பேச்சு:சார்பு
இக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே. |
--Natkeeran 18:20, 29 ஜூன் 2006 (UTC)
சார்பு என்று பொதுவாக பயன்படுத்தப்பட்டால், அச்சொல்லையே பயன்படுத்தலாம். இலங்கையில் அச்சொல்தான் வழக்கம். தமிழ்நாட்டில் எந்த சொல் வழக்கம்? --Natkeeran 00:19, 14 ஜூலை 2007 (UTC)
சார்பு என்ற சொல்லே தமிழ்நாட்டிலும் இலங்கையில் வழக்கத்தில் உள்ளதாக தற்போது [1] அறிய முடிகின்றது. எனவே இச்சொலையே இனி பயன்படுத்தலாம். நன்றி. --Natkeeran 00:17, 29 செப்டெம்பர் 2007 (UTC)
- சார்பு என்பதற்கான விளக்கம் பின்வருமாறு உள்ளது:
- சார்பு (function) உள்ளீடுகளுக்கும் வெளியீட்டுக்கும் இருக்கும் தொடர்பை விபரித்து அமுலாக்கும் ஒரு கூறு ஆகும்.
- இங்கே அமுலாக்கும் என்பது எதனைக் குறிக்கிறது? இதனைப் பின்வருமாறு மாற்றலாம் என எண்ணுகிறேன்:
- சார்பு என்பது உள்ளீடுகளுக்கும், வெளியீட்டுக்கும் இடையிலான தொடர்பை விளக்கும் ஒரு வழிமுறை ஆகும். Mayooranathan 08:05, 29 செப்டெம்பர் 2007 (UTC)
- சார்பு என்னும் சொல்லாட்சியே சரியானதாக எனக்குப் படவில்லை. சார்பியம் என்றாவது இருந்திருக்கலாம். சார்பு என்பது அது சார்ந்திருக்கும் செயற்கூறுகளின் மதிப்பால் மாறுபடும் அல்லது உருப்பெறும் ஒன்று என்று விளக்கலாம் என்று நினைக்கிறேன். சரியான வரையறை என்னவென்று பின்னர் பார்த்துப் பரிந்துரைக்கிறேன்--செல்வா 22:11, 13 ஆகஸ்ட் 2008 (UTC) செயற்கூறு என்பது வேண்டாம் எனில், உட்கூறு என்று கூறலாம்.--செல்வா 22:13, 13 ஆகஸ்ட் 2008 (UTC)
- இந்த் சொல் தமிழ்நாட்டிலும் இலங்கையில் பாடநூல்களில் வழக்கத்தில் உள்ள சொல். இந்த சொற்பிறப்பியல் நான் அறியேன். --Natkeeran 23:04, 13 ஆகஸ்ட் 2008 (UTC)