பேச்சு:புன்னாடு
பயனர்:Jaivanth கட்டுரையில் ஒவ்வொரு மூன்று சொற்களிலும் ஒரு வரலாறு உள்ளதால் இவற்றுக்கு மேற்கோள்கள் அவசியம். எடுத்துக்காட்டுக்கு
//பின்னர் 16ஆம் நூற்றாண்டில் உம்மத்தூர் உடையர்கள் சத்தியமங்கலம், பவானி, ஈரோட்டை ஆண்டபோது, தெற்காணாம்பி / தெற்காணாம்பை நாடு என்ற புன்னாட்டின் பெரும்பகுதி, மீண்டும் கொங்கதேசத்தொடு இணைக்கப்பட்டு, அதன்பின் மீண்டும் பிரிக்கப்பட்டது.//
இதில் பின்வரும் கருத்துகளுக்கு நூல் சான்றுகள் வேண்டும்.
- உம்மாத்தூர் உடையார்களுக்கு கீழிருந்த பகுதிகளுக்கு.
- தெற்காணாம்பை நாடு என்ற புன்னாட்டின் பெரும்பகுதி என்பதற்கு.
- மீண்டும் கொங்கதேசத்தொடு இணைக்கப்பட்டதற்கு.
- மீண்டும் பிரிக்கப்பட்டதற்கு.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:32, 26 செப்டம்பர் 2014 (UTC)
பயனர்:Jaivanth ஒருவேளை நீங்கள் எழுதியது அனைத்தும் ஒரே நூலில் இருந்து எடுக்கப்பட்டிருந்தால் அதை மூலநூல் என்பதின் கீழ் தரலாம். இது போல் அகரமேறிய மெய் முறைமை#மூலம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:39, 26 செப்டம்பர் 2014 (UTC)
தென்காசி சுப்பிரமணியன் சங்கம் மருவிய காலத்தில் புன்னாடு கொங்கதேச பகுதியாக இருந்தது, உம்மத்தூர் உடையார்களுக்கு கீழ் இருந்தது, தெற்காணாம்பை நாடு புன்னாட்டின் பெரும்பகுதி என்பதற்கு இது அனைத்தும் South Indian Inscriptions, A.R.Ep, Epigraphia Carnatica , Epigrahia Indica , தமிழக தொல்லியல் துரையின் நூல்கள் போன்ற தரமான நூல்களில் முதன்மை ஆதாரங்களோடு இருக்கின்றன. விரைவில் அதற்கான இணைப்புகளையும் அளிக்கின்றேன். நன்றி --Jaivanth (பேச்சு) 19:13, 26 செப்டம்பர் 2014 (UTC)
நல்லது. இக்கருவியை சேமித்து வைத்துக்கொண்டால் மேற்கோள் கொடுக்க எளிதாக இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:15, 26 செப்டம்பர் 2014 (UTC)
தென்காசி சுப்பிரமணியன் சங்ககாலத்தில் மிஞிலி - ஆய் எயினன் போரிட்ட இதுவாகவும் இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.
அதற்கு காரணம், இப்படி இருதமையால்தான் துளு / கொண்கான நன்னன் தன எல்லை அருகே உள்ள புன்னாட்டை (பூழினாட்டின் பாகத்தை) எழிதில் பிடித்திருக்க முடியும். இதனை அறிந்த ஆய் எயினன், கொண்கான நன்னனுக்கு பாடம் புகட்ட சென்றிருக்க வேண்டும். இதனை பற்றி தெளிவாக யாராவது எழுதியிருப்பார்களேயானால், அது உங்களுக்கு தெரிந்திருந்தால் எனக்கு தெரியப்படுத்தவும். மேலும் குடநாடு என்பது கொங்கத்தை தவிர்த்து, துளு & குட்ட நாட்டின் இடையில் உள்ள பூழிநாட்டை மட்டும் குறிப்பதாகக்கூட இருந்திருக்கலாம். அதனை எருமை ஊரன் ஆண்டிருக்கலாம்.
ஆனால்,
இந்த வாகை ஊர் இருக்கும் இடம் குடமலை கிழக்கே இருக்கும் புன்னாடாக தெரிங்கின்றது. இந்த ஊரைப் பசும்பூண் பாண்டியன் ஏவலால் அவனது படைத்தலைவன் அதிகன் தாக்கினான். போரில் அதிகன் கொல்லப்பட்டான். அவனது யானையும் கொல்லப்பட்டது. அதிகன் கொல்லப்பட்டதைக் கொங்கர் கொண்டாடி மகிழ்ந்தனர். அப்படிஎன்றால் என்றால், இந்த வாகை நிச்சயம் குடமலை கிழக்கே இருக்கும் புன்னாடாக இருக்க வேண்டும்.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88_(%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D)
இதே புன்னாட்டில்தான் கடம்பன் பெருவாயில் நாடும், இருந்திருக்க வேண்டும். அந்த கடம்ப நன்னனைத்தான் நார்முடிச்சேரல் வென்றது. இவன் மிஞிலியோடு போரிட்ட கொண்கான நன்னன் அல்ல.
இந்த பாரம் எனும் ஊர்தான் துளு நாடு & பூழி நாட்டின் எல்லையாகவும், துளு நாட்டு பகுதியாகவும் இருந்திருக்கும். https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D)
புன்னாடு குடமலைக்கு கிழக்கில்தான் என்பதாகு இன்னமும் சில ஆதாரங்கள் உண்டு
- வேள் மகளிரும், கோசரான நன்னனும் மோதிக்கொண்டு, அகுதை எனும் வெளிர் குடியினன், நன்னனை வீழ்த்தி, வாகை நகரை வேளிருக்கே மீட்டு தந்ததும் பார்க்கப்படவேண்டும். இதில், வேளிர் பூமியான புன்னாட்டில் கோசர் நன்னன் மூலம் உள்ளே குடிபுகுந்துவிட்டது விளங்குகின்றது
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88
- பாண்டியன் பக்கம் சாய்ந்த அதிகன், தனக்கு அகுகாமையில் இருக்கும் கொண்கான நன்னன் பிடித்த வாகை நகரான புன்னாட்டை தாக்கியபோது கொல்லப்பட்டதை கொங்கர் கொண்டாடியதும், புன்னாடு தகடூருக்கு அருகில் இருந்ததை உறுதி செய்கின்றது. இதைவிட, கொல்லப்பட்ட அதிகனை பாழியில் பேய்த்தெய்வத்துக்கு (காளிக்கு) உயிர்ப்பலி கொடுத்தது, புன்னாடுக்கும் துளுநாட்டுக்கும் இடையில் முறையான வழிதடம் இருந்ததை நிரூபிப்பதாய் உள்ளது
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF
--Jaivanth (பேச்சு) 07:38, 27 செப்டம்பர் 2014 (UTC)
Start a discussion about புன்னாடு
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve புன்னாடு.