உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதிய தனிக் கட்டுரை...[தொகு]

தமிழ்த் திரையுலகில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பினை வழங்கியவர்களுள் ஒருவர், சிவாஜி கணேசன். இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் குறித்த விளக்கமான பட்டியலைத் தரும்வகையிலேயே இந்தப் புதிய தனிக் கட்டுரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிவாஜி கணேசன் கட்டுரையில் ஏற்கனவே இருந்த பட்டியலை அப்படியே எடுத்து, புதிய கட்டுரையில் இட்டுள்ளேன்.

பட்டியலின் அமைப்பு...[தொகு]

பரிந்துரைகள்[தொகு]

  1. சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள் என தலைப்பினை நகர்த்த பரிந்துரைக்கிறேன்.
  2. 1951 - 1960, 1961 - 1970, 1971 - 1980, 1981 - 1990 என்பனவாறு துணைத் தலைப்பிடலாம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:57, 31 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
2. ஆண்டுகளை மாற்றுவதானால் எல்லா Table களையும் மாற்ற வேண்டியிருக்கும் --UKSharma3 06:02, 31 அக்டோபர் 2016 (UTC)

தங்களின் ஒப்புதல் இருந்தால் போதுமானது; கட்டுரையை மேம்படுத்தும்போது, இந்த மாற்றத்தை செய்துகொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:13, 31 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

உப தலைப்பை 50கள், 60கள் ... எனக் கொடுக்கலாமென நினைத்தேன். ஆங்கிலத்தில் 50s, 60s என்று தான் கொடுத்திருக்கிறார்கள். 51-60 எனக் கொடுத்தால் அதில் 60 ஆம் ஆண்டு 50 களுடன் சேராது. என் ஒப்புதல் எதற்கு?.என் கடமையை செய்துவிட்டேன். இனி விக்கி நடைமுறைப்படி நடக்கட்டும். நன்றி --UKSharma3 08:22, 31 அக்டோபர் 2016 (UTC)
  • எனது பரிந்துரையை தெரிவித்தேன்; மற்றபடி விக்கி நடைமுறைப்படியின் கீழ் அந்தக் கருத்து வராது. ஒரு கட்டுரையில் பெருமளவு பங்களித்தவரின் ஒப்புதல் / இணக்கம் இல்லாது, எவ்வித வடிவமைப்பு மாற்றத்தையும் நான் செய்வதில்லை.
  • இக்கட்டுரையின் வடிவமைப்பு குறித்து தாங்கள் தெரிவித்துள்ள விளக்கத்தை ஏற்கிறேன்.
  • கட்டுரையை பெருமளவு விரிவாக்கம் செய்ய தாங்கள் செலவிட்ட நேரத்திற்கும், பொறுமைக்கும் உழைப்பிற்கும் எனது நன்றிகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:23, 31 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
உங்கள் உதவியும், ஊக்கமும் இல்லாமல் இதைச் செய்திருக்க முடியாது. கிட்டத்தட்ட 18 மணி நேரத்துக்கு மேல் செலவானது. என்றாலும், நல்லதொரு பணியைச் செய்த மன நிறைவு ஏற்பட்டுள்ளது. சிவாஜியின் பராசக்தி வந்தபோது எனக்கு 8, 9 வயது. அப்பா என்னைக் கூட்டிப் போய் அந்தப் படத்தைக் காட்டியது இன்றும் நினைவில் இருக்கிறது. இதனைத் தொகுக்கும்போது சிவாஜியின் திரைப்படங்களூடாக நானும் பயணித்தேன். ஒவ்வொரு கால கட்டத்திலும் அந்தந்தப் படங்களைப் பார்த்ததும், அவற்றுக்குக் கிடைத்த வரவேற்பு பற்றியும் என் மனதிற்குள் காட்சிகள் விரிந்தவண்ணம் இருந்தன. 90களுக்கு வந்தபோது என்னையறியாமல் என் கண்கள் ஈரமாகின. எப்பேர்ப்பட்ட ஒரு நடிகர்! எத்தனை விதம் விதமான பாத்திரங்கள். அவரின் இடத்தை நிரப்ப இனி யாராலும் முடியாது. நன்றி செல்வா. --UKSharma3 11:03, 31 அக்டோபர் 2016 (UTC)

அதிதி[தொகு]

அதிதி என்ற சொல் பொதுவாகப் பயன்படுத்தப்படுவதில்லை. கௌரவ நடிகர் என்பதே பொதுவாகத் திரையுலகில் பயன்படுத்தப்படுகிறது. கௌரவம் என்பது தமிழ்ச் சொல்லும் இல்லை. சிறப்புத் தோற்றம் என்பதைப் பயன்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 09:00, 31 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

ஆங்கிலத்தில் Guest artiste என்று இருந்தது. Guest என்பதற்கு அதிதி, விருந்தினர் என்ற இரண்டு சொற்கள் தான் தமிழ் அகராதியில் இருந்தன. ஆகவே அதிதி என்பதைப் பயன்படுத்தினேன். சிறப்பு நடிகர் என்றால் அவருக்கல்லவோ முக்கிய இடம் என்றாகிவிடும். அதை விட அதிதி பொருத்தமான சொல் என்பது என் கருத்து. அதிதி ஒரு பழந்தமிழ் சொல். பொதுவாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்று சொல்ல முடியாது. இங்கே எத்தனையோ விளம்பரங்களில் அந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது. தொலைக்காட்சி விளம்பரங்களில் கூட பார்த்து/கேட்டிருக்கிறேன். நீங்கள் நிர்வாகி. மாற்றவேண்டுமானால் மாற்றிவிடுங்கள் --UKSharma3 10:52, 31 அக்டோபர் 2016 (UTC)
அதிதி என்பது தமிழ்ச் சொல் அல்ல. அதனை விட வழக்கத்திலுள்ள கௌரவ நடிகர் என்பதைப் பயன்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 08:32, 1 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]