பேச்சு:சுப்பிரமணியம் சீனிவாசன்
Untitled
[தொகு]வாசன் இயக்கிய படங்கள் என்ற பட்டியலில் உள்ள அனைத்துமே அவர் தயாரித்த படங்கள் தானே?! -- பயனர்:மாயவரத்தான், 23 மார்ச்சு 2013
இக்கட்டுரையில் "சுப்பிரமணியம் சீனிவாசன் பரவலாக எஸ். எஸ். வாசன் (சனவரி 4, 1904 - ஆகத்து 26, 1969) என்று அறியப்படும் திரைப்படத் தயாரிப்பாளர். 1928இல் 'ஆனந்த போதினி' என்ற இதழை விலைக்கு வாங்கி ஆனந்த விகடன் எனப் பெயரிட்டார்." என எழுதப்பட்டுள்ளது. ஆனந்த போதினி வேறு இதழ். முனுசாமி முதலியார் என்பவரால் அது வெளியிடப்பட்டு வந்தது. 1926 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் புதூர் வைத்தியநாதஐயர் என்பவர் ஆனந்த விகடன் இதழைத் தொடங்கினார். (1926 பெப்ரவரி முதல் இதழின் தோற்றம்) மாதம் ஒரு இதழ் வெளியானது. வருடச் சந்தா 2 ரூபா. நிதிப் பிரச்சனையால் 1927 டிசம்பர் இதழ் வெளிவரவில்லை. விகடன் இதழைத் தனக்கு விற்றுவிடும்படி 1928 ஜனவரியில் வாசன் வைத்தியநாதையரிடம் கேட்டார். வைத்தியநாதஐயரும் சம்மதித்தார். 1928 பெப்ரவரி தொடக்கம் ஆனந்த விகடன் வாசனின் உரிமையில் வெளிவரத்தொடங்கியது. 1928 பெப்ரவரி இதழின் மேலட்டையை இங்கே பார்க்கலாம்.--UKSharma3 09:35, 14 மார்ச் 2017 (UTC)--UKSharma3 09:21, 14 மார்ச் 2017 (UTC)
இதையும் பார்க்கவும் --UKSharma3 09:35, 14 மார்ச் 2017 (UTC)--UKSharma3 09:30, 14 மார்ச் 2017 (UTC)
- நன்றி. தொகுப்பை மீளமைத்திருக்கிறேன். ஆங்கில விக்கிக் கட்டுரையிலும் திருத்த வேண்டும்.--Kanags \உரையாடுக 09:44, 14 மார்ச் 2017 (UTC)
விருப்பம் --UKSharma3 13:44, 14 மார்ச் 2017 (UTC)
- ஆங்கிலக் கட்டுரையில் விபரம் திருத்தியுள்ளேன்.--UK
Sharma3 14:06, 14 மார்ச் 2017 (UTC)