உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சீமன்சு ஆய்வும் விருத்தியும்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விருத்தி என்னும் சமசுக்கிருதச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் வளர்ச்சி. ஆனால் இங்கு விருத்தி அல்லது வளர்ச்சி கூறுவதற்கு மாறாக சீமன்சு ஆய்வும் மேம்படுத்தலும் என்றால் சரியாக இருக்கும். ஏனெனில் அவர்கள் செய்பொருள்களை மேம்படுத்துதைப் பற்றி இங்கு கூறுகிறார்கள். Research and Development (R&D) என்பதை ஆய்வும் மேம்படுத்தலும் (ஆ.மே) எனலாம். ஒரு குமுகத்தை அல்லது ஒரு பகுதியை வளர்த்தெடுப்பது (development) வளர்ச்சி எனலாம். ஒரு செய்பொருளை உருவாக்கி மேம்படுத்துதலை, மேம்படுத்தல் என்றே கூறலாம் என நினைக்கின்றேன்.--செல்வா 15:00, 9 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

மேம்படுத்தல் என்பது improvement ஐக் குறிக்கிறது, வளர்ச்சி growth ஐக் குறிக்கிறது. இங்கே பொருள் துல்லியம் இல்லாமல் உள்ளது. --Natkeeran 15:20, 9 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
Research and Development என்பது பரந்த பொருளில், பல்வேறு கோணங்களில் புரிந்துகொள்ளப்படும் தொடர். முற்றிலும் புதிய ஒரு பயன்பொருளை உருவாக்கி வளர்தெடுத்து செப்பம் செய்வதையும் குறிக்கும். உள்ளதை மேம்படுத்த செய்யப்படும் முறைசார்ந்த முயற்சிகளையும் குறிக்கும். டெவெலப்மெண்ட் என்னும் சொல்லுக்கு இவ்வெல்லா பொருளும் இயல்பாய் அமைவதில்லை. காலப்போக்கிலும் இடம்-சூழல் சார்ந்தும் அமைகின்றன. growth என்று நீங்கள் நினைத்தால் அது வளர்ச்சி என்பதுதான். grwo = வளர் என்பது எளிய ஒன்று. தமிழ்ச்சொல்லில் வளர் என்பதிலேயே வலிமையும் வளமும், நலமும் இருப்பதாகவே நான் நினைக்கின்றேன். வளமான, வள்ளிய, வள் (கூர்மை, அறிவு) ஆகிய பொருள்களும் கொள்ளும். எனவே வளர், வளர்ச்சி பொருந்தும். ஆனால் ரிசர்ச் அண்டு டெவலப்மெண்ட்டு என்று கூறுவதை பலர் பலவிதமாக வரையறை செய்கின்றனர்: (ஆங்கில விக்கி): The phrase research and development (also R and D or, more often, R&D), according to the Organization for Economic Co-operation and Development, refers to "creative work undertaken on a systematic basis in order to increase the stock of knowledge, including knowledge of man, culture and society வேறு ஓர் இடத்தில் ("refers to systematic investigation or experimentation involving Innovation or technical risk, the outcome of which is either new Knowledge (with or without a specific practical application) or new or improved materials, products, devices, processes, or services. இன்னொரு இடத்தில் (http://www.egr.unlv.edu/CAS/glossary.htm) All research activities, both basic and applied, and all development activities that are supported at universities, colleges and other non-profit institutions. (இலாப நோக்குள்ள தொழிலங்களிலும் நிகழ்வதை இது கண்டு கொள்ளவில்லை!). define:research and development என்று கூகுளில் இட்டுத் தேடினால் பல பொருள்கள் கிடைக்கின்றன. ஆய்வு என்பதே புதியதைக் கண்டுபிடிக்கவே (அது ஏன், எதனால், எப்படி என்றெல்லாம் ஆய்வதும் அடங்கும், இதன்வழி முன்பு அறியாததை அறியவும், அப்படியே அரைகுறையாய் அறிந்திருந்தாலும் உறுதிபட முறையான வழியில் அணுகி உறுதிசெய்து கண்டுபிடிப்பதற்கும் பொருந்தும்). ஆகவே ஆய்வு என்பதே போதும், ஆனால் டெவலப்மெண்ட்டு என்பது பொதுவாகப் பயன்பாட்டு நோக்கில் நன்மைதரும் உருவாக்கத்துக்கும் மேம்பாட்டுக்கும் செய்யப்படும் வினைகளைக் குறிக்கும். Research and Development என்பது ஒரு மரபுத்தொடர்போல் ஆகிவிட்டது. ஆய்வும் வளர்ச்சியும் அல்லது ஆய்வும் வளர்த்தெடுப்பும் என்பது பிடித்திருந்தால் ஆளுங்கள், ஆனால் விருத்தி, அபிவிருத்தி போன்ற சமசுக்கிருதச் சொற்கள், தமிழில் தக்க சொற்கள் இருக்கும் பொழுது தேவையின்றி ஆளவேண்டாமே என்பதே கருத்து. கை என்பதை ஹாண்டு என்றும், மூக்கு என்பதை நோஸ் என்றும் சிலர் எழுதுகிறார்கள். டாட்டர் என்று பலர் சொல்கிறார்கள். மகள் என்னும் சொல் வழக்கொழிகின்றது. பொண்ணு என்பது இன்று மகள் என்னும் பொருளையும் கொள்கின்றது. தமிழில் செப்பனிடல் என்பது ரிப்பேர், ஆனால் ரிப்பேர் என்றே எழுதிவந்தால் செப்பனிடல் அருகித் தொலைந்தே போய்விடும். செப்பனிடல் இருந்தால் செப்பம், செப்பம் செய்தல், என்பனவற்றோடு தொடபு உணர்த்திக்கொண்டு நிற்கும். இவற்றை எல்லாம் நீங்களும் அறிவீர்கள் என்றாலும், மற்றவர்களும் இதனை எண்ணிப்பார்க்கவே இடுகின்றேன்.--செல்வா 16:22, 9 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]