பேச்சு:பட்டாம்பூச்சி விளைவு
குறிப்புகள்
[தொகு]--Natkeeran 21:22, 10 ஜூலை 2008 (UTC)
பிற குறிப்புகள்
[தொகு]பட்டாம்பூச்சி விளைவு(Butterfly Effect):
ஒரே ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பு, சூழ்நிலையில் மிகச்சிறிய மாறுதலை ஏற்படுத்துகிறது. சிறிது காலம் பொறுத்து சூழ்நிலையில் நிகழ்வது, நிகழ்ந்திருக்க வேண்டியதுடன் வேறுபடுகிறது. எனவே, ஒரு மாதத்தில் இந்தோனேசிய கடற்கரையை நாசமாக்கவிருந்த சுழற்காற்று நிகழ்வதில்லை.. அல்லது, எதிர்பாராமல் நிகழ்ந்துவிடுகிறது. ஒரு சின்ன நிகழ்வின் தொடர்விளைவு உலகளாவியதாக இருக்கும் என்பதே அந்தக் கோட்பாட்டின் அடிப்படை.
இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் உலகில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் தொடர்புகள் உள்ளதாகக் கொள்ளலாம். அதே சமயம் இந்தத் தியரியின் மூலம் ஒரு மனிதனின் செயல்பாடு ஒரு நிகழ்வின் முடிவை மாற்றிவிடலாம் என்பதும் பெறப்படுகின்றது.
ஆங்கிலம் தமிழ் தளத்தில் தேவையில்லை
[தொகு]ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளில் உள்ளிடுவது தமிங்கலத் தளமாகிவிடும். அவற்றை ஆங்கிலத்தில் தமிழ் தளத்தில் உள்ளிட வேண்டிய அவசியமில்லையே? ஒருவர் உள்ளிடுவதை பார்த்தால் அனைவரும் இதே முறையை தான் பின்பற்றுவர். ஆங்கிலத்தில் இருப்பது அனைத்தும் தமிழில் வரவேண்டும். இதுதான் நமது நோக்கம். மேற்கோளில் கூட சிறிது நாள் வைத்துவிட்டு எடுத்துவிடலாம். தமிழைத் தவிர எந்த மொழி இருந்தாலும் பிற மொழிகள் தான். நன்றி--செல்வம் தமிழ் 03:56, 23 ஜூன் 2009 (UTC)