உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தெய்வப் பாண்டியன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

//சிலப்பதிகார உரையில் அடியார்க்குநல்லார் ஐந்து இசைத்தமிழ் நூல்களைக் குறிப்பிடுகிறார். அவற்றில் ஒன்று இசைநுணுக்கம். இது சிகண்டி என்பவரால் சாரகுமாரன் இசை அறிதற்குச் செய்யப்பட்டது.//

ஐயா, கபாடபுரம் (நூல்) படிக்கையில் அதில் வெண்டேர்ச் செழியன் தவிர மற்ற அனைத்தும் ஆசிரியரின் முழுக்க கற்பனை என்றே நினைத்திருந்தேன். இக்கட்டுரை பார்த்த பின்பே இன்னும் சில இலக்கிய நூல்களிலிருந்து மற்ற சில விசயங்களையும் அவர் சேர்த்திருக்கிறார் என்று அறிந்தேன். அதன்படி நான் அறிந்து கொள்ள வேண்டியவை சில உள்ளன.

  1. //சிலப்பதிகார உரையில் அடியார்க்குநல்லார் ஐந்து இசைத்தமிழ் நூல்களைக் குறிப்பிடுகிறார்.//

அந்த ஐந்து நூலையும் பட்டியலிட வேண்டுகிறேன்.

  1. //இது சிகண்டி என்பவரால் சாரகுமாரன் இசை அறிதற்குச் செய்யப்பட்டது.//
  1. மேலும் வெண்தேர்ச் செழியன், தெய்வப்பாண்டியன், சாரகுணன் வழியில் அடுத்து வேறு எவராவது பாண்டிய மன்னரின் பெயர்கள் உரையில் குறிப்பிட்டுள்ளனவா?

சிலப்பதிகார உரையில் இதற்கான வரிகளை எங்கு குறிப்பிடுள்ளார் அது என்ன வரி என்பதையும் குறிப்பிட முடியுமா? அறிந்து கொள்ள ஆவல்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:22, 2 ஏப்ரல் 2012 (UTC)

அன்புள்ள தேனியாருக்கு, வணக்கம் தமிழில் கூத்தநூல்கள் கட்டுரை பாருங்கள். வணக்கம். --Sengai Podhuvan (பேச்சு) 06:44, 3 ஏப்ரல் 2012 (UTC)

ஐயா, மேலும் வெண்தேர்ச் செழியன், தெய்வப்பாண்டியன், சாரகுணன் வழியில் அடுத்து வேறு எவராவது பாண்டிய மன்னரின் பெயர்கள் உரையில் குறிப்பிட்டுள்ளனவா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:47, 3 ஏப்ரல் 2012 (UTC)

Start a discussion about தெய்வப் பாண்டியன்

Start a discussion