உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சத்திய சாயி பாபா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு மூன்று வரிக் கட்டுரையாக தலைப்பிட்டு இருந்தது. மூன்று வரியில் பல கட்டுரைகள் உள்ளன. ஆனால் 3 வரிக் கட்டுரை எழுதுவதற்குப் பதில் குறைந்தபட்சம் 15 வரிகளாவது இருந்தால்தான் குறுங்கட்டுரையாகும் அது யாருக்கவாது பயனளிக்கும். இதை மேலும் தொகுக்கலாம்.--செல்வம் தமிழ் 02:41, 4 மார்ச் 2009 (UTC) நண்பர்கள் ஒலிக் கோப்பை பதிவேற்ற உதவி புரியுங்கள் அப்படியே எனக்கும் வழி முறைகளை சற்று எளிமையாக விளக்கினால் நலமாக இருக்கும் அ என்க்கு மின்னஞ்சல் செய்யுங்கள். ஒத்தாசை பக்கத்திலும் கேட்டுள்ளேன். இதன் ஒலிக் கோப்புக்கின் ஆதாரங்கள் நிறைய இணையத்திலிருந்து இறக்கி வைத்துள்ளேன்.--செல்வம் தமிழ் 04:31, 4 மார்ச் 2009 (UTC)

இக்கட்டுரையில் சத்திய சாயி பாபா பற்றிய எந்த ஒரு சார்பான தகவல்களும் தரப்படவில்லை. முழுக்க எதிரான கருத்துக்களே உள்ளன. அவரைப்பற்றிய நல்ல தகவல்கள் ஒன்றும் இல்லையா? அல்லது நாட்டுக்கோ, மக்களுக்கோ அல்லது மதத்துக்கோ ஒன்றுமே அவர் செய்யவில்லையா? வெறுமனே லீலைகள் புரிந்த ஒருவரா? அப்படியானால் அவரை ஏன் பலர் போற்றுகின்றனர்?--Kanags \பேச்சு 07:07, 4 மார்ச் 2009 (UTC)

தன்னைக் கடவுள் என்றுக் கூறிக்கொண்ட ஒருவரால் எப்படி நாட்டக்கு நல்லது கூறமுடியும். அவர் என்ன நல்லது கூறினார் என்று நீங்களே கட்டுரையில் சொல்லுங்கள். மனிதன் எப்படிக் கடவுளாக முடியும் பிபிசி யும் அமெரிக்க தூதரகமும் நேரிடையாக கணைடபிறகு இந்திய தொலைக்காட்சியும் கண்டபிறகு எப்படி நல்லது கூற முடியும் இன்னும் நிறைய உள்ளன. அக்கட்டுரை முழுவதும் தொகுத்தால் எல்லாம் தெரியும் பிரேமானந்தா கூடத்தான் நல்லது சொன்னார். நல்லது நமக்கே தெரியவேண்டாமா. இதற்கு அவர் என்ன கூறுவது. சிரிடி சாய்பாபாவின் அவதாரம் சென்றார் அதிதான் நல்லது அது போன்ற விடயங்களை கட்டுரையில் தாராளமாக உள்ளது. தவறு கடவுளே செய்தாலும் தவறுதான் அவருக்கு எதிர்ப்பாக இருப்பதென்றால் அவர் விவேகானந்தர் மாதிரி இருந்திருக்கவேண்டும். இருந்தாரா. நல்லதை நீங்கேள சொல்லுங்கள் பார்ப்போம் கட்டுரையில்.--செல்வம் தமிழ் 12:25, 4 மார்ச் 2009 (UTC)

நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் செல்வம்? பிபிசி யாரோ சிலர் சொல்வதைப் பேட்டி கண்டு சொல்கிறது. சரி, அவற்றுக்கான இணைப்பையாவது தாருங்கள். நேரம் கிடைக்கும் போது கட்டுரையை விரிவாக்குகிறேன். நன்றி.--Kanags \பேச்சு 12:44, 4 மார்ச் 2009 (UTC)


இவருக்கு எதிராக நிறைய ஆவணப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. பிபிசி ஒரு அனைத்துலக நடுநிலைமை ஊடகம் என்றே கருதப்படுகிறது. இவற்றை கட்டுரையில் முன்வைக்க தயங்க தேவை இல்லை.

நிகழ்படத் துண்டு பதிவேற்றம்

[தொகு]

செல்வம் தமிழ், ஆங்கில விக்கியில் இருந்து 'பிபிசி நிகழ்படத்துண்டு ஒன்றைப் பதிவேற்றியுள்ளேன். அது சரிவர இயங்குகின்றது. அது போலவே பிறவற்றையும் பதிவேற்றலாம். முதலில் ஆங்கில விக்கியில் நிகழ்படத்துண்டு அல்லது ஒலிக்கோப்பை சொடுக்குங்கள் (ஆங்கில விக்கியில்). பின்னர் அப்படம்.கோப்பின் அடியில் ஒரு கோப்பின் பெயர் இருக்கும் (இந்த நிகழ்படக்கோப்பின் பின்னொட்டு .ogv). அதனை உங்கள் கணினிக்கு இறக்குங்கள். பின்னர் தமிழ் விக்கியில் அக்கோப்பைப் பதிவேற்றுங்கள் (இது காமன்சு என்னும் பொது வைப்பில் இல்லாததால் இப்படி செய்ய வேண்டியுள்ளது). ஒலிக்கோப்பாய் இருந்தால் கோப்பின் பின்னொட்டு .ogg என்று இருக்கும். நீங்களும் முயன்று பாருங்கள் இடக்கு முடக்காக ஏதும் நடந்தால் இங்கோ, ஒத்தாசைப்பக்கத்திலோ தெரிவியுங்கள், யாரேனும் ஒருவர் உதவ முற்படுவர். --செல்வா 13:23, 4 மார்ச் 2009 (UTC)

செல்வா நன்றி--செல்வம் தமிழ் 03:44, 5 மார்ச் 2009 (UTC)


அனைத்து நடுநிலை பயன நண்பர்களுக்கு உங்களின் ஆதரவை வேண்டுகின்றேன்

[தொகு]

நான் அனைத்து கட்டுரைகளைளும் ஆங்கிலவிக்கியின தமிழ் மொழியாக்கம் தான் அவையனைத்தும் ஏற்றுக் கொள்ளும் பொழுது இதையும் இன்னொமொரு கட்டுரையும் நடுநிலைக்கு விடப்பட்டுள்ளது. பொதுவிவாதத்திற்கு முன் பயன நண்பர் இது ஒருதலைபட்சமானது, என்ற ஐயம் எழுகின்றது .

இவர் ஆங்கிலம் அறிந்தவர். இது ஆங்கிலத்தில் வரிக்கு வரி மாற்றமால் முதல் மூன்று பத்திகள் அப்படியே இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மீதியை இன்னொரு நண்பர் அ நானே மாறி மாறி தொகுக்கவேண்டும். இது தானே முறை. இதுவே இன்னொருவர் (3 வரிகள்) எழுதிய கட்டுரை தான். நான் தொடர்ந்து எழுதினேன். இன்னொருவர் யாராவது தொடருங்கள்.

இது ஒருதலை பட்சமான செயலாகக் கருதுகின்றேன். என் ஆதரவாளரை நீங்கள் எப்படித் தரக்குறைவாக எழுதலாம் என்று கேட்பது போல் இதையும் இன்னொரு கட்டுரையும் உட்படுத்தியிருக்கின்றார்கள்.

மேலும் பயனர் கேட்கின்றார் இவரைபற்றி எதிரான கருத்துக்களே கூறியிருக்கின்றேன். ஆங்கில கட்டுரையில் உள்ளவர் என்ன எழுதியிருக்கின்றாரோ அதை அப்படியே மொழி பெயர்த்துள்ளேன் என்பது அவர்களுக்கும் தெரியும். அவர்கள் அங்கே பார்த்து விட்டுத்தான் இதை உட்படுத்தியிருக்கின்றார்கள், தமிழில் வெட்டவெளிச்சமாகிவிட்டதே.

நான் கட்டுரை உள்ளிடுவதற்குள்ளேயே உடனே கருத்து தெரிவித்து விடுகின்றனர். நான் இதுவரை அவர்கள் கட்டுரை என்று பார்ப்பதில்லை நேரமுமில்லை. எனக்கு தெரிவதும் இல்லை.

கட்டுரையின் எண்ணிக்கை முக்கியமன்று நல்ல எண்ணம் தான் முக்கியம். பணி செய்பவர்கள் கூட தவறு செய்யலாம் தொண்டு செய்பவர்கள் தவறுவதில்லை. இதை தொண்டாகத்தான் கருதுகின்றேன்.


பாயனர் கேள்விப்படி ஆங்கிலத்தில் கருத்து இருந்தால் தவறில்லை அதையே தமிழில் எழுதினால் தவறு என்ற பொருளா. நான் நடுநிலைக் குட்படுத்துவேன் நான் வைத்தது தான் சட்டம் என்ற பொருளா.

இது பாரபட்சமான செயலா இல்லையா. இது ஒரு தலை பட்சமான செயலா இல்லையா. இதை வேறு எந்த தமிழகத்தில் உள்ள பயனர்வர்களும் கருத்து தெரிவிக்கவில்லையே.


தமிழர்களுக்கு இவரைபற்றி அவதூறாக தெரிந்து விட்டதே என்ற வருத்தமா. அதையே சுட்டிக் காட்டுகின்றது உங்களுடைய கேள்வி. நான் யாரையும் வேண்டும் வேண்டாதவன் என்று பார்ப்பதில்லை. என் செயலை இழிவு படுத்துவது ஆகும். விக்கியில் விளையாட நான் விரும்பவில்லை.

முன்னாள் பத்திரிகையாளன், முன்னாள் பிழை திருத்துநர், பத்திரிகா தர்மம் பற்றி எனக்குத் தெரியும் நடுநிலை பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.

மேல் கூறியது போல் என்றால் உங்களுக்கு எப்படி கட்டுரை எழுத வேண்டும் யார் யார் பிடிக்கும் என்று வரையறுத்து வெளியிடவேண்டும். அதன்படி கட்டுரை எழுத முனைபவர்கள் முனைவோம்.

நீங்கள் கேட்கின்ற கேள்வி விக்கியே அதிர்ச்சியுறும் அளவுக்கு கேட்கிறீர்கள். நீங்கள் கேட்பதற்கு முன்னரே நான் அதில் மொழி பெயர்ப்புக் கட்டுரை என்று முதலிலேயே குறிப்பிட்டுவிட்டேன். அந்த கட்டுரையைத்தான் நடுநிலைக்குட்படுத்தவேண்டும். ஆதரித்து எப்படி சொந்தக் கருத்துக்களை உள்ளிட முடியும்.

அதை நீங்கள் செய்ய வேண்டும் ஆதரவாக எழுதினால் ஆதரவு என்று சொல்கிறீர்கள். அதையும் நான் செய்வதில்லை. எனக்கு தனிபட்ட முறையில் அவர் ஏதும் அறிவுரை சொன்னதில்லை. நான் அதை கேட்பவனும் இல்லை. அதை நான் இங்கு எழுதவும் முடியாது. ஆங்கிலத்தில் எதிர்த்து எழுதபட்டிருந்தால் நான் என்ன செய்யமுடியும்.

எனக்கு சாய்பாபா என்ன எதிரியா அ உறவா.

உங்களிடமிருந்து (குறிப்பிட்ட பயனர்) மட்டுமே விமர்சனம் வரும் என்று எதிர்பார்த்தேன் அதேபோல் வந்திருக்கின்றது. இந்த செயலில் நடுநிலை இல்லை. விக்கியில் தங்கள் ஆளுமை புரிவது போல் நடவடிக்கைகள் உள்ளது போல் சந்தேகம் எழுகின்றது அதை உறுதி செய்வது போல் உங்கள் கருத்துக்கள் மற்றும் கேள்விகள் எழுகின்றன.

ஒரு கட்டுரை என்பது என்னுடைய சொந்த கருத்து அல்ல ஒரு கட்டுரையை பலரும் சேர்ந்து தொகுக்கவேண்டும். நான் எழுதியதால் எனக்கு உரிமையானதும் அல்ல.

நடுநிலை நண்பர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டுகொள்கின்றேன்.

ஆங்கில கட்டுரையை மாற்றி எழுதியிருக்கின்றேனா என்று பாருங்கள்.வரிகளை விட்டிருப்பேன் ஆங்கிலத்தில் மிக கடுமையாக விமரிசித்து இருக்கின்றார்கள். அதை அவ்வூர் நண்பர்களே எழுதியிருக்கின்றார்கள் போலிருக்கின்றது.

இதேபோல் வர்ணம் இந்து வையும் நடுநிலைக்குட்படுத்தியிருக்கின்றார்கள். அதுவும் இதே நிலைதான். ஆங்கிலத்தில் நடுநில்க்குட்படுத்தவில்லை தமிழில் நடுநிலை. இது என்ன நியாயம். குற்றம் எல்லா இடங்களில் ஒன்றுதான். அதை அங்கே (வர்ணா) கருத்து தெரிவிக்கின்றேன்.

ஆதங்கம் தான், பிழையிருந்தால், பயனர்கள் பொருத்தருளவும்.--செல்வம் தமிழ் 03:44, 5 மார்ச் 2009 (UTC)

செல்வம் தமிழ், உங்கள் கேள்விகளும் கவலைகளும் புரிகின்றன. சற்று பொறுமையாக நான் கூறவிருப்பதைப் படித்துப் பார்க்க வேண்டுகிறேன் (ஏற்கவேண்டும் என்று கூறவில்லை, எண்ணிப்பார்க்க நட்புடன் அழைக்கிறேன்; தேவை இருப்பின் தயங்காமல் மாறுபடுங்கள்) பயனர் கனகு POV என்னும் நடுநிலை கேள்விக்குட்படுத்தப் பட்டதாக உள்ள முத்திரைக் குறிப்பு ஒன்றை நன்னோக்கத்துடனேயே இட்டிருப்பார் என்று நீங்கள் முதலில் கருத வேண்டுவது விக்கி கொள்கைகளுள் ஒன்று :) ஆங்கில விக்கியில் இருந்ததை நீங்கள் மொழி பெயர்த்து இருந்தாலும் இப்படிப்பட்ட கேள்விகள் எழலாம். அது உங்களைப் பற்றியதல்ல, கட்டுரையைப் பற்றியது. சத்திய சாயி பாபா த்ன்னுடைய வழிபாட்டாளர்களை ஏமாற்றி வந்திருக்கின்றார் என்று ஊடகங்கள் தரும் சான்றுகோள்களுடன் தனி மனிர்களும் கூறுவதையும் சுட்டி எழுதலாம், ஆனால் சாயிபாபா நிறுவனம் நடத்தும் எத்தனையோ கல்விக்கூடங்கள், மருத்துவ மனைகள், எத்தனையோ பேருடைய உள்ள அமைதி ஆகியவற்றைப் பற்றி கட்டுரையில் நடுநிலையுடன் ஏதும் கூறவில்லை. அதாவது கட்டுரையில் நாம், சற்று எட்ட இருந்து பார்த்து, இரு (அல்லது பல) தரப்பு எண்ணங்களையும் தகுந்த சான்றுகோள்களுடன், யாரொருவரும் ஏற்குமாறு எழுதுதல் வேண்டும். எழுத முயலுதல் வேண்டும். உங்களைத் தனிப்பட்ட முறையில் கனகு ஏதும் குறை கூறவில்லை, கட்டுரையின் உள்ளடக்கத்தைப் பற்றித் தன் கருத்தைத் தெரிவித்து உள்ளார். எச்சரிக்கை முத்திரை, மீள்பார்வை இட உதவும். இதனை அருள்கூர்ந்து தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இராசராச சோழன் முதல் தற்கால அரசியலாளர்கள் வரை பலர் மீதும் பலவிதமான குற்றங்கள் இருக்கும். நல்லது செய்தும் இருப்பர், கெட்டதும் செய்து இருப்பர். இருபக்க கருத்துகளையும் (அப்படி இருந்தால்), சற்று எட்ட இருந்து பார்த்து பெறும் பார்வையில், யாரும் ஏற்குமாறு கட்டுரை அமைந்திருப்பது அழகு. இது கடினம் ஆனால் செய்ய முடியும். கனகு தமிழ் விக்கியின் நன்மை கருதியே அந்த எச்சரிக்கையை முத்திரையை முன் வைத்துள்ளார். அது உங்களைப் பற்றியதல்ல. உங்கள்மீது இடும் குற்றச் சாட்டும் அல்ல. அது கட்டுரையின் உள்ளடக்கத்தைப் பற்றிய அவருடைய கணிப்பு. அதனை எப்படி எதிர் கொள்வது என்பது நம் எல்லோருடைய (கனகு அவர்களையும் சேர்த்தே) பொறுப்பு. ஆகவே எப்படி சரி செய்யலாம். சுட்டப்படும் குறைகள் என்ன என்று தேர்ந்து செயல்படுவோம். --செல்வா 16:41, 5 மார்ச் 2009 (UTC)

பகவான் பாபா,அவர் நிறுவனம் சமுதாயதத்திற்கு செய்த சேவைப் பணிகள் அனைவரும் நன்கு அறிவர். நல்லது யார் கூறுகிறார் என்பது முக்கியம் அல்ல, கூறுபவர் அதன் படி நடக்கிறாரா என்பதே முக்கியம். தன் வாழ்வே தான் வழங்கும் செய்தி என்பதற்கேற்ப பாபா அவர்கள் தான் கூரியவற்றை செய்தும் காட்டியிருக்கிறார்,காட்டிக்கொண்டிருக்கிறார். ஆன்மீகம் என்பது தன்னை பற்றி மட்டும் எண்ணுவதல்ல, மனித சமுதாயத்திக்கு தொண்டு செய்வதன் மூலமாக மட்டுமே இறைவனை அடைய முடியும் என்பதை அவர் தன் வாழ்வின் மூலமாக நிருபபணம் செய்திருக்கிறார்.

மக்கள் சமுதாயத்திக்கு தேவாயான அடிப்படை விசயங்களில் அவரும், அவரது நிறுவனமும் பல தொண்டுகள் செய்து வருகின்றன. 

Sociocare,Educare,Medicare போன்று பல துறைகளில் அவரின் புனிதமான சேவைப் பணி நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.

அவரது நிறுவனம் உலகம் முழுவதும் 136 நாடுகளில் மக்கள் பணியில் ஈடுபடுகின்றது, இதற்கு ஆதாரம் தேடுபவர்கள் உலக விபரம் எதுவும் தெரியாதவறாகவே இருப்பர்.

Sociocare-அவரும் அவரது நிறுவனமும் உலகின் பல இடங்களில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொந்திருகிந்ரநர். சமீபத்தில் ஓரிசாவில் நடந்த வெள்ளத்தில் வீடுகள் இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.(ஆதாரம்-www.saibaba.ws/service/orissa_flood_relief.htm )

Educare - அவரும் அவரது நிறுவனமும் உலகின் பல நாடுகளில் சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களும் பயன் பெரும் வகையில் பல கல்வி அமைப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றனர். இவை அனைத்தும் மாணவர்களிடம் எந்த விதமான கட்டனங்களும் பெறுவதில்லை.(ஆதாரம்-www.sssu.edu.in, www.indiaedu.com/.../sri-sathya-sai-institute-prasanthinilayam.html, www.saibabalinks.org/education.htm)

Medicare - அவரும் அவரது நிறுவனமும் உலகின் பல நாடுகளில் சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களும் பயன் பெரும் வகையில் பல இலவச மருத்துவ முகாம்களும்,பல இலவச மருத்துவமனைகளும் நடத்திவருகின்றன.(ஆதாரம்-www.sathyasai.org/saihealth/content.htm, www.saihospital.org/ssshhospitals.htm, www.srisathyasai.org.in/Pages/Service_Projects/psn_gen.htm , www.saibaba.ws/service/twintowersofhealing.htm)

மேற்கண்ட பணிகள் எல்லாம் எந்தவிதமான விளம்பர நோக்கம் இன்றி,மக்கள் நலனில் மட்டுமே கவனம் கொண்டதாக உல்லது. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதை விளங்க வைப்பதாக உள்ளது.

அது தவிர, மக்களின் மனங்களில் இவ்வாறான மேலான சேவை எண்ணங்களை வளர்ப்பதற்காக அவரின் நிறுவங்கள் பல ஆன்மிக செயல்பாடுகளில் ஈடுபடுகின்றது. அனைத்து மத கொண்டாட்டங்களையும் அதன் உட்கருத்தை௦உணர்ந்து கொண்டாடுவது,பஜனை, நகர சங்க்கீர்ததனம்,மதங்க்களின் உண்மை ததுவத்தை புரிந்து கொள்ளஆன்மிக வாசகர் வட்டம் போன்ற பல உலகெங்கும் நடைபெறுகின்றன.(ஆதாரம்-saidelhi.org/?q=node/7, www.srisathyasai.org.in/.../Sai_Organisations/Sai_Organisations.htm, ) (பயனர்:விஸ்வேஷ் )Jan,15-2010.

சான்று தேவை

[தொகு]

அமெரிக்க தூதரகம் தடை விதித்திருப்பதாக கூறப்பட்டுள்ள செய்திக்கு சான்று தேவை. நான் தேடுயபோது கிடைத்த சுட்டியில் எந்த குறிப்பும் இல்லை:India - Country Specific Information ----மணியன் 15:28, 23 ஜூலை 2009 (UTC) 14 ஜனவரி 2010 அன்று செய்யப்பட்ட அனானி பயனர் மாறுதல்கள் முன்நிலையாக்கப்படவேண்டும்.--மணியன் 06:03, 15 ஜனவரி 2010 (UTC)

அமெரிக்க தூதரகம் இந்தியா செல்லும் தன் நாட்டு பிரஜைகளுக்கு விடுத்த செய்தியும்,பின்பு நீக்கப்பட்டதும் இந்த பக்கத்தில் காணலாம்.(ஆதாரம்-www.saisathyasai.com/baba/Ex-Baba.../us-state-department-warning.html)----Visvesh babu 22:56, 15 ஜனவரி 2010 (UTC)

தயவு செய்து மேற்கோள் காட்டுவதற்கு முழுமையான பக்க முகவரியைத் தாருங்கள். நீங்கள் இங்கேயும், கட்டுரைப் பக்கத்திலும் தந்துள்ள முகவரிகள் பக்கம் இல்லை என்று வருகிறது. நன்றி.--Kanags \பேச்சு 00:17, 16 ஜனவரி 2010 (UTC)

ஆம் நண்பரே,நானும் இப்போது முயன்று பார்த்தேன். பக்கம் இல்லை என்று வருகிறது. ஆனால் நான் பக்கத்தை இடும் போது பக்கம் தெரிந்தது. பரவாயில்லை நான் அந்த பக்கம் இருக்கும் வலை முகவரி தருகிறேன்,முயன்று பார்க்கவும் - www.saisathyasai.com நன்றி.--Visvesh babu 09:12, 16 ஜனவரி 2010 (UTC)

நற்கீரன், வெறுமனே குற்றச்சாட்டுக்களை கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடத் தேவையில்லை. அவற்றை கட்டுரையில் குற்றச்சாட்டுக்கள், விமரிசனங்கள் பகுதியில் எழுதுங்கள். அவரது வித்தைகளைப் பற்றி எழுதுங்கள். அவை நாம் கண்ணால் கண்டதுதான். மேலும் பாலியல் வன்முறை என்று நீங்கள் குறிப்பிட்ட குற்றச்சாட்டு சரியானது தானா என்பதை உறுதிப் படுத்துங்கள். பாலியல் துஷ்பிரயோகம் என்ற குற்றச்சாட்டு உள்ளது.--Kanags \உரையாடுக 02:06, 25 ஏப்ரல் 2011 (UTC)

96 வயது வாழ்வேன் சர்ச்சை

[தொகு]

96 வயது வரை வாழ்வேன் என்று சாயி பாபா சொன்னது பொய்யாகி விட்டதே எனும் கேள்விக்கு 25.04.11 நாளிட்ட தினமலர் ‌இதழில் கீழ்கண்ட விளக்கம் இருந்தது. இதை அப்படியே கீழே வெட்டி ஒட்டியிருக்கிறேன்.

சாய் வாக்கு சத்ய வாக்கு:" 95 வயது வரை வாழ்வேன்" என்று சத்ய சாய் பாபா ஏற்கனவே கூறியிருந்தார். இதனால்தான் மார்ச் மாதம் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, "பாபாவுக்கு ஒன்றும் நேராது; அவர் உடல்நிலை தேறி மீண்டு வருவார்" என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சாய் பாபா தற்போது ஸித்தி அடைந்தது எப்படி என்று சில பக்தர்கள் மனதில் ஐயம் எழலாம். இது குறித்து சாய் பாபாவின் தீவிர பக்தர் ஒருவர் விளக்குகையில், "நாம் ஆங்கில முறைப்படி ஆண்டுகளைக் கணக்கிட்டு, சாய் பாபாவுக்கு தற்‌போது வயது 86 என்று கூறுகிறோம். ஆனால் ஹிந்து முறைப்படி சந்திரனை அடிப்படையாக கொண்டே ஆண்டு நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது ஆங்கில முறைப்படி ஒரு மாதம் என்பது 30 அல்லது 31 நாட்கள். ஆனால் ஹிந்து முறைப்படி பூமியை சந்திரன் ஒருமுறை சுற்றி வரும் காலம்தான் ஒரு மாதம் என கணக்கிடப்படுகிறது. சந்திரன் ஒருமுறை பூமியைச் சுற்றி வர 27.3 நாட்கள்தான் ஆகிறது. அந்த அடிப்படையில் கணக்கிட்டால் சாய் பாபாவுக்கு தற்போது வயது 94 ஆகிறது. மேலும் ஹிந்து வழக்கப்படி அவர் பிறந்த ஆண்டே முதல் வயதாக கருதப்படுவதால் சாய் பாபாவுக்கு 95 ஆகிறது. எனவே சாய் பாபா தமது ஆயுள் குறித்து தெரிவித்த வாக்கு பொய்க்கவில்லை; சாய் வாக்கு சத்ய வாக்காக‌வே இருக்கிறது" என்று தெரிவித்தார்.

--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 09:32, 25 ஏப்ரல் 2011 (UTC)

அப்படி கணக்கிட்டால் கூட 95 தானே வருகிறது?.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:49, 8 சூன் 2013 (UTC)[பதிலளி]

குற்றச்சாட்டுக்கள் அறிமுகப் பத்தியில் இருந்து நீக்குவதற்கான காரணம் என்ன?

[தொகு]

மேலும் இவர் மீது பாலியல் வன்முறை பற்றிக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. Obituary: Indian guru Sai Baba இவரது ஆச்சிரமத்தில் கொலைசெய்யப்பட்ட நபர்கள் குறித்தும் சர்ச்சைகள் உள்ளன.--Natkeeran 15:34, 25 ஏப்ரல் 2011 (UTC)

மேலே இதற்கான காரணங்களைத் தந்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 22:29, 25 ஏப்ரல் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சத்திய_சாயி_பாபா&oldid=1518077" இலிருந்து மீள்விக்கப்பட்டது