பேச்சு:நகரத்தந்தை
Appearance
இதனை தமிழ்ப்பெயருக்கு மாற்றலாம். நகர பிதா, மாநநகர முதல்வர்? --AntanO 14:44, 8 சூன் 2016 (UTC)
இங்கு நகரத்தந்தை என்ற பெயர் வழக்கில் உள்ளது User:AntanO --கி.மூர்த்தி 17:10, 8 சூன் 2016 (UTC)
- நகரக்கிழார் எனவும் நகரத்தந்தை எனவும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். ஆனால் தமிழக மாநகராட்சி தமிழ் வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் அரசு ஆவணங்களிலும் மேயர் என்ற சொல்லே ஆளப்பட்டுள்ளது. இந்தப் பதவி பல்வேறு இடங்களில் பல்வேறாக வரையறுக்கப்படுவதால் நகர முதல்வர் என்று கூறவியலாது. சிலவிடங்களில் இவர் நியமிக்கப்படுவதால், நகரவைத் தலைவர் என்ற பயன்பாடும் பொருந்தாது. பொருத்தமான, பரவலான ஏற்புடைய சொல், கிடைக்கும்வரை நகரத்தந்தை என தலைப்பை மட்டும் மாற்றுகிறேன். --மணியன் (பேச்சு) 13:56, 9 சூன் 2016 (UTC)
- தொடர்புள்ள மற்றுமொரு உரையாடல் காண்க: பகுப்பு பேச்சு:சென்னை மேயர்கள்--மணியன் (பேச்சு) 20:51, 9 சூன் 2016 (UTC)
- அரசும் ஊடகங்களும் பிழையான தமிழை அல்லது ஆங்கிலத்தை தமிழாக்குவது இயல்பு என்பதால் தற்போதுள்ள பெயர் பொருத்ததானது. விக்சனரியில் mayor விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு- விக்கிப்பீடியா பக்கங்களின் பெயர்கள் / (கட்டுரைத்தலைப்புகள்) தமிழில் இருக்க வேண்டும். --AntanO 02:12, 10 சூன் 2016 (UTC)
- இந்தக் கட்டுரையின் பெயரை மேயர் என மாற்ற பரிந்துரைக்கிறேன். தமிழ் நாட்டில் பல பெண் மேயர்கள் பதவிக்கு வந்துள்ள நிலையில் ஆண்பாலை சுட்டும் இப்பெயர் பொருத்தமாக இல்லை. மேலும் மேயர் என்ற சொல்லை ஒரு தமிழ்ச் சொல்லாக கருதினாலும் மேன்மையானவர் என்ற பொருள்தரும் சொல்லாகவே உள்ளது. எனவே இதை தமிழல்லா சொல் என்று கருதத் தேவையில்லை.--அருளரசன் (பேச்சு) 15:22, 4 மார்ச் 2022 (UTC)
- ஆதரவு மேயர் என மாற்றலாம் -- சா அருணாசலம் (பேச்சு) 15:30, 4 மார்ச் 2022 (UTC)