பேச்சு:திருச்சிராப்பள்ளி
Appearance
தகவல் திருத்தம்
[தொகு]திருச்சி நகரைப் பற்றிய இக்கட்டுரையில், திருச்சி மாவட்டத்தைப் பற்றி சற்று அதிகமாகவே விவரங்கள் இருப்பதாக தோன்றுகிறது... 'வரலாறு', 'எல்லைகள்' போன்றிய பகுதிகள் திருச்சி மாவட்டத்தை பற்றிய கட்டுரையில் இடம் பெறுவது தான் பொறுத்தமாக இருக்கும். (திருச்சி மாவட்டத்தை பற்றி இன்னும் கட்டுரை எழுதப்படவில்லை, இக்கட்டுரையிலிருந்து சில பகுதிகளை புதிய கட்டுரைக்கு நகர்த்தலாம் என உள்ளேன்.) --மது 14:12, 17 மார்ச் 2007 (UTC)
- மது குறிப்பிட்டுள்ளது போல் இக்கட்டுரை திருச்சிராப்பள்ளி மாநகராட்சிப் பகுதியைத் தாண்டி திருச்சி மாவட்டச் செய்திகளை அதிகமாகக் கொண்டுள்ளது. முக்கியமாக கல்லூரிகள், சுற்றுலாத் தலங்கள், திருத்தலங்கள் போன்றவைகள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி எல்லையைக் கடந்து மாவட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கிறது. திருச்சிராப்பள்ளி மாநகர் மற்றும் மாவட்டம் குறித்து முழுமையாக அறிந்தவர்கள் யாராவது இதைச் சரி செய்யவும்.--தேனி.எம்.சுப்பிரமணி. 16:30, 17 சனவரி 2011 (UTC)
- //'திரிசிரன்' என்ற பெயருடைய அரக்கன், மூன்று சிரங்களைக் கொண்டவன். அவ்வரக்கன் இவ்வூரில் பூசித்ததனால் திருச்சிராப்பள்ளி என்னும் பெயர் ஏற்பட்டது. இது தென்னாட்டுக் கைலை மலை என்றும் புகழப்படுவது. // இது புராணக்கதையாக இருக்கிறது. புராணக்கதைகளை கலைக்களஞ்சியத்தில் சான்றுடைய தகவலாகப் பதியலாமா எனத் தெரியவில்லை. பதியலாம் என்றால், இக்கதை எந்தப் புராணத்தில் உள்ளது என்னும் சான்றையும் கொடுக்க வேண்டும்.--அரிஅரவேலன் (பேச்சு) 07:23, 29 ஆகத்து 2012 (UTC)
திருச்சி வரலாறு
[தொகு]திருச்சி வரலாறு உருவாக்கப்பட வேண்டும். en:History of Tiruchirappalli--த♥ உழவன் +உரை.. 08:21, 30 ஆகத்து 2012 (UTC)