பேச்சு:சான் சல்லிவன்
Appearance
Untitled
[தொகு]stephen, store என்பது போன்ற இடங்களில் வரும் stஐக் கிரந்தம் இன்றி எழுதுவது எப்படி? சிட்டீபன், சிட்டோர் என எழுதலாமா? சிடீபன், சிடோர் என்றால் sdepen, sdore என்று d ஒலிவருகிறது. சுட்டீபன், சுட்டோர் என்று எழுதுகையில் சுகர ஒலி மிகக் கடுமையாக வருகிறது. ஸ் எங்கே சு ஆகிறது, எங்கே சி ஆகிறது, எங்கே விடுபடுகிறது என்பதற்கு ஏதாவது எளிய வழிகாட்டு விதி உண்டா?( ஸ்நேகா - > சிநேகா ; ஸ்வாமி - சுவாமி ; ஸ்தலம் - தலம்) நன்றி (இது கிரந்தம் நீக்கி எழுத விரும்புவோருக்கான குறிப்பு மட்டுமே. அனைவரையும் நீக்கி எழுதச் சொல்வதற்காக அல்ல)--ரவி 14:13, 12 அக்டோபர் 2009 (UTC)