உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:திமில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரே ஒரு தமிழ் சொல்லை எடுத்துக் கொண்டு, ஆய்தலும், எழுதுதலும் அளப்பரிய பணி. நீங்கள் சிறப்பான முறையில் இக்கட்டுரை உருவாக்க ஆசைப்படுகிறேன். வெறுமனே வாழ்த்து சொல்வதோடு மட்டுமல்லாமல், இச்சொல்லுக்குரிய, பிற பொருட்களையும் தமிழ் விக்சனரியில் மேம்படுத்துவேன். இவ்வார இறுதிக்குள் நம் இலக்கியங்களில் எங்கெல்லாம் இச்சொல் பயன்படுத்தப் பட்டுள்ளதோ அதை தமிழ் விக்சனரியில் சேர்க்கிறேன். கட்டுரைக்கான இலக்கிய மேற்கோள் அங்கு இருப்பின், அதையும் எடுத்தாளக் கேட்டுக் கொள்கிறேன். ஓங்குக தமிழ் வளம்! வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 01:19, 18 ஏப்ரல் 2013 (UTC)

வாழ்த்துக்கு நன்றி. என்னால் முடிந்தளவு செய்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:51, 18 ஏப்ரல் 2013 (UTC)

  • திமிலைப் பற்றி எழுதும்போது நூலின் பெயரை உள்-தலைப்பாக்குதல் சிறப்பின்று. மாற்றியுள்ளேன். --Sengai Podhuvan (பேச்சு) 20:17, 20 ஏப்ரல் 2013 (UTC)
நன்றிங்க அய்யா! ஓரளவு இச்சொல் வரும் இலக்கிய மேற்கோள்களை, தமிழ் விக்சனரியில் இணைத்துள்ளேன். உரிய மேற்கோள்களை உரிய உட்தலைப்புக்கு கீழேயே தரலாமென்று நான் எண்ணுகிறேன். அவ்வாறு தருவதற்கு தமிழ் இலக்கிய அறிவு மிக்க உங்களைப் போன்றோரால் தான் இயலும். குறிப்பாக, இச்சொல் அகநானுறில் பல இடங்களில் வருகிறது. தமிழ் விக்சனரியின் வளத்தை கூட்டும் தொழில்நுட்ப இடர்களை களைந்து வருவதாலும், எனக்கு இங்கு அடிக்கடி மின்தடை வருவதாலும் என்னால் முழுமையாக ஈடுபட இயலவில்லை. எனவே, இவ்வேண்டுகோளை உங்கள் முன்வைக்கிறேன். சந்திப்போம். வணக்கம். ≈ உழவன் ( கூறுக ) 06:18, 21 ஏப்ரல் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திமில்&oldid=1406820" இலிருந்து மீள்விக்கப்பட்டது