பேச்சு:நடுவண் ஒற்று முகமை
இக்கட்டுரை உரை திருத்தம் செய்யப்பட்டது--மோகன் திருநீலகண்டன் 16:37, 26 ஆகஸ்ட் 2010 (UTC)
பிழைகள்
[தொகு]1
[தொகு]It is the successor of the Office of Strategic Services (OSS) formed during World War II to coordinate espionage activities behind enemy lines for the branches of the United States military.
என்ற அங்கில தொடர்
இது இரண்டாம் உலகப்போரின் போது, அமெரிக்க இராணுவப் பிரிவுகளுக்கு இடையேயான நடவடிக்கைகளை உளவு பார்ப்பதற்காக உருவாக்கப்பட்ட வியூக சேவைகள் அலுவலகத்தின் (ஓஎஸ்எஸ்) ஒரு பிரிவாகும்
என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?
ஒரே வாக்கியத்தில் இரு தகவல் பிழைகள்!!
- 1) OSS அமெரிக்க ராணுவத்தின் பிரிவுகள் எதிரி நாட்டு எல்லைக்குள் செய்யும் உளவு வேலைகளை ஒருங்கிணைக்கத் தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். ஆனால் கூகுள் மொழிபெயர்ப்போ அது அமேரிக்க ராணுவ பிரிவுகளை உளவு பார்க்கும் நிறுவனம் என்று மாற்றியுள்ளது.
- 2) CIA is a successor of OSS. அதாவது சிஐஏ ஓஎஸ்எசுக்கு பின் வந்த அமைப்பு. கூகுள் மொழி பெயர்ப்போ சிஐஏ OSS in ஒரு பிரிவு என்கிறது
--சோடாபாட்டில் 16:59, 26 ஆகஸ்ட் 2010 (UTC)
2
[தொகு]Sometimes, the CIA is referred to euphemistically in government and military parlance as Other Government Agencies (OGA), particularly when its operations in a particular area are an open secret
=
குறிப்பிட்ட இடங்களில் வெளிப்படையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, சிஐஏவும் மற்ற அரசு நிறுவனங்களைப் (ஓஜிஏ ) போன்று, அரசாங்கம் மற்றும் இராணுவத்தினால் சிறப்பான முறையில் குறிப்பிடப்படுகிறது
இந்த ஆங்கில வாக்கியத்தின் பொருள்:
- சிஐஏ சில சமயங்களில் வெளிப்படையாக நடவடிக்கைகளில் ஈடுபடும்.
- அப்போது, அரசு/ராணுவ வட்டாரங்களில் “ஓஜிஏ” (”மற்ற அரசு நிறுவனங்கள்”) என்று மிகையாக/நக்கலாக அழைக்கப்படும்.
கூகுள் மொழிபெயர்ப்பின் பொருள்:
- சிஐஏ சில சமயங்களில் வெளிப்படையாக நடவடிக்கைகளில் ஈடுபடும்.
- அப்போது மற்ற அரசு நிறுவனங்களைப்போன்று அரசாங்கம் மற்றும் இராணுவத்தினால் சிறப்பான முறையில் குறிப்பிடப்படுகிறது
3
[தொகு]The Director of the Central Intelligence Agency (D/CIA) reports directly to the Director of National Intelligence (DNI)
=
மத்திய புலனாய்வு நிறுவனத்தின் இயக்குனர் (டி/சிஐஏ) தேசிய புலனாய்வு இயக்குனரிடம் (டிஎன்ஐ) நேரடியாக புகாரைத் தெரிவிக்கலாம்
சரியான பொருள்: DNI, D/CIA வின் நேரடி மேலதிகாரி
கூகுள் பொருள்: D/CIA, DNI இடம் புகார் தெரிவிக்கலாம்
(report என்ற சொல் பயன்பாடு தவறியுள்ளது)
பெயர்
[தொகு]இங்கு “intelligence" என்பது “ஒற்று” / “வேவு” என்ற பொருளில் வருவதால், வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்க்காமல் “நடுவண் ஒற்று முகமை” என்று தலைப்பிட்டுள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:07, 3 சூலை 2011 (UTC)