பேச்சு:தஞ்சாவூர் கலியுக வெங்கடேசப்பெருமாள் கோயில்
Appearance
17 அக்டோபர் 2016 அன்று கோயிலுக்கு நேரில் சென்றபோது எடுக்கப்பட்ட விவரங்களைக் கொண்டு புதிய பதிவு தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997 நூலிலும், J.M.Somasundaram Pillai அவர்களின் The Great Temple at Tanjore நூலிலும் இக்கோயில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. அவ்வாறே இக்கோயிலில் உள்ள பூர்வ சஞ்சீவி விநாயகர் கோயில் பற்றியும் மேற்கண்ட இரு நூல்களிலும் தந்துள்ள விவரம் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. பூர்வ சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் என்ற பெயரில் தஞ்சாவூரில் கோயில் இல்லை என்பது அறியப்பட்டது. மேற்கொண்டு புதிய விவரங்களோ, தெளிவோ பெறப்படும்போது பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:49, 18 அக்டோபர் 2016 (UTC)