பேச்சு:பூக்கள் பட்டியல்
http://www.tamiloviam.com/unicode/pettagampage.asp?fname=09220503&pfname=Pet-Muchchandhi
'பத்துப் பாட்டு' நூலின் ஒரு பகுதியான 'குறிஞ்சிப் பாட்டு', காதலன், காதலியின் நீண்ட பயணம் ஒன்றைச் சொல்லும் சுவையான புத்தகம். எழுதியவர் கபிலர்.
இந்நூலின் 61வது வரியில் தொடங்கி, 95வது வரிவரையிலான பகுதியில், அந்தக் காலப் பூக்களின் விரிவான பட்டியல் வருகிறது :
உள்ளகம் சிவந்த கண்ணேம் வள்இதழ் ஒண்செங்
- காந்தள்
- ஆம்பல்
- அனிச்சம்,
- தண்கயக் குவளை
- குறிஞ்சி
- வெட்சி
- செங்கோடு வேரி
- தேமா
- மனிச்சிகை
- கூவிளம்
- எரிபுரை எறுழம்
- சுள்ளி
- கூவிரம்
- வடவனம்
- வாகை
- வான்பூங்குடகம்
- எருவை
- செருவிளை மணிப்பூங்குடசம்,
பயினி, வானி, பல்இனர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல்இணர்க் காயா, விரிமலர் ஆவிரை, வேரல், சூரல், குறீஇப்பூளை, குறுநறுங்கண்ணி, குருசிலை, மருதம், விரிபூங்கோங்கம், போங்கம், திலகம், தேங்கமல் பாதிரி, செருத்தி, அதிரல், பெருந்தண் சண்பகம், கரந்தை, குளவி, கடிகமழ் கலிமா, தில்லை, பாலை, கல்இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம், வாழை, வள்ளி, நீள்நறு நெய்தல், தாழை, தளவம், முள்தாட் தாமரை, ஞாழல், மௌவல், நறுந்தாண் கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குழலி, கோடல், கைதை, கொங்குமுதிர் நறுவழை, காஞ்சி, பனிக்குலைக் கள்கமழ் நெய்தல், பாங்கர், மாரவும், பல்பூந் தணக்கம், ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை, அரும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை, பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், தும்பை, துழாஅய், சுடர்பூந் தொன்றி, நந்தி, நறவம், நறும் புன்னாகம், பாரம், பீரம், பைங்குருங்கத்தி, ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை, நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி, மாஇருங்குருத்தும், வேங்கையும்,. பிறவும் ....
இத்தனை பூக்களையும் பார்த்து மயங்கி, அவற்றை ஆசையாகப் பறித்து, மழை கழுவித் தூய்மையாக்கிய பாறையில் குவிப்பதாகக் காட்சி.
Start a discussion about பூக்கள் பட்டியல்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve பூக்கள் பட்டியல்.