உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பகன்றை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்தேகம்[தொகு]

பகன்றையும் கிலுகிலுப்பையும் ஒன்று தானா? கிலுகிலுப்பை- செடி. கொடியல்ல என எண்ணுகின்றேன். Crotalaria verrucosa என்பது கிலுகிலுப்பையை குறிக்கும் என்பது என் அபிப்பிராயம். தயை கூர்ந்து இச்சந்தேகத்தைத் தீர்க்கவும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:58, 14 சூலை 2015 (UTC)[பதிலளி]

கிலுகிலுப்பை வேறு என்பது தெளிவு. எனவே கட்டுரை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. --Sengai Podhuvan (பேச்சு) 12:34, 17 சூலை 2015 (UTC)[பதிலளி]

பகன்றையும், கிலுகிலுப்பையும் வெவ்வேறு தாவரங்கள் எனும் சந்தேகம் இன்னுமுள்ளது. தாவரவியல் பெயர் Crotolaria pulcherrima வையே கிலுகிலுப்பை என கற்ற ஞாபகம். இது மஞ்சள் நிறத்தில் பூக்கும். 3-5 அடி உயரமான செடி. பகண்றை, கிங்கிணி என்பவை வேறு எனவே கருதுகின்றேன். யாரேனும் தெளிவுபடுத்தினால் திருத்த வசதியாக இருக்கும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:31, 19 சனவரி 2017 (UTC)[பதிலளி]
பண்டை கிரேக்கச் சொல்லான κρόταλον என்பதிலிருந்து, Crotalus விலங்குலக பேரினம், Crotolaria தாவரப் பேரினம் உருவாக்கப்பட்டன.. இரண்டுமே கிலுகிலுப்பை என்பதைச்சுட்டுகிறது. அத்தாவரத்தின் விதைகள், ஏறத்தாழ அவரையில் இருப்பது போன்ற வெளித்தோற்றத்துடனும், உள்ளே விதைகள் பிடிப்பு இல்லாமலும் இருக்கும். எனவே, அசையும் போது, கிலுகிலுப்பை ஓசையைத் தருகிறது. விலங்கு உலகில் படத்தில் காணப்படுவது போல அமைந்து, பாம்பு நினைக்கும் போது, ஓசை உருவாக்குகிறது. எனவே, தமிழ் பெயரோடு, தாவரப்பெயரை ஒப்பிடாதீர். ஏனெனில், அது காரணப் பெயர் அல்லவா? Crotolaria பேரினத்தில் ஏறத்தாழ 500 இனங்கள் உள்ளன.--உழவன் (உரை) 08:57, 19 சனவரி 2017 (UTC)[பதிலளி]
நல்ல தகவல்கள் உழவன். அப்படியாயின் கட்டுரையின் உள்ளடக்கத்தில் Crotolaria sp. எனக்குறிப்பிட்டு தகவல் பெட்டியிலும் பல உப இனங்கள் இருப்பதை காட்டுவது சரியாகும் அல்லவா?--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:48, 19 சனவரி 2017 (UTC)[பதிலளி]
தங்களிடம் விக்கி10 நடந்த உரையாடல், இன்னும் நினவில் பசுமையாக உள்ளது. தாவர வள ஆவணங்களைக் கூட்ட, பல அடித்தள வேலைகளைக் குறித்து எண்ணி வருகிறேன். ஒரளவு அவற்றை இங்கே தொகுத்து வருகிறேன். சுருக்கமாகச் சொன்னால் APG IV முறைமையை கையாண்டு, நம் வளம் உலகத்தரத்தில் தொடங்க உள்ளேன். அப்பொழுது உங்களின் பங்களிப்பும் தேவை. நிரலாக்கத்தில் நிறைய ஐயங்கள் உள்ள்ன. இம்மாதத்தில், இந்திய அளவில் கட்டற்ற மென்பொருள் கூடல் ஒன்று நடக்க உள்ளது. அதில் இது குறித்த உதவி கிடைக்கும். அப்பொழுது பல கட்டுரைகள் மாற்றி அமைக்கப்படும். இருப்பினும், உங்கள் அனுபவங்களுக்காக, பங்களிப்பை இப்பொழுதே தொடங்கக் கோருகிறேன். தவறாமல் உங்களையும் தொடர்பு கொள்வேன். வணக்கம்.--உழவன் (உரை) 13:03, 19 சனவரி 2017 (UTC)[பதிலளி]
நல்லது உழவன். இதற்கென்று ஒரு தனி திட்டப்பக்கப் பக்கத்தை உருவாக்கி உரையாடல்களை செம்மைப்படுத்தலாமே?--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:55, 23 சனவரி 2017 (UTC)[பதிலளி]
இரண்டும் வேறானவை. Crotalaria பேரினத்தில் Crotalaria verrucosa என்பதும் Crotalaria lanceolata என்பதும் தனித்தனிப் பெயர்களைக் கொண்ட இனங்களாகும். --AntanO 09:21, 23 சனவரி 2017 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பகன்றை&oldid=2177575" இலிருந்து மீள்விக்கப்பட்டது