உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நோபல் பரிசு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோபல் பரிசு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

தமிழில் 'Nobel' என்னும் சொல்லை அதன் ஆங்கில உச்சரிப்புக்கு ஏற்ப 'நோபெல்' என்று எழுதுவதுதானே முறை.

'Noble' என்ற சொல்லைத்தான் 'நோபல்' என்று உச்சரிக்க வேண்டும்.

இனிமேலாவது உலக வழக்குக்கு ஏற்ப 'Nobel Prize' என்பதை 'நோபெல் பரிசு' என்று சொல்லவும் எழுதவும் தொடங்கலாமே.

நோபல் என்ற எழுத்துக்கூட்டல் பெரும்பாலான தமிழ் ஊடகங்களில் நிலைத்து விட்ட எழுத்துக்கூட்டலாக இருக்கிறது. இதை மாற்றத் தேவையில்லை என நினைக்கிறேன். பிற பயனர் கருத்துக்களை எதிரப்பார்க்கிறேன்.--ரவி 08:41, 22 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

நோபல் என்று வாசித்து எழுதி பழகிவிட்டதால் அதனை பின்பற்றலாம் என நான் விரும்புகின்றேன்.இலங்கைபத்திரிகையில் அவ்வாறு குறிப்பிடுவதை கருத்தில் கொள்க--கலாநிதி 16:51, 22 அக்டோபர் 2006 (UTC)

நோபல் என்பது மிகவும் பரவலாகப் பயன்படுவதால் அவ்வாறே தொடர்ந்தும் பயன்படுத்தலாம். --கோபி 17:04, 22 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

மாற்றம் தேவை

[தொகு]

நம் இளையர்களிடையே தமிழ்மொழி தற்கால நடைமுறைக்கு ஒவ்வாத மொழி என்ற கருத்து வேரூன்றத் தொடங்கியிருக்கும் இக்காலக்கட்டத்தில் - உலகமே NoBEL (நோபெல்) என சொல்லிக்கொண்டிருக்கும் பெயரை NoBLE (நோபல்) என்று தவறாக உச்சரிப்பதற்கு எப்படிச் சப்பைக் கட்டுக் கட்டப்போகிறோம்? தவறு என்று தெரிந்த பின்னர் அதை மாற்றவேண்டிய தார்மீகப் பொறுப்பு நமக்கு உண்டு. டாக்டர் முவ போன்ற பேரறிஞர்கள் இன்று உயிரோடு இருந்தால் அதை நிச்சயமாகச் செய்திருப்பார்கள்! நன்றே செய்வோம்! இன்றே செய்வோம்!--−முன்நிற்கும் கருத்து Nalluraj (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

நோபல் என்பதும் பொதுப்பயன்பாட்டில் உள்ளதால் இரண்டையும் பயன்படுத்தலாம். சரி தவறு என்பதைத் தாண்டி இச்சொல் பொதுப்பயன்பாட்டில் உள்ளது. நீங்கள் எழுதும் போது நோபெல் என்று எழுதுங்கள். ஏற்கனவே உள்ள இடங்களில் மாற்றும் போது உள்ளிணைப்புகள் கெடாமல் மாற்றுங்கள். பகுப்புகளில் நோபெல் என்று மாற்ற வேண்டாம் (பகுப்பு பக்கத்தில் மாற்றி, அது இணைக்கும் அத்தனை பக்கங்களிலும் மாற்ற வேண்டி வரும்).--சோடாபாட்டில் 06:13, 11 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
சரியான உச்சரிப்பு நொபேல் [1].--Kanags \உரையாடுக 07:09, 11 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

'

சிறீதரன் சொன்னது சரியான ஒலிப்பு (பல பகுதி ஆங்கிலேயர்கள் ஒலிப்பு), ஆனால் எல்லோரும் அப்படி ஒலிப்பதில்லை. தமிழில் நோபல் பரிசு என்று வழக்கூன்றியுள்ளது மட்டுமல்லாமல் (வழக்கூன்றியிருந்தாலும், தவறு எனில் மாற்றலாம்தான், அல்லது மாற்ற முயலலாம்தான்), தமிழில் ஒலிக்க நமக்கென முறைமை இருப்பது தவறல்ல. எல்லா மொழியாளரும் பிறமொழிப் பெயர்களை (அவை பெயர்ச்சொற்களாயினும்) தங்கள் மொழியில் இயல்புக்கும் மரபுக்கும் ஏற்பவே எழுதி வழங்குகின்றார்கள். ஆகவே நோபல் என்பதை மாற்றவேண்டாம் என்பது மட்டுமல்லாமல் கூடியமட்டிலும் எல்லோரும் நோபல் என்றே எழுதுவதும் நல்லது. --செல்வா 13:07, 14 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

NoBEL என்னும் பெயரை நோபெல் என்று எழுதுவது தமிழ்மொழியின் இயல்புக்கும் மரபுக்கும் மாறானது என்னும் கூற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், பிரச்சினை அதுவல்ல நண்பர்களே - நோபல் (NoBLE)என்பாரின் பெயரில் வேறொரு பரிசு அமெரிக்காவில் தரப்படுகிறது! இதைப் படித்துப் பாருங்கள், உண்மை நிலவரம் விளங்கும் http://www.time.com/time/magazine/article/0,9171,742530,00.html --Nalluraj 13:37, 15 அக்டோபர் 2010 (UTC)

NoBEL என்னும் பெயரை நோபெல் என்று எழுதுவது தமிழ்மொழியின் இயல்புக்கும் மரபுக்கும் மாறானது என்று யார் கூறினார்கள் என்று தெரிவிக்க வேண்டுகிறேன். நோபல் என்பது வழக்கூன்றியுள்ளது என்பதும் வழக்கூன்றியிருந்தாலும் தவறு எனில் மாற்றலாம்தான் என்றும் நான் கூறியிருந்தேன். NoBLE என்னும் பரிசை நோபிள் பரிசு என்று சொல்வதால் குழப்பம் ஏதும் வர வாய்ப்பில்லையே. கேபிள், டேபிள், ஆப்பிள் என்பது போல இதுவும். ஆங்கிலச்சொற்கள் பலவற்றிலும் உயிரொலிக்குறுக்கம் உள்ளது. அதாவது உயிரொலி ஒலிப்பின் நீட்டம் தமிழில் குறில் என்று சொல்லப்படும் ஒரு மாத்திரையினும் மிகக்குறைந்த அளவில் உள்ளது. இதனை இழ்சுவா (Schwa) என்று அனைத்துலக ஒலியன் நெடுங்கணக்கில் (அஒநெ) கூறுவர். இதனை /ə/ என்னும் குறியிட்டுக் குறிக்கின்றனர். தமிழில் குற்றியலுகரம் போல் இது குற்றியல் உயிரொலி (குற்றியல் அகரம் என்றும் கூறலாம்). ப' என்பதை ba என்பதற்கு ஈடாகக் கொண்டால், NoBLE என்பதை நோப்'ல் என்று காட்டலாம். ஆனால் நோபல் என்று எழுதினால் அது Nobál என்பது போல ஒலிக்கும் (NoBLE அல்ல). தமிழ் மொழியாளர்களின் இயல்பின்படி apple, என்பது ஆப்பிள் என்றும், Cable, Table, Topple pimple என்பன கேபிள், டேபிள், டாப்பிள், பிம்(ப்)பிள் என்றும் எழுதி ஒலிக்கப்பெறும். இதில் ஏற்படும் திரிபுகள் மொழிக்கு மொழி நிகழும் மாறுபாடுகளே. --செல்வா 17:20, 15 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

ஆலோசனைக்கு நன்றி

[தொகு]

"நோபல் என்பதும் பொதுப்பயன்பாட்டில் உள்ளதால் இரண்டையும் பயன்படுத்தலாம்" என்று கருத்து தெரிவித்திருக்கிறீர்கள். ஆனால் நோபல் பரிசு (Alfred Noble Memorial Prize) என்னும் வேறொரு பரிசை அமெரிக்காவில் வழங்குகிறார்கள். இந்த இணையப்பக்கத்தில் நீங்கள் அச்செய்தியைக் காணலாம். http://www.time.com/time/magazine/article/0,9171,742530,00.html

தவறு என்று தெரிந்தபின் நாம் ஏன் அனைவரையும் சரியான பாதையி்ல் இட்டுச் செல்லக்கூடாது? அதுதானே விக்கிப்பீடியாவின் நோக்கம்! உள்ளிணைப்புகள் கெடாமல் திருத்தப் பணியைச் செய்வதற்கு நிச்சயம் முயல்கிறேன். ஆலோசனைக்கு நன்றி!--Nalluraj 02:09, 14 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

தவறு இல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்!! --செல்வா 17:20, 15 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

நன்றி

[தொகு]

என் திருத்தப் பணியைச் செய்ய ஒத்துழைப்பு நல்கிய நண்பர்களுக்கு நன்றி. நோபெல், நோபல் - தி்ருத்துவதி்ல் நான் ஏன் இவ்வளவு முனைப்புக் காட்டுகிறேன் என நீங்கள் நினைக்கலாம்.

காரணம் இதுதான் - இவ்விரண்டு பெயர்களிலுமே (NoBEL - நோபெல் & NoBLE - நோபல்) வெவ்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆகவே, உலக வழக்கப்படி NoBEL என்பதை நோபெல் என்று இற்றைப்படுத்தித் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்ப்போம்.

  • "எட்டுத் திக்கும் செல்வீர் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்,"* என்ற பாரதியின் கட்டளையை நிறைவேற்றுகையில் செய்வன திருந்தச் செய்வோம்!

--Nalluraj 02:01, 14 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

Noble என்பதை நோபிள் என்று கூறுவது வழக்கம். நோபல் வேறு நோபிள் வேறு. Cable, table, simple, போன்ற சொற்களை கேபிள், டேபிள், சிம்(ப்)பிள் என்று எழுதுவதைப் பார்த்திருக்கலாம். -ble என்பதை -பிள் என்று முடியுமாறு எழுதுவது தமிழ் முறை. --செல்வா 13:11, 14 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

நண்பரே, Table என்பதை ஆங்கில ஒலிப்புப்படி நாம் தமிழில் எழுதவேண்டுமானால் 'டேபல்' என்றும், cable - 'கேபல்', simple - 'சிம்ப்பல்' என்று எழுதினால்தான், நம் தமிழ் இளையர்கள் அச்சொற்களை USA, UK, ஆஸ்திரேலியா, கானடா ஆகிய நாடுகளில் பேசப்படும் ஆங்கிலத்தின் உச்சரிப்பைப் பின்பற்றிப் பேசி "உலகத்தோடு ஒட்டி ஒழுக" முடியும்.--Nalluraj 13:55, 15 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

ஆங்கில ஒலிப்பின்படியோ, பிற மொழிகளின் ஒலிப்பின்படியோ (பெரும்பாலான சொற்களைத்) தமிழில் எழுத இயலாது (அதுபோலவே தமிழில் உள்ள மிகப்பல சொற்களையும் ஆங்கிலத்திலோ பிறமொழிகளிலோ சரிவர எழுத இயலாது). தமிழில் Apple என்பதை ஆப்பிள் என்று எழுதுவதைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இதே போல cable என்பதைக் கேபிள் என்றும் எழுதுவதையும் பார்த்திருப்பீர்கள். இதே பக்கத்தில் மேலே இழ்சுவா (Schwa) பற்றி எழுதியுள்ளேன். அக்கருத்துகளையும் பார்க்க வேண்டுகிறேன். நீங்கள் கூறுவது போல எழுதினால் வேறுவகையான திரிபுகள் தருகின்றன. Cable, Apple, Table என்பனவற்றை கேப்'ல், ஏஆப்ல், டேப்'ல் என்று எழுதலாம் (ப்' = b, ஏஆ = æ என்று கொண்டால்). எழுத்துக்கூட்டலைக் கொண்டு ஒலிப்புத்துல்லியம் என்பதை ஓரளவுக்கு மேல் பார்ப்பது இயலாதது (ஒரு மொழிக்குள்ளேயே!! பிறகு மொழிக்கு மொழி மாறும்பொழுது இன்னும் இடரானது). கடைசியாக ஆங்கில ஒலிப்பு என்பது ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடமே இடத்துக்கு இடம் மாறுபடுவது. மேலும் ஆங்கிலம் மட்டுமே உலகில் வழங்கும் மொழியல்ல ஆகவே "ஆங்கில" ஒலிப்பைப் பின்பற்றுவது உலகத்தோடு ஒட்டி ஒழுகல் அல்ல. நான் கனடாவில்தான் வாழ்கிறேன். இங்கே நூற்றுக்கணக்கான ஆங்கில ஒலிப்புகள் உண்டு (இவற்றில் பல ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் ஒலிப்பாகும், பிற பன்னாட்டு மக்கள் பேசும் ஆங்கிலம் - பிரான்சியர், இடாய்ச்சுலாந்தியர், அரேபியர், வட, தென் இந்தியர் என்று பற்பல ஒலிப்புகளாகும்). --செல்வா 17:39, 15 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
செல்வா குறிப்பிட்டது போல பொதுப் பயன்பாடு கருதி நோபல் என எழுதுவதே நல்லது.--Kanags \உரையாடுக 21:38, 15 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

பொதுப் பயன்பாடு கருதி நோபல் என எழுதுவதே நல்லது என்கிறீர்கள் - இப்படி எழுதுவதைப் படித்துவிட்டு நம் தமிழ் இளையர்கள் ஆங்கிலத்தில் பேசும்போது "_____________ has received the NoBLE (நோபல்) Prize for _______ this year" என்று கூறி வேற்று மொழிக்காரர்களின் நகைப்புக்கு ஆளானதை நான் கண்கூடாகக் கண்டு வேதனைப்பட்டிருக்கிறேன்.

'நோபல்' - பொதுப் பயன்பாடு அல்ல - அருகிவரும் பயன்பாடு - 'நோபெல்' என்று எத்தனை பேர் எழுதத் தொடங்கிவிட்டார்கள் என்பதை Google தேடல் புலப்படுத்தும். மாற்றங்கள் நம் மொழியை இற்றைப்படுத்தக்கூடியவையாக இருந்தால் அத்தகைய மாற்றங்களை நாம் வரவேற்கவேண்டும் நண்பர்களே. கடந்த வாரம் SunTV செய்திகளில்கூட 'நோபெல் பரிசு' என்றுதான் அறிவித்தார்கள்! ஆங்கிலம் வழி கல்வி கற்கும் நம் இளையர்கள் இதை நிச்சயம் வரவேற்பார்கள் - அவர்களைக் கேட்டுப்பாருங்கள்! --Nalluraj 04:42, 16 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

நல்லுராஜ், நீங்கள் முன்வைக்கும் மாற்றத்துக்கு ஏனைய விக்கி பங்களிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலோ, ஏற்பு தெரிவிக்க வில்லையென்றாலோ, மாற்றங்களைத் தொடர வேண்டாம் (உங்கள் நிலை சிறந்தது என்று நீங்கள் கருதினாலும் கூட). இங்கு நோபெல் என்று மாற்றலாமா என்று உரையாடல் நடந்து கொண்டிருக்கும் போது, நீங்கள் மற்ற கட்டுரைகளில் மாற்ற வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். ஓரளவு பொதுகருத்து உருவாகும் வரை தன்னிச்சையாக மாற்றாதிருப்பது விக்கியின் வழக்கங்களில் ஒன்று--சோடாபாட்டில் 11:15, 16 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

ஓரளவு பொதுக் கருத்து உருவாகும்வரை தன்னிச்சையாக மாற்றாதிருப்பது விக்கியின் வழக்கங்களில் ஒன்று என்று நீங்கள் அறிவுறுத்தியிருப்பதால் மாற்றங்கள் செய்வதை இப்போதைக்கு நிறுத்திக்கொள்கிறேன் - Noble/Noble என்பதில் உள்ள நுணுக்கமான வேறுபாட்டை உணராமல் கடந்த சில தலைமுறைகளாகத் தமிழர்கள் வழங்கி வந்த நோபல் என்ற சொல்லுக்குப் பதிலாக இணையத்தில் நோபெல் என்ற வழக்கு பெருகி வருவதை விக்கிப்பீடியா கண்டும் காணாமல் இருக்க முடியாது என்ற நட்பார்ந்த அறிவுரையுடன். --Nalluraj 12:42, 16 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

கூகுள் அல்லது கூகிள் என்று பெரும்பாலானோர் எழுதுகின்றனர், கூகல் என்று அல்ல. உங்கள் கருத்து சரியல்ல என்பேன். நோபல் (Nobel) என்பது கூகுள் தேடலில் 414,000 சுட்டுகள் தருகின்றது, நோபெல் என்பது 14,600 சுட்டுகள் காட்டுகின்றது. கூகுள் தேடலின் முடிவுகள் உறுதி பயப்பது அல்ல. ஆனாலும் நீங்கள் கூறியதால் சுட்டிக்காட்டுகிறேன். தமிழ் பிபிசி, வெப்துனியா போன்று எத்தனையோ ஊடகங்கங்களிலும், பல பெரிய எழுத்தாளர்களின் எழுத்துகளிலும் நோபல் என்று எழுதுகிறார்கள். கேபிள், டேபிள், கூகிள் போன்று NoBLE என்பது நோபிள் என்று தமிழில் எழுதப்படும் நோபல் என்று அல்ல. Nobel என்பதை நோபெல் என்று எழுதலாம், தவறென்று சொல்லவில்லை ஆனால் சீர்மை பேணுவது முக்கியம், தேவை இல்லாமல் மாற்றுவதும் தவறு. நீங்கள் கூறவந்தது NoBLE என்பதோடு முரணும் என்பதே. அது சரியல்ல என்பது என் கருத்து. பல எடுத்துக்காட்டுகளும் தந்துள்ளேன். Noble/Noble என்பதில் உள்ள நுணுக்கமான வேறுபாட்டை உணராமல் என்று நீங்கள் கூறுவது நீங்களாகக் கற்பனை செய்வதாகும். நோபல் =Nobel; நோபிள் = Noble. இதில் குழப்பம் ஏதும் இல்லை. ஒலிப்பானது மக்கள் குழுவுக்கு மக்கள் குழு மாறுபடும். --செல்வா 19:00, 16 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

தமிழ் பிபிசி, வெப்துனியா போன்று எத்தனையோ ஊடகங்கங்களிலும், பல பெரிய எழுத்தாளர்களின் எழுத்துகளிலும் நோபல் என்று எழுதுகிறார்கள். ....சீர்மை பேணுவது முக்கியம். உண்மைதான். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட தமிழ் பிபிசியிலேயே 'நோபெல்' என்ற வடிவம் தலைகாட்ட ஆரம்பித்துவிட்டது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆதாரம் - http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/10/091008_nobelfortamil.shtml மற்றும் http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/12/091201_tutuonlanka.shtml மேலும் tamilcnn - http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=11758&Itemid=401

Noble/Noble என்பதில் உள்ள நுணுக்கமான வேறுபாட்டை உணராமல் என்று நீங்கள் கூறுவது நீங்களாகக் கற்பனை செய்வதாகும். என்கிறீர்கள். அப்படியென்றால் Hillary Clinton - ஹில்லரி என்பதை ஹில்லாரி என தமிழ் ஊடகங்கள் ஒலிப்பதும் எழுதுவதும் ஒலிப்பிலுள்ள நுணுக்கத்தை அறியாமல்தான் என்று நான் கூறினால் அதையும் என் கற்பனைதான் என்பீர்களோ? கற்பனை இல்லை - ஹில்லாரி (for Hillary) is the new நோபல் (for NoBEL) என்பேன் நான்.

நாம் இரு வேறு paradigms-இலிருந்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நான் உணர்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட சீர்மை என்பது NoBEL = நோபெல் என்பதை நோக்கியே செல்லும், அதை நாம் ஆதரிக்க வேண்டும் என்பதே என் கருத்து. விடைபெறுகிறேன் - ஐயா சி. ஜெயபாரதன் அவர்களும் என் கட்சிதான் என்ற திருப்தியுடன். http://jayabarathan.wordpress.com/2010/03/06/lise-meitner/ --Nalluraj 03:52, 17 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

தகவலில் தவறு

[தொகு]

//தனது சொத்தில் 94%-தினை, 31 மில்லியன் சுவீடன் குரோனார் (2008 மதிப்பின்படி 150 மில்லியன் யூரோ, 186 அமெரிக்க டாலர்கள்)// குறிப்பிட்ட வசனத்தில் நாணய மாற்றம் தவறாக உள்ளதென நினைக்கின்றேன். சரிபார்க்க வேண்டும்.--கலை (பேச்சு) 11:31, 13 ஏப்ரல் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நோபல்_பரிசு&oldid=1400968" இலிருந்து மீள்விக்கப்பட்டது