பேச்சு:பண்டிகை
Appearance
பண்டிகையும் திருவிழாவும் ஒன்றுதானே என வினவப்பட்டுள்ளது. பொதுவழக்கில் இவை இரண்டும் வெவ்வேறு பொருளில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. பண்டிகை என்பது தனிநபர் சார்ந்த சமயவிழாவாகவும் திருவிழா என்பது ஊர் அல்லது சமூகம் பங்கேற்கும் சமயவிழாவாகவும் கொள்ளப்படுகின்றன. பண்டிகைகள் வீடுகளிலும் திருவிழாக்கள் வீதிகளிலும் கொண்டாடப்படுகின்றன. --மணியன் (பேச்சு) 11:59, 5 அக்டோபர் 2013 (UTC) பண்டிகை என்ற சொல்லுக்கு இணையாக திருநாள் பயன்படுத்தப்படுகிறது. காட்டாக தீபாவளிப் பண்டிகை -->தீபத் திருநாள்..--மணியன் (பேச்சு) 12:24, 5 அக்டோபர் 2013 (UTC)
- நண்பரே, நீங்கள் கூறியவாறு பண்டிகை என்பது தனிநபர் சார்ந்த சமயவிழா என்றால் அதனை எவ்வாறு இனம் காண்பது. உதாரணத்திற்கு தீபத் திருநாளைப் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். நரகாசுரன் என்ற தனிநபரின் மரணத்தினை கொண்டாடும் திருவிழா என்று வைத்துக் கொண்டாலும் ஏறத்தாள அனைத்து விழாக்களும் இதன் வரையரையிலேயே வருமே. சிவன் என்ற தனிநபருக்கான விழாக்கள் என்பதைப் போன்று பொருள் கொள்ளப்பட்டால் எந்த விழாவும் திருவிழாவாக வராதே. எவ்வாறு இவற்றினை தனித்தனியாக பகுப்பது என்று விளக்க வேண்டுகிறேன்.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:32, 31 அக்டோபர் 2013 (UTC)
Religion
[தொகு]பண்டிகை 2402:4000:10C0:7A8C:2:1:F54:E45D 09:27, 23 செப்டம்பர் 2022 (UTC)
Religion
[தொகு]புது வருட பிறப்பு 2402:4000:10C0:7A8C:2:1:F54:E45D 09:29, 23 செப்டம்பர் 2022 (UTC)