உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஞானாலயா ஆய்வு நூலகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம். புத்தகம் பூத்த பொய்கை என்ற நூல் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி டோரதி இணையரின் பவள விழா மலராகும். இந்நூலில் ஞானாலயா நூலகம் உருவான வரலாறு, அந்நூலகத்தைப் பற்றி முக்கிய பிரமுகர்களும், ஊடகங்களும் வெளியிட்ட செய்திகள், இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் சேகரிக்கப்பட்ட விதம் உள்ளிட்ட அனைத்தும் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பிறரால் எழுதப்பட்ட கட்டுரைகளைக் கொண்டு அமைந்துள்ளது. இந்நூலில் பல துறையைச் சார்ந்த அறிஞர்கள் இலக்கியம், வரலாறு, சமயம், கலை, கல்வெட்டு உள்ளிட்ட பல தலைப்புகளில் கட்டுரைகளைக் கொண்டு அமைந்துள்ளது.280 பக்கங்களைக் கொண்ட இம்மலரின் முதன்மைப்பதிப்பாசிரியர் வைகறை. பவள விழா மலர் என்ற நிலையில் தனியாக பதிவிடுவது ஏற்புடையதா என்ற நெறிமுறை அறியாத நிலையில் இதனைப் பற்றி இக்கட்டுரையில் மலரின் அட்டையைத் தந்து, சிறு குறிப்பினை இணைத்துள்ளேன். தனியாக நூலாக எழுதலாம் என்றால் தனிக்கட்டுரையாக எழுதுவேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:23, 10 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

இவ்வாறான நூல்கள் தனிக்கட்டுரையாக இருக்கத் தேவையில்லை. இந்தக் கட்டுரையிலேயே ஒரு சிறு குறிப்புத் தந்தால் போதுமானது.--Kanags \உரையாடுக 06:32, 10 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

வணக்கம், Kanags. இந்தக் கட்டுரையிலேயே ஒரு சிறு குறிப்பாகத் தந்துவிட்டேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:30, 10 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]