பிக்கைகளை அவமதித்து விட்டார் என்பது. தயவு செய்து “இறையாண்மை எதிராகச் செயல்பட்டார்” என்று தீர்ப்பெழுத வேண்டாம். ஒரு சமயத்தவரின் நம்பிக்கையை அவதூறு செய்வது போன்ற நடவடிக்கை நாட்டின் இறையாண்மைக்கு எதிரான செயல் அல்ல. விக்கியில் குற்றச்சாட்டுகளை மட்டுமே ஆவணப்படுத்தலாம். தீர்ப்பெழுத முடியாது.--சோடாபாட்டில்உரையாடுக 05:25, 10 சூன் 2011 (UTC)