பேச்சு:சொக்கலிங்க பாகவதர்
Untitled
[தொகு]ஒரு முன்னுதாரணமாக இத்தகவலை எழுதுகிறேன்.
இந்தக் கட்டுரையில் ஒரு அறுந்த இணைப்பு இருந்து அதை நீக்கினேன். ஆறாம்திணை என்ற அந்த இணைய இதழ் தளம் இப்போது வலையில் இல்லை. பின்னர் அந்த முகவரியை archive.org இல் தேடியபோது 3 தடவைகள் அந்தப்பக்கம் பரணிடப்பட்டிருந்தது தெரிய வந்தது. அந்தப் பக்கத்தைத் திறந்தபோது அது பழைய TSCII எழுத்துருவில் இருந்ததால் படிக்கமுடியாது போயிற்று. ஆகவே அந்த டெக்ஸ்டை அப்படியே காப்பி பண்ணி அதனை யூனிகோடாக மாற்றி ஒரு Blog உருவாக்கி அதில் பதிவு செய்துள்ளேன். அந்த நேர்காணலில் பல அரிய தகவல்கள் உள்ளன. அதனால் அது அழிந்து போகாமலிருக்க இவ்வாறு செய்துள்ளேன். இப்போது அந்த blog பக்கத்தை வெளி இணைப்புகள் பகுதியில் கொடுத்துள்ளேன். இதை விட சிறந்த மாற்று ஏற்பாடு வேறு யாராவது செய்ய முடியுமானால் செய்யவும். நன்றி. வணக்கம். --UKSharma3 10:29, 26 நவம்பர் 2016 (UTC)
- நன்றி சர்மா ஐயா. இக்கட்டுரையை எழுதிய போது முறையாக நான் மேற்கோள் தரவில்லை. ஆனாலும், நான் ஆறாம்திணைக் கட்டுரையில் இருந்தே தகவல்கள் எடுத்திருந்தேன். திசுக்கி எழுத்துருவில் இருந்தாலும், அதனை மேற்கோளாகக் காட்டுவதே சரியானது. அவ்வாறே இணைத்திருக்கிறேன். உங்கள் பதிவை வெளியிணைப்பகத் தரலாம்.--Kanags \உரையாடுக 11:48, 26 நவம்பர் 2016 (UTC)
- மிக்க நன்றி, கனக்ஸ். படிக்க முடியாமல் இருந்தாலும் மேற்கோளாகத் தரலாம் என்பது எனக்குத் தெரியாது. அதனாலேயே நான் புதிய ஒரு blog உருவாக்கினேன். அதை வெளி இணைப்பாகவே கொடுத்திருந்தேன். பரணிடப்பட்ட பக்கத்தை உங்களால் படிக்க முடிகிறதா? நான் font இறக்கி இன்ஸ்டால் செய்த பின்னரும் என்னால் படிக்க முடியவில்லை. என்ன செய்தால் படிக்கலாம்? --UKSharma3 12:13, 26 நவம்பர் 2016 (UTC)
- இப்போது என்னால் படிக்க முடியவில்லை. இப்போதுள்ள விசைப்பலகைகளில் அதற்கான வசதிகள் இல்லை. முரசு அஞ்சலில் திசுக்கியைப் படிக்கும் வசதி இருக்கிறதா எனத் தெரியாது. இந்த ஆறாம்திணை இணைய இதழ் திசுக்கி இருந்த காலத்தில் மிகவும் புகழ் பெற்றது. நிறையக் கட்டுரைகள் உள்ளன. ஆனாலும் எவரும் அதனை ஒருங்குறிக்கு மாற்றி வெளியிட்டிருப்பதாகத் தெரியவில்லை. என்னுடைய வலைப்பதிவுகளும் நான் தொன்னூறுகளின் இறுதியில் ஆரம்பித்த போது திசுக்கியில் தால் எழுதியிருந்தேன். பின்னர் ஒருங்குறிக்கு மாற்றி விட்டேன்.--Kanags \உரையாடுக 12:20, 26 நவம்பர் 2016 (UTC)
- மிக்க நன்றி, கனக்ஸ். படிக்க முடியாமல் இருந்தாலும் மேற்கோளாகத் தரலாம் என்பது எனக்குத் தெரியாது. அதனாலேயே நான் புதிய ஒரு blog உருவாக்கினேன். அதை வெளி இணைப்பாகவே கொடுத்திருந்தேன். பரணிடப்பட்ட பக்கத்தை உங்களால் படிக்க முடிகிறதா? நான் font இறக்கி இன்ஸ்டால் செய்த பின்னரும் என்னால் படிக்க முடியவில்லை. என்ன செய்தால் படிக்கலாம்? --UKSharma3 12:13, 26 நவம்பர் 2016 (UTC)
@Kanags: கட்டுரையில் 'பிராட்காஸ்ட் ரிக்கார்டிங் கம்பெனி' எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். அவரது நேர்காணலில் இந்தப் பெயர் உள்ளது. ஆனால், இப்படி ஒரு கம்பெனி இருந்ததாகத் தெரியவில்லை. அவர் குறிப்பிட்டுள்ளது மியூசிகல் புரொடக்ட்ஸ் லிமிட். கம்பெனியாக இருக்கும் என்று தோன்றுகிறது. இவர்களுடைய லேபல் Broadcast என இருந்ததாக இந்து நாளிதழில் எஸ். முத்தையா எழுதியிருக்கிறார். பார்க்கவும். பாகவதர் குறிப்பிட்டது இந்தக் கம்பெனியாகத் தான் இருக்க வேண்டும். உரிய மாற்றம் செய்தால் நல்லதென நினைக்கிறேன்.--UKSharma3 00:43, 27 நவம்பர் 2016 (UTC)
- இந்தக் கட்டுரையில் சீதா கல்யாணம் இசைத்தட்டுத் தொகுதி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சொக்கலிங்க பாகவதர் பெயர் இல்லை.--UKSharma3 00:47, 27 நவம்பர் 2016 (UTC)
- நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம். அவர் சரியான பெயரை மறந்திருக்கலாம் என்றே நினைக்கிறேன். மற்றும் ஒரு சந்தேகம். இந்தப் பாடல்கள் சீதா கல்யாணம் படத்துக்காக ஒலிப்பதிவு செய்யப்பட்டதா? அல்லது ரெக்கார்டுக்காகப் பதிவு செய்யப்பட்டதா? நேர்காணலிலும் அவர் திரைப்படம் எனக் குறிப்பிடவில்லை. இது குறித்த பகுதியைத் திருத்தி விடுங்கள்.--Kanags \உரையாடுக 01:48, 27 நவம்பர் 2016 (UTC)
- ஆயிற்று - இது தனி இசைத்தட்டுத் தொகுதியாக வந்ததாகவே சுதேசமித்திரன் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலத்தில் பின்னணி பாடும் வழக்கம் இல்லாததால் சீதா கல்யாணம் திரைப்படத்தில் இந்தப் பாடல்கள் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை.
இவர் தனது நேர்காணலில் சம்பூர்ண மகாபாரதம் என்ற படம் பற்றிக் குறிப்பிடுகிறார். ஆனால் அப்படி ஒரு படம் வந்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை படம் பாதியில் நின்றிருக்கலாம் அல்லது வெளிவராமலே இருந்திருக்கலாம். --UKSharma3 04:58, 27 நவம்பர் 2016 (UTC)
@கி.மூர்த்தி: கட்டுரையில் நான் செய்த கடைசி இரண்டு மாற்றங்களையும் காரணம் எதுவும் சொல்லாமல் நீக்கியிருக்கிறீர்கள். நான் மேற்கோளோடு கொடுத்த தகவலை நீக்கியதற்கான காரணம் என்ன என்று சொல்லவும் --UKSharma3 உரையாடல் 05:00, 2 மார்ச் 2018 (UTC) (@Kanags: - உங்கள் கவனத்துக்கு)