உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலக புள்ளியியல் வகைப்பாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலக புள்ளியியல் வகைப்பாடு என்று தலைப்பை மாற்றலாம் என நினைக்கின்றேன்.

  1. புள்ளிவிய என்பது சரியானதா என்று தெரியவில்லை.
  2. அனைத்துலக- அல்லது பன்னாட்டு- என்பன நல்ல தமிழ்ச்சொற்கள் (சர்வதேசம் என்பது சமசுக்கிருதச் சொல்),
  3. தொடர்புடைய நலச் சிக்கல்களுக்குமான என்பதைச் சற்று சுருக்கமாக நலக்கேடுகளுக்குமான எனலாம். --செல்வா 23:03, 9 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

எளிதான நல்ல பரிந்துரை.--Kanags \உரையாடுக 23:25, 9 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

நன்றி சிறீதரன் கனகு :)--செல்வா 23:55, 9 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]


மாற்றலாம், கனகுவின் பரிந்துரை நன்றாக உள்ளது. --Natkeeran 00:56, 10 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

சுகாதாரம்

[தொகு]

சுக ஆதாரம்= சுகாதாரம், என்பது நலமாக வாழ்வதற்கு அடிப்படையாக இருப்பது என்று பொருள். இதனை ஆங்கிலத்தில் sanitation, hygiene என்பர். நாம் தமிழில் தூய்நலம் (நலம்தரும் தூய்மை, நலத்துக்கு அடிப்படையான தூய்மை, துப்புரவு) எனலாம். World Health Organization இல் வரும் Health என்பதற்கு ஈடாக சுகாதாரம் என்னும் சமசுக்கிருதச் சொல் பொருந்தாது என்று நினைக்கிறேன். hygiene, sanitation, cleanliness ஆகியவற்றுக்கு சுகாதாரம், தூய்நலம், துப்புரவு, தூயுரவு ஆகியவை பொருந்தும். (உரவு என்னும் தமிழ்ச்சொல்லுக்கு அறிவு, பரத்தல், மிகுதி, வலிவு, உளத்திட்பம், மிகுகை ஆகிய பொருட்கள் உண்டு. துப்புரவு, நல்குரவு (வறுமை), ஒப்புரவு போன்ற சொற்களைப் பார்க்கலாம். உரவுதல் என்றால் வலிமை பெறுதல், வலிமை உண்டாதல் என்று பொருள். செடிகளுக்கும் பயிர்களுக்கும் உரம் என்பதை நினைத்துப் பாருங்கள். உரத்துப் பேசுதல் என்பதனையும் நினைத்துப்பாருங்கள்.) எனவே தூயுரவு என்றால் தூய்மை மிகுந்து இருப்பது. தூய்மை நன்றாக வலுவாக இருப்பது, அறிவார்ந்த தூய்மை பேணல் என்றெல்லாம் பொருள்தரும்.--செல்வா 03:04, 10 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]