உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஜனனி சுரக்ச யோஜனா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரைத் தலைப்பு இந்தியில் இருக்கக் காரணம்: நடுவண் அரசால் செயல்படுத்தப்படும் இத்திட்டம் தமிழக அரசாலும் அதே பெயரில் செயல்படுத்தப்படுவதால்..... (பெயர் மாறினால் மக்களுக்கு இது நடுவணரசுத் திட்டமா மாநில அரசுத்திட்டமா என்ற குழப்பம் ஏற்பட்டு விடுமல்லவா? )--பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 16:39, 26 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

தலைப்பைத் தமிழ்ப்படுத்தி, கட்டுரையினுள் தலைப்பு முதலில் வரும் இடத்தில் இந்திப் பெயரை அடைப்புக் குறிக்குள் போட்டு விடலாம். தலைப்பு இந்தியில் இருப்பதை தமிழ் ஆர்வலர்கள் விரும்ப மாட்டார்கள். எனவே தலைப்பு மாற்றம் அவசியம். --தேனி.எம்.சுப்பிரமணி. 18:23, 26 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
ஜனனி சுரக்ச யோஜனா என எழுதலாம். க்ஷ எழுத்து இங்கு அவசியமில்லை.--Kanags \உரையாடுக 01:28, 27 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
மொழி பெயர்க்கலாம். மத்திய அரத் திட்டங்களை தமிழில் மொழிபெயர்க்கும் வழக்கம் தமிழ்நாட்டரசிடம் உள்ளது. எ. கா. சர்வ சிக்‌ஷா அபியானை ”அனைவருக்கும் கல்வி” என்று மாற்றியுள்ளார்கள். ஜவகர்/ராஜீவ் வேலை வாய்ப்புத் திட்டம் போன்றவையும் இது போலவே தான். பொதுவாக காரணப்பெயரின்றி, குறிப்பெயர் போல இருந்தால் மொழி பெயர்க்க வேண்டாம் (எ. கா. ஆபரேஷன் ஃபிளட்), மற்றபடி மொழி பெயர்த்து விடலாம். பெயர் மாற்றினாலும் முதல் வரியில் மூலப்பபெயரையும், இந்திய நடுவண் அரசின் திட்டம் என்றும் தெளிவாகக் கூறி விட்டால் குழப்பம் ஏற்படாது--சோடாபாட்டில் 06:10, 27 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

இக்கட்டுரையில் இந்திய நாட்டின் ஒன்றிய அசினை (Union Govt) நடுவண் அரசு (Central Govt) என குறிப்பிட்டிருந்தனர். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை "ஒன்றியம்" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு "ஒன்றிய அரசே". ஆதலால், "நடுவண் அரசு" என வரும் இடங்களை "ஒன்றிய அரசு" என மாற்றியுள்ளேன் - பத்மாக்சி (உரையாடுக) 8:42, 18 சூன் 2017 (IST)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜனனி_சுரக்ச_யோஜனா&oldid=2306802" இலிருந்து மீள்விக்கப்பட்டது