பேச்சு:சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு
சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
@Kanags:, @Fahimrazick: 'சைகு சாயிது' - தவறான உச்சரிப்பைத் தருகிறது. 'Sheikh' என்ற பெயருடன் உள்ள பல்வேறு கட்டுரைகளிலும் 'சேக்' என்றே கையாளப்பட்டுள்ளது. தவிர 'விளையாட்டரங்கு' என்பது அனைத்து விளையாட்டுகளும் ஆடப்படும் பொதுவான அரங்கு என்று பொருள்படுவது போல் உள்ளது. அலுவல்முறை பெயரின்படி 'துடுப்பாட்ட அரங்கம்' (cricket stadium) என்பதே சரி. SharadSHRD7 (பேச்சு) 03:43, 21 அக்டோபர் 2021 (UTC)-[பதிலளி]
- சேக் என்றெழுதுவது இலக்கணப் பிழை. யார் எழுதினாலும் பிழை பிழையே. துடுப்பாட்ட அரங்கு என்றெழுதுவதைப் பற்றி என்னிடம் மறுப்பில்லை.--பாஹிம் (பேச்சு) 09:40, 21 அக்டோபர் 2021 (UTC)[பதிலளி]
- @Fahimrazick:, வேற்றுமொழிப் பெயர்களில் இலக்கணப் பிழையை விட உச்சரிப்பைக் கருத்தில் கொள்வதே முக்கியம். சேக் அசீனா, சேக் கலீபா பின் சயத் அல் நகியான் என்று பல்வேறு கட்டுரை தலைப்புகளிலும் உச்சரிப்புக்கு ஏற்றவாறு 'சேக்' என்றெழுதம் முறையே கையாளப்பட்டுள்ளது. SharadSHRD7 (பேச்சு) 01:31, 22 அக்டோபர் 2021 (UTC)[பதிலளி]
- சேக் என்றெழுதுவது இலக்கணப் பிழை. யார் எழுதினாலும் பிழை பிழையே. துடுப்பாட்ட அரங்கு என்றெழுதுவதைப் பற்றி என்னிடம் மறுப்பில்லை.--பாஹிம் (பேச்சு) 09:40, 21 அக்டோபர் 2021 (UTC)[பதிலளி]
எந்த மொழியில் சேக் என்று சொல்லப்படுகிறது? நீங்கள் சுட்டியவை எல்லாம் அறபு மொழிப் பெயர்கள். الشيخ என்னும் அச்சொல்லின் அடிப்படை உச்சரிப்பைத் தமிழில் எழுதவே முடியாது. அடுத்தது, ஷேகு என்று சொல்லப்படுவது தமிழில் தொன்று தொட்டு வழக்கத்தில் இருப்பதே. ஆயினும் அறபுச் சொல்லமைப்பின் படி ஷைகு என்றே வர வேண்டும். இங்கே ககர ஒற்றை விடக் குகரமே அறபு ஒலிப்புக்கு நெருங்கியது. அத்துடன் கிரந்தம் நீக்கி சை என எழுதப்பட்டது. அறபு மொழிப் பெயர்களில் சில சொற்கள் அவை எழுதப்படும் முறையிலேயே ஒலிக்கப்படுவதில்லை. எடுத்துக் காட்டாக, யமன் என்றெழுதி விட்டு யெமன் என்றே வாசிக்கப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 08:37, 22 அக்டோபர் 2021 (UTC)[பதிலளி]