பேச்சு:நீலம் புயல்
தொலைக்காட்சியில் பேசிய வானிலை அறிவிப்பாளர் இரமணன் நிலம் என்றே ஒலித்தார். சரியான பெயரை உறுதிப்படுத்த வேண்டும்--இரவி (பேச்சு) 08:48, 31 அக்டோபர் 2012 (UTC)
- இலங்கை தொலைக்காட்சி அலைவரிசையிலும் நிலம் எனும் உச்சரிப்பே தொனித்தது. ஆனால் வீரகேசரி பத்திரிகை நீலம் எனக் குறிப்பிட்டுள்ளது. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:54, 31 அக்டோபர் 2012 (UTC)
- புயல் இன்று 31.10.2012 தானே கரையைக் கடந்தது. கட்டுரை உள்ளடக்கத்தை கவனிக்கும் போது வேறு தகவலுள்ளதே?--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:56, 31 அக்டோபர் 2012 (UTC)
- நிலம் தான் சரியானது என நினைக்கிறேன். சிலர் நீலம் என்கிறார்கள். ஆங்கில உச்சரிப்பில் அவர்களின் வழக்குப் படி நிலாம் என்கிறார்கள்.--Kanags \உரையாடுக 09:09, 31 அக்டோபர் 2012 (UTC)
சூரியன் செய்திகளில் நிலாம்/Nilam என்றே தட்டச்சிட்டிருந்தார்கள். ஆனால், புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பேசிய அறிவிப்பாளர் முரளிதரன் நீலம் என்றே ஒலித்திருந்தார். ஒவ்வோர் ஊடகத்திலும் ஒவ்வொரு மாதிரிக் கூறப்படுகிறது. --மதனாகரன் (பேச்சு) 10:37, 1 நவம்பர் 2012 (UTC)
தினமணி நாளிதழும் நிலம் என்றே குறிப்பிடுகிறது.--Booradleyp (பேச்சு) 14:59, 1 நவம்பர் 2012 (UTC)
- Nilam என்பது தமிழ்ச் சொல்லே. ஆங்கிலச் சொல் அல்ல. கட்டுரையில் ஆங்கில உச்சரிப்பில் நிலாம் எனத் தரப்பட்டிருக்கிறது. அது தவறு. நிலம் என்பதே சரியானது. நீலமும் அல்ல.--Kanags \உரையாடுக 05:25, 3 நவம்பர் 2012 (UTC)
- நிலம் = மகன்??--சிவம் 06:34, 3 நவம்பர் 2012 (UTC)
கனகரத்தினம் ஸ்ரீதரன் அண்ணா வணக்கம். எனக்கும் இதில் ஒரு சிக்கல் இருக்கின்றன, நீலம், நிலம், நிலாம், என்று மூன்று பெயர்களும் ஊடகங்களில் பாவிக்கப்படிகின்றன, ஆனால் இதன் உண்மை பெயரை கண்டிப்பாக கண்டறிய வேண்டும். நான் கண்டரிந்தவரை நிலாம் என்பதன் அர்த்தம் மகன் என்று சொல்லப்படுகிறது. இது யப்பானியர்களின் மொழிவழக்கு என்று அறிந்தேன். இது தமிழோ அல்லது ஆங்கிலமோ இல்லை என்பதையும் கண்டறிந்தேன். ஆனால் நாங்கள் வாழும் இந்த காலத்திலையே இப்படியான பிழைகள் வருவதை அனுமதிக்க முடியாது. அதனால் உங்களால் முடிந்தவரை சரியான பெயரை கண்டறிந்தால் அனைவருக்கும் ஒரு சரியான பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன். அதேவேளை வங்க கடலில் வந்த காற்றின் தாளமுக்கத்தை யப்பானியர்கள்தான் முதலில் கண்டறிந்து பெயர் வைத்தார்கள், அதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் நிலம் என்று செய்தி வெளியிட்டவர்கள் பின் நீலம் என்று மாத்தினார்கள். அதையும் கவனிக்கவும் நன்றி. இது ஒரு சவால்தான் ஆனால் உங்களுக்கும் எனக்கும் இல்லை. செய்தி நிறுவனத்துக்கும் விக்கிக்கும். நிலம்=பூமி, நீலம்=வர்ணம், நிலாம்=ஒருவரின் பெயர் (Tinh).--சிவம் 08:16, 3 நவம்பர் 2012 (UTC)