பேச்சு:ஜிமெயில்
இக்கட்டுரை, விக்கிபீடியா:சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கப்படக் கோரி நியமிக்கப்பட்டிருக்கிறது. இக்கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களை இதன் நியமனத் துணைப்பக்கத்தில் பதியுங்கள். ஒரு சிறப்புக் கட்டுரை விக்கிபீடியாவின் சிறப்பிற்கு சான்றாய் அமைந்திருக்க வேண்டும். சிறப்புக் கட்டுரைக்கான தகுதிகளைப் பார்க்கவும். |
இப்படி ஒரு பெரிய முழுமையான கட்டுரைய பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பாராட்டுக்கள். --மு.மயூரன் 13:08, 31 ஜூலை 2006 (UTC)
மயூரனின் பாராட்டுக்களை நானும் பகிர்கிறேன், உமாபதி. இன்னும் கொஞ்சம் செம்மைப்படுத்தினால், சிறப்புக் கட்டுரை ஆக்கலாம். நாள் தவறாமல் ஜிமெயில் பயன்படுத்தும் நன்றிக் கடன் கழிக்க நானும் உரை திருத்தம் செய்து பங்களித்துள்ளேன் :). சில குறிப்புகள்: ஒவ்வொரு முறை ஜிமெயிலைக் குறிப்பிடும்போதும் தடித்த எழுத்துக்களில் தர வேண்டாம். கட்டுரைத் தொடக்கத்தில் ஒரு முறை கட்டுரைத் தலைப்பை தடித்த எழுத்தில் தந்தால் போதும். பிறகு, ஜிமெயிலானது, என்று ஆனது, ஆனது என்று வரும் சொற்சேர்க்ககளைத் தவிர்த்து உள்ளேன். அந்த சேர்க்கை அவசியமின்றியே பொருள் பிசகாமல் இருக்கும். படிக்கவும் எளிமையாகவும் இருக்கும். இந்த ஆனது பயன்பாடு பல கட்டுரைகளில் உள்ளது. இதை தவிர்க்கலாம் என்பது என் கருத்து. Label, Carbon copy, BCC என்பதற்கு நல்ல தமிழ்ச்சொற்களை யாரேனும் பரிந்துரைக்கலாம்--ரவி 18:15, 31 ஜூலை 2006 (UTC)
நன்றி ரவி மற்றும் மயூரன், யாகூ! மெயிலும் சிறந்ததொரு மின்னஞ்சலே. இக்கட்டுரையை ஆரம்பித்த காலம் முதல் ஜிமெயிலின் தொழில் நுட்பத்தில் மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. அதற்கு ஏற்றவண்ணம் கட்டுரையில் மாற்றங்களை உண்டுபண்ணியுள்ளேன். தவிர சிறப்புக் கட்டுரைக்கு ஏற்றமாதிரி உசாத்துணைகளையும் சேர்த்துள்ளேன். இக்கட்டுரையை நான் இலங்கையின் நான்கு மாவட்டங்களில் இருந்தும் வின்டோஸ் மற்றும் இப்போது இதை பெடோரா கோர் லின்க்ஸ்ஸில் இருந்தும் எழுதியிருக்கின்றேன். இக்கட்டுரைகளில் ஆக்கபூர்வமாக பங்களித்த நற்கீரன், மயூரன், மயூரேசன், ரவி மற்றும் சுந்தர்பாட் (சுந்தர் ஏவிவிடும் தானியங்கி), Thijs!bot,YurikBot இற்கும் இனிமாற்றங்கள் செய்யப்போகின்றவர்களிற்கும் முற்கூட்டியே நன்றிகள்.--Umapathy 16:11, 20 நவம்பர் 2006 (UTC)
- உமாபதி, மாற்றங்கள் நன்று. முதல் படத்துக்கும் இரண்டாவதுக்கும் பெரிய வேறுபாடில்லையே. இரண்டாவதை நீக்கலாமா? எல்லாருக்கும் வரிசையா நன்றி சொல்லி, அரசியல்வாதி மாதிரி ஆகிட்டீங்க? ;)--Ravidreams 16:53, 20 நவம்பர் 2006 (UTC)
- ரவி பட இணைப்பை இல்லாமற் செய்ததொடு புதிய விடயங்களைச் சேர்த்தும் பொருத்தமில்லாமல் இருந்த சிலவற்றை நீக்கியுள்ளேன். என்னை எப்படிவேண்டும் என்றாலும் சொல்லுங்க அரசியல் வாதி என்று மட்டும் சொல்லாதீங்க அது இங்க ரொம்ப ஆபத்தான வார்த்தை.--Umapathy 17:44, 21 நவம்பர் 2006 (UTC)
சுந்தர்பாட்டிற்குக் கூட நன்றி தெரிவித்துப் புல்லரிக்கச் செய்துவிட்டீர்கள். :-) நல்ல தரமான கட்டுரை. பாராட்டுக்கள். என் (முந்நாள்) பணித்தொகுதிக்குட்பட்ட வேண்டுகோள்: போட்டி தலைப்பில் ஜிமெயில் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை பிற சேவைகளுடன் ஒப்பீடு செய்ய முடிந்தால் நன்று (தகுந்த வெளி ஆதாரங்களுடன்). -- Sundar \பேச்சு 09:50, 11 டிசம்பர் 2006 (UTC)
- சுந்தர் ஜிமெயில் ஏனைய போட்டியாளர்களின் வசதிகளை நகல் எடுப்பது (copy பண்ணுவது) போன்று தெரிகின்றது மிக அண்மையில் யாகூ! மெயிலைப் போன்று ஏனையவர்களின் மின்னஞ்சலைப் யாகூ மெயிலிற்கு எடுப்பதைப் போன்று ஜிமெயிலிலும் இதை அறிமுகம் செய்துள்ளனர். ரெட் ஹட் லினக்ஸ் 9 (பழைய பதிப்பு) இயங்குதளத்தில் சுமார் மூன்று வருடங்கள் முன்னர் இணையமூடான மின்னஞ்சல்களைப் பரீட்சித்த போது யாகூ! மெயில் இயங்கியது ஹொட்மெயில் இயங்கவேயில்லை (இப்போது பெடோரா கோர் லினக்ஸ்ஸில் இயங்குகின்றது). உண்மையில் ஜிமெயிலைப் பாவிப்பவர்களின் எண்ணிக்கையை அறிவது கடினமாகவே இருக்கும் இதற்கு ஜிமெயில் ட்றைவ் போன்ற சேவைகளுக்காகத் தனிக்கணக்கை வைத்திருக்கும் ஒரே ஆட்களாகவும் இருக்கலாம். தவிர என்னையே எடுத்துக் கொண்டார் நான் (யாகூ!, ஜிமெயில், ஹொட்மெயில்) ஆகிய மூன்று சேவை வழங்குனர்களில் இருந்தும் மின்னஞ்சலைப் பாவிக்கின்றேன். 2-3 நாட்களில் ஒப்பீட்டை மேலும் மேம்படுத்தப் முயற்சிக்கின்றேன். --Umapathy 11:09, 11 டிசம்பர் 2006 (UTC)
For Gmail, I can't find publicly available figures. I remember seeing something like a few millions some time back, in comparison with a few hundred millions of its rivals (acquired over years).
- (from http://news.bbc.co.uk/2/hi/business/4167633.stm )MSN Hotmail 61.25m
Yahoo! Mail 55.50m AOL E-mail 34.64m Neilsen / / NetRatings (User figures cover US, Brazil, Australia, Hong Kong, UK, France, Germany, Sweden, Italy, Spain and Switzerland) Below could be relevant too.
- http://blog.digitalhomemag.com/page/digitalhome?entry=who_wins_the_battle_of
- http://reviews.cnet.com/4520-9239_7-6526615-1.html
- http://reviews.cnet.com/4520-9239_7-6526615-2.html?tag=txt
- http://jeremy.zawodny.com/blog/archives/005770.html
-- Sundar \பேச்சு 08:25, 12 டிசம்பர் 2006 (UTC)
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
[தொகு]தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
--TrengarasuBOT 01:29, 14 மே 2007 (UTC)
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
[தொகு]தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!