பேச்சு:டார்சான்
Appearance
Untitled
ஏன் டார்சான் (Tarzan) என எழுதாமல் டார்ஜான் என எழுதுகிறார்கள்? za எப்போதும் ஜ என தமிழக வழக்கில் எழுதப்படுகிறது. இது சரி தானா?--Kanags \உரையாடுக 10:43, 19 மே 2014 (UTC)
- z என்ற எழுத்திற்கு இணையாக ஜ என்ற எழுத்தை எல்லா இடங்களிலும் எடுத்துக் கொள்ள முடியாது. azarudeen என்பதை அசாருதீன் என்றே எழுதுகிறோம். nazimudeen என்பதை நசிமுதீன் என்று எழுதுகிறோம். நஜிமுதீன் என்றால் செயற்கையாக இருக்கும். அதைப் போல z என்ற எழுத்து சொல்லின் இடையில் வரும்பொழுது மென்மையாக ஒலிக்கும். இப்படி இடையில் வந்தால் ச என்ற எழுத்தை இட்டு எழுதுவதே தமிழக வழக்கம். ஜ என்று எழுதினால் செயற்கையாக இருக்கும், அப்படி எழுதுவதும் இல்லை. சிலர் z என்ற எழுத்திற்கு இணையாக ஸ என்ற எழுத்தைப் பயன்படுத்தியதும் உண்டு. ச என்ற எழுத்து sa என்ற ஒலிக்குப் பயன்படுத்துவதால், ஸ என்ற எழுத்தை za என்ற ஒலிக்குப் பயன்படுத்துவர். (கூடுதல் குறிப்பு: இப்படி வந்தால் மலையாளத்தில் ஸ என்ற எழுத்தை இட்டு எழுதுவர். ) -தமிழ்க்குரிசில் 08:32, 17 சூன் 2014 (UTC)