பேச்சு:கொழும்பு
இக்கட்டுரையைக் கூட்டுமுயற்சிக்குப் பரிந்துரைத்த தினேசுக்கும் தேர்ந்தெடுத்த தென்காசி சுப்பிரமணியனுக்கும் நன்றி. கட்டுரை நன்றாக வளர்ந்துள்ளதுடன் அது தொடர்பான பிற கட்டுரைகளும் உருவாகி வருவதைக் காண மகிழ்ச்சியாக உள்ளது--இரவி (பேச்சு) 06:06, 7 சூலை 2012 (UTC)
கொழும்புச் செட்டி
[தொகு]- இங்கே இந்த கட்டுரையில் கொழும்பு செட்டி என ஒரு தனி இனத்தவராகக் காட்டப்பட்டுள்ளது. அவர்கள் முழுமையான தமிழர்கள். கிட்டத்தட்ட 17 அல்லது 18 நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து வணிகரீதியாக வந்தவர்கள். தமிழ் மொழிக்காகவும் மதத்திற்காகவும் அவர்களது பங்களிப்பு முதன்மையானது. இவர்களை எவ்வாறு வேறு இனமாக இங்கேயும் காட்டப்படுகிறது. இவ்வாறான பிழைகள் அநேகமாக ஆங்கில விக்கிப்பீடியாவை அப்படியே தழுவி எழுதுவதால் வருவது. இவை வரலாற்று தகவல்கள் என்பதால் சற்று கவனம் எடுக்கவும்.
- The Colombo Chetties - who were they? (The advent of the Colombo Chetty community from Nagapatnam, India is well documented from 1663 during the reign of King Rajasingha 11 of Kandy. என ஆவணங்களில் உள்ளது. பின்னால் ஜே.ஆர் ஜெயவர்தனாவின் அரசியல் தோற்றத்தின் பின்னர் கொழும்பு செட்டிகள் ராஜஸ்தானில் இருந்து வந்ததான ஒரு கட்டுக்கதையும் அவர்களை வடயிந்தியாவுடன் தொடர்பு படுத்திக்காட்ட முனையும் சிங்கள சித்தரிப்பும் நிகழத் தொடங்கின.
- ஏனெனில் இலங்கை வரலாற்றில் தமிழர்க்கு எதிரான அடக்கு முறைகளின் உக்கிரக் கர்த்தாவான ஜே.ஆர் ஒரு தமிழ் செட்டியின் மரபினர் என்பதனால் தான். 1768 in the village of Welgama near Hanwella in the Hina Korale. Descended from a family of the Colombo Chetty Community [‘of [part] Persian extraction’??] who trace their origins to the Coromondel Coast India during Dutch rule (mid 17th cent.). Several generations before the birth of Don Adrian, a male member of his ancestors had married a Sinhalese lady by the name of Jayawardena from the village of Welgama near Hanvalla about 20 miles from Colombo. அதிரையன் என்பவர் ஜயவர்தனா எனும் சிங்களப் பெண்ணை திருமணம் முடித்ததன் வழியிலேயே ஜே.ஆர் ஒரு சிங்களவர் ஆனார். இந்த வரலாற்றை திசைத் திருப்பும் நிகழ்வுகளுக்காகவே கொழும்பு செட்டியை வேறு இனமாக காட்டும் தேவை சிங்களவர்களுக்கு ஏற்பட்டது. இது முழுக்க முழுக்க அரசியல் சுத்து மாத்துகளால் ஏற்பட்டவை.−முன்நிற்கும் கருத்து 219.78.184.222 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
கொழும்பு செட்டி என்பது தனிப்பட்ட சாதியாக வேண்டுமானால் இருக்கலாம் அது தனி இனமல்ல ஆகையால் நீக்கி விடலாம் என்பதே என் எண்ணம். எழுதப்பட்ட கட்டுரையை எவ்வாறு தகுந்த கட்டுரையுடன் இணைப்பது? பல பெயர்களை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்துள்ளேன், அவை சரியானவை அல்ல என்று எண்ணுகிறேன் இலங்கை பயனர்கள் அப்பெயர்களை பார்த்து திருத்தம் செய்யவும். --குறும்பன் (பேச்சு) 20:46, 8 சூலை 2012 (UTC)
கொழும்புச் செட்டிகள் தனியான இனத்தினராகவே தங்களை அடையாளப்படுத்துகின்றனர். இலங்கையின் கண்டி மாநகரில் அமைந்துள்ள "International Centre for Ethnic Studies" (இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச மையம்) என்ற சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு அவர்களைத் தனியினத்தினராகவே குறிப்பிடுகிறது. மேலே உள்ள கூற்றில் //தமிழ் மொழிக்காகவும் மதத்திற்காகவும் அவர்களது பங்களிப்பு முக்கியமானது// எனக் கூறப்பட்டுள்ளது. அது எந்த மதத்திற்காக? தமிழ் மொழிக்கு அவர்களது பங்களிப்பு எத்தகையது? அவர்களின் மூதாதையரில் மலையாளிகளும் தெலுங்கர்களும் இருப்பதாக விக்கிக் கட்டுரை குறிப்பிடுகிறது. அவ்வாறெனின், அவர்களை எப்படித் தனித் தமிழ்ச் சாதியொன்றெனலாம்? கொழும்புச் செட்டிகள் பற்றிய விக்கிக் கட்டுரையில் //மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் கொழும்புச் செட்டிகளை இலங்கைத் தமிழர்களுடன் சேர்த்தே கணக்கெடுத்தனர். இந்த நடைமுறையை அவர்கள் விரும்பவில்லை. தங்களைத் தனியான இனமாகக் கணக்கெடுக்க வேண்டும் என்று இலங்கை செட்டி சங்கத்தின் (Sri lankan Chetti Association) பொதுச் செயலாளர் ஷர்லி புள்ளே திசேரா வரலாற்று ரீதியான ஆதாரங்களுடன் அரசாங்கத்திடம் விண்ணப்பித்தார். இதன் விளைவாக, கொழும்புச் செட்டிகளைத் தனியான இனக் குழுவாக அங்கீகரிக்க வேண்டும் என்று 1984 ஜனவரி 14 ஆம் நாள் அரசாங்கம் அறிவித்தது// என்றுள்ளது. அவ்வாறு அவர்கள் தங்களைத் தனியினமாக வரலாற்று ஆதாரங்களுடன் நிறுவியிருப்பின், பின்னர் ஏன் இன்னமும் அவர்களைத் தமிழர்களெனக் கருத வேண்டும்? கொழும்புச் செட்டிகள் தமிழ்ப் பேசினாலும், சிங்களத்தையே பெரும்பான்மையாகப் பேசுகின்றனர்.--பாஹிம் (பேச்சு) 02:19, 10 சூலை 2012 (UTC)
- //கொழும்புச் செட்டிகள் தனியான இனத்தினராகவே தங்களை அடையாளப்படுத்துகின்றனர். இலங்கையின் கண்டி மாநகரில் அமைந்துள்ள "International Centre for Ethnic Studies" (இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச மையம்) என்ற சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு அவர்களைத் தனியினத்தினராகவே குறிப்பிடுகிறது.// வழங்கப்பட்டுள்ள இணைப்பு வெறுமனே சர்வதேச மையம் என இருந்தாலும் அது இலங்கை பெரும்பான்மை சிங்களத்தினரின் கருத்துருவாக்கத்திற்கு அமைய சிங்களவர்களது இலங்கை தளம். அவை அப்படித்தான் தொடர்ந்து கூறிவருகின்றன என்பது புதினமல்ல.
மேலே உள்ள கூற்றில் //தமிழ் மொழிக்காகவும் மதத்திற்காகவும் அவர்களது பங்களிப்பு முக்கியமானது// எனக் கூறப்பட்டுள்ளது. அது எந்த மதத்திற்காக? தமிழ் மொழிக்கு அவர்களது பங்களிப்பு எத்தகையது?
பொதுவானவை
- அவர்கள் 99 வீதமானோர் தமிழ் இந்துக்கள்.
- தமிழர் கலாச்சாரம் பேணுபவர்கள்.
- 99 வீதமானோர் சைவ உணவு முறையை கடைப்பிடிப்பவர்கள்.
- வீட்டு மற்றும் பொது இடங்களில் தமிழர் கலாச்சார உடைகளை உடுத்துபவர்கள் (குறிப்பாக பெண்கள்)
- திருமணம், சாமத்தியம், மரணம் போன்ற வற்றில் முழுதுமாக தமிழ் இந்து கொள்கைகளை கடைப்பிடிப்பவர்கள்
- குறிப்பாக இன்றும் தமிழ்நாட்டுடன் உறவுகளை தொடர்ந்து பேணி வருபவர்கள்.
- திருமணம், பெண் கொடுத்தல் வாங்குதல் தொடர்புகளை செட்டி சாதிய அமைப்பு எனும் வகையில் தமிழ்நாட்டுடன் செய்து வருதல்
தமிழ் இந்து வழி செயல்பாடுகள்
- கொழும்பு செட்டியார் தெரு மற்றும் கொழுப்பு பிற இடங்களிலும் பல இந்து கோயில்களை கட்டுவித்தவர்கள்.
- இலங்கையில் வேறு எந்த இடங்களிலும் விட மிகவும் பிரசித்திபெற்ற வகையில் கொழும்பில் கோயில் திருவிழாக்களை மேற்கொள்பவர்கள்.
- கொழும்பில் மிகவும் பிரசித்திப் பெற்ற (கடந்த ஆண்டு மகிந்தாவும் கலந்துக்கொண்ட) ஆடிவேல் திருவிழாவை நடத்துபவர்கள்.
- தமிழ்நாட்டின் பாரம்பரியங்கள் கலை கலாச்சார (குறிப்பாக பெண்கள் பரதநாட்டியம்) போன்ற வற்றிற்கு முன்னுரிமை வழங்குபவர்கள்.
- ஆடிவேல் திருவிழாவின் போது தமிழரின் பாரம்பரிய சிலம்பாட்டம் போன்ற நிகழ்வுகளும் இடம் பெறுவது இங்கு மட்டுமே ஆகும்.
மொழி தொடர்பான செயல்பாடுகள்
- தமிழ் மொழி நிகழ்வுகளுக்கு முக்கிய பொருளாதார உதவிகளை வழங்குதல்.
- தமிழ் நூல்கள், தமிழ் கலை நிகழ்வுகள் போன்ற வற்றில் பங்குக்கொள்ளல்.
- தமிழ் வானொலி நிகழ்வுகளை நடத்துதல்
என இன்னும் தொடரும்.
- ஏன் தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் ஒலிப்பரப்பாளர் பீ.எச் அப்துல் அமீட் கொழும்பு அம்பிகா ஜுவலர்சின் பாட்டுக்கு பாட்டு நிகழ்சி ஊடாகவே பெறிதும் புகழ் பெற்றார் என்பதும் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
ஏனெனில் அவர்கள் தமிழர்கள்.
//கொழும்புச் செட்டிகள் தமிழ்ப் பேசினாலும், சிங்களத்தையே பெரும்பான்மையாகப் பேசுகின்றனர்.//
இலங்கையில் அதுவும் வடக்கிழக்கு அல்லாத பகுதிகளில் வாழ்வோர் சிங்களம் பேசுதல் என்பது ஒன்றும் அதிசயமானதல்ல. அத்துடன் சிங்களவர்களுடானான வணிகத் தொடர்பாடலுக்கு சிங்களத்தில் தான் பேச வேண்டும். அதற்காக அவர்கள் தங்களை சிங்களவர்கள் என்றா கூறுகிறார்கள்? ஏன் ஒரு சில ஆண்டுகள் கொழும்பில் வாழ்ந்த என்னாலும் பேச முடியும் எனும் போது; நூற்றாண்டுகளாக கொழும்பில் வாழ்ந்தோர் பேசுதல் ஆச்சரியமானதல்ல.
ஏன் நீங்கள் கூட சிங்களம் பேசுகிறீர்கள் என்பதால் உங்களை சிங்களவர் என்று கூறமுடியுமா?
இன்னும் கூற வேண்டுமா? கொழும்பு செட்டியார் தெரு லலிதா ஜுவலர்ஸுடன் நேரடியாக தொடர்புகொண்டு தமிழிலே பேசி பார்க்கலாம். [1]. மேலும் கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து கடைகளுக்குமே இணையத்தளங்கள் உள்ளன. நேரடியாக அவர்களுடன் பேசியே பார்க்க முடியும்.
குறிப்பு: "எவனோ போட்ட கொட்டை, எங்கோ முளைத்தது செடி போன்று" ஏதோ ஒரு மொழியை எமது தாய் மொழியாகவும், ஏதோ ஒரு மொழியை உரையாடல் மொழியாகவும் நாம் கூறிக்கொள்ள வேண்டிய நிலை எமக்கில்லை. எமக்கென ஒரு தனித்துவமான மொழியும் மொழியுடனான அடையாளக் கூறுகள் உண்டு; நாம் எந்த நாட்டில், எந்த மொழி பேசி, எத்தகையத் தகமையுடன் வாழ்ந்தப்போதும்.--−முன்நிற்கும் கருத்து 219.77.143.254 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- அனாமதேயப் பயனருக்கு, நீங்கள் கொழும்புச் செட்டிகளையும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களையும் போட்டுக் குழப்புகிறீர்கள் போல் தெரிகிறது. கொழும்புச் செட்டிகள் அதிகாரபூர்வமாக தனியானதொரு இனமா என்பதை குறித்து இலங்கை ஆவணங்களைத் தான் பார்க்க வேண்டும்.--Kanags \உரையாடுக 08:11, 10 சூலை 2012 (UTC)
கொழும்பு செட்டியார் தெருவில் நகை வணிகத்தினரையே கொழும்பு செட்டிகள் என்று அழைக்கப்படுகிறது. அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்கள். அவர்களில் நாட்டுக்கோட்டை செட்டியரும் உளர். நீங்கள் கூறுவது போன்று அவர்களை ஒரு தனியினத்தவராக இலங்கை ஆவணங்களில் இன்று குறிக்கப்பட்டுள்ளது என்பது உண்மைதான். ஏனெனில் அவ்வாறான தேவை ஜே. ஆருக்கு இருந்தது. ஜே ஆரின் ஆட்சி காலத்தில் அவ்வாறான ஒரு நிகழ்வு நிகழ்ந்தது. இருப்பினும் கொழும்பு செட்டிகள் அடையாளப் படுத்தப்பட்ட புகழ்பெற்றோரும் தமிழ் மொழிக்கான சேவையை தொடர்ந்து செய்வதை காணலாம். ஏனெனில் அவர்கள் தமிழ் வழித்தோன்றல்கள்.
ஒரு இனத்தை பல்வேறு கூறுகளாக பிரித்து, அவர்கள் பலத்தை சிதைத்து, உரிமைகளை மறுப்பதற்கு சிங்கள பேரினவாதச் சூழ்ச்சிகளுக்கு அமைய வேண்டுமானால் அவர்களை தனியினமாகக் கூறிக்கொள்ளலாம். மற்றபடி அவர்கள் தமிழர்கள்.
- //கொழும்பு செட்டியார் தெருவில் நகை வணிகத்தினரையே கொழும்பு செட்டிகள் என்று அழைக்கப்படுகிறது.// கொழும்புச் செட்டிகளுக்கும், செட்டியார் தெருக்காரர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை ஐயா. உங்கள் கூற்றுக்கு ஏதேனும் ஆதாரம் உண்டா?--Kanags \உரையாடுக 09:10, 10 சூலை 2012 (UTC)
//கொழும்புச் செட்டிகளுக்கும், செட்டியார் தெருக்காரர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை ஐயா//தொடர்பு உள்ளது ஐயா :-) கொழும்பு ஐந்து லாம்பு சந்தியில் தொடங்கும் செட்டியார் தெரு - அப்படியே நீண்டு கொச்சிக்கடை செல்லும் பாதை நெடுகிலுமாக மூன்று கோயில்களும் (செட்டியார்களால் கட்டுவிக்கப்பட்டவை) நகைக் கடைகளுமே உள்ளன. செட்டியார்கள் கொழும்பு மற்றும் அதன் அண்டியப் பிரதேசங்களில் உறைவிடத்தைக் கொண்டப் போதும், செட்டியார்களது வணிகத் தெரு sea street தான்; அதனால் தான் sea street செட்டியார் தெரு என பெயர்பெற்றதும் பிரசித்திப்பெற்றதும் ஆகும். இவை இன்று நேற்றல்ல வரலாற்று ரீதியாக அத்தெரு செட்டியார்களின் நகை வணிகத்தின் வணிகத் தெரு என்பதால் உருவானப் பெயர். சிங்களவர்கள் அப்பெயரை சற்று மாற்றி ஹெட்டி வீதிய என்கின்றனர். அதுவும் (ஹெ) செட்டிகளின் வீதி என்பதன் அடிப்படையில் தான்.
மேலும் கொழும்பு செட்டியார் தெருவைத் தவிர இலங்கையில் வேறு எங்கும் நகை வணிகத்திற்கான ஒரு தனித்தெரு இல்லை. அதனால் தான் நகை வணிகக் கடைகளைக் கொண்ட செட்டியார்களின் தெரு (கொழும்பு) செட்டியார் தெரு என பிரசித்திப் பெற்றதும். இலங்கையில் வேறு இடங்களில் தங்கள் நகை வணிகத்தைத் தொடர்ந்தப் போதும் அவர்கள் கொழும்பு செட்டிகள் என்று அழைக்கப்படுவதும் ஆகும்.
அதுமட்டுமல்ல செட்டியார் தெரு தொடங்கும் இடத்தையும் ஐந்து லாம்பு சந்தி என தமிழ் பெயர் கொண்டே அவர்கள் அழைக்கின்றனர். மேலும் கொழும்பு வணிகத்தை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு வணிகத்திற்கு என்றும் தனித்தனியான தெருக்கள் உள்ளன. மெயின் வீதி முழுக்க புடைவை கடைகளுக்கு பிரசித்திப் பெற்றதாகவும், கேசர் வீதி, இரண்டாம் குறுக்கு தெரு போன்றன புடவை தொகைவணிகத்திற்கு பிரசித்திப்பெற்றதாகவும், ஐந்தாம் குறுக்கு தெரு பலசரக்கு வணிகத்திற்கானதாகவும் என உள்ளன. இவற்றிலும் இந்தியத் தமிழர்களுக்கு சொந்தமான வணிகக் கடைகளே இன்றளவிலும் அதிகம் உள்ளன. அடுத்த நிலையில் தான் முஸ்லீம்கள், சிங்களவர்களது காணப்படுகின்றன. அதேவேளை செட்டியார் தெருவும், செக்கட்டித் தெருவும், கொச்சிக்கடையும் அதன் அன்மித்தப் பகுதிகளும் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளாக ஆகும். அதிலும் செட்டியார் தெருவில் தமிழர்களைத் தவிர வேற்றினத்தவர்கள் காண்பதற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இன வன்முறையின் போதெல்லாம் சிங்களவர்களின் முதலில் தாக்குதலுக்கு உள்ளானது இந்த செட்டியார் தெருதான் என்பது இன்னொரு வரலாற்றுச் செய்தி.
வெறும் புகழ்ச்சியில்லை:), வரலாறு
[தொகு]- ஐயா, நீங்கள் மேலே சொன்ன அனைத்துத் தகவல்களும் உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை:) ஆனால், நீங்கள் என் கருத்தைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. இந்த சர்ச்சை கொழும்புச் செட்டி எனப்படும் இனம் குறித்ததே. அவர்களுக்கும் கொழும்பில் தற்போதுள்ள செட்டியார்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதே எனது வாதம். இவர்கள் நகரத்தார் எனப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள். யாழ்ப்பாணத்திலும் இவர்கள் நிறையப் பேர் உள்ளனர். பல கோயில்களை அமைத்துள்ளனர். சைவர்கள். ஆனால், கொழும்புச் செட்டிகள் எனப்படுவோர் பெரும்பாலானோர் கத்தோலிக்கர்கள், மட்டுமல்ல இவர்களில் பெரும்பாலானோர் சிங்களவர் எனத் தம்மை அடையாளப்படுத்துகின்றனர்.--Kanags \உரையாடுக 21:19, 10 சூலை 2012 (UTC)
- //நீங்கள் என் கருத்தைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.// முதலில் நான் என்ன கூறியுள்ளேன் என்பதைப் பார்க்கவும்.
- //இந்த சர்ச்சை கொழும்புச் செட்டி எனப்படும் இனம் குறித்ததே.// அதனைத் தானே விளக்கமாக கூறப்பட்டு வருகிறது!
- //அவர்களுக்கும் கொழும்பில் தற்போதுள்ள செட்டியார்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதே எனது வாதம்.// தொடர்பு இருக்கிறதா இல்லையா சரியான ஆதாரங்களுடன் முன்வைத்தால் ஏற்கத்தயார். ஏனெனில் பிழையென்றால் திருத்திக்கொள்ளவும், சரியென்றால் ஏற்றுக்கொள்ளவும் மனப்பக்குவம் எமக்குண்டு. ஆனால் தொடர்பில்லை என்று நிறுவுவது எந்தவகையிலும் சாத்தியமாகாது. காரணம் தொடர்பு உண்டு.
- //நகரத்தார் எனப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள். யாழ்ப்பாணத்திலும் இவர்கள் நிறையப் பேர் உள்ளனர். பல கோயில்களை அமைத்துள்ளனர். சைவர்கள்.// மேலுள்ள கருத்துப்படி சைவர்களாகவும், தமிழர்களாகவும் அடையாளப்படுத்திக்கொள்ளும் செட்டிகள் அனைவரும் "நகரத்தார் எனப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியர்கள்". அவர்களை கொழும்பு செட்டியார் என்று அழைப்பதுமில்லை; அவர்களுக்கும் கொழும்பு செட்டிகளுக்கும் தொடர்பில்லை என்பதுதான் உமது வாதமெனில், ஒன்று உமக்கு அதன் தொடர்புகள் தெரியாது. அல்லது வீண் விவாதம் செய்கிறீர், என்றே கொள்ளமுடிகிறது.
- இருப்பினும் கீழே சற்று விரிவாக விளக்குகிறேன். காரணம் இலங்கையில் உள்ள திரிபுகளும் சித்தரிப்புகளுக்கும் பின்னால் உள்ள அரசியலை எல்லோரும் அறிந்துக்கொள்ளட்டும் என்பதனால்...
- தமிழ்நாட்டில் இருந்து செட்டி எனும் சாதியமைப்பினர் பர்மா, வியட்நாம், ஹொங்கொங், மலேசியா, சிங்கப்பூர் என இன்னும் பலநாடுகள் வணிக ரீதியில் சென்று குடியேறி அங்கேயே வாழ்ந்தும் வருகின்றனர். (ஒரு சில மலையாளி, தெழுங்கினர் இருக்கலாம்) அவ்வாறு இலங்கைக்கு வந்த செட்டி எனும் சாதியமைப்பினரின் பிரதான நகை வணிக மையமாக கொழும்பு, sea street அமைந்தது. அதனாலேயே அந்தத் தெருவுக்கு செட்டியார் தெரு என பெயர்வழங்கல் ஏற்ப்பட்டது. கொழும்பில் இருக்கும் செட்டியார் தெரு கொழும்பு செட்டியார் தெரு என்றும், கொழும்பு செட்டியார் தெருவில் வணிகம் செய்யும் செட்டியார்களை கொழும்பு செட்டியார் என அழைக்கும் வழக்கும் காலத்தால் தோற்றம் பெற்றது. இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால் கனக்ஸ் கூறுவது போன்று கொழும்பில் உள்ள செட்டியார்கள் அனைவருமே நாட்டுக்கோட்டை செட்டியார் அல்ல; நாட்டுக்கோட்டை செட்டியாரும் உள்ளடக்கம்.
பல நூற்றாண்டுகளாக வேறொரு நாட்டில் வாழ்ந்ததன் விளைவால் இவர்களுக்குள் இனக்கலப்பும் ஏற்பட்டது. செட்டி சாதியமைப்பினர் ஒரு வசதியான வாழ்க்கை முறையைக் கொண்டதனால், அவர்களது பெண்கள் இல்லத்தரசிகளாகவே இல்லத்துக்குள் தமிழ், சைவ கட்டுப்பாட்டுகளுடன் வாழ்ந்தனர். ஆனால் ஆண்களோ வணிகத் தொடர்புகளினால் கடைக்கு வரும் (சிங்களம் மற்றும் பிற இன) பெண்களுடள் உறவுகளையும் வைத்துக்கொண்டனர். (இன்றுவரை அப்படித்தான்). அதில் ஒரு சிலர் சிங்களப் பெண்களையும் மணந்துக்கொண்டனர்.[2] அவ்வாறானவர்களின் வாரிசுகளின் வீட்டுமொழி (தாயுடனான) சிங்களமாக இருந்ததால் சிங்களமாக பேசுவர். அதேவேளை போர்த்துக்கீச, ஒல்லாந்து காலம் முதல் கிருஸ்தவர்களாக மாறியவர்களும் உள்ளனர்.
இருப்பினும் (ஒரு சிலரின்) வீட்டுப் பேச்சு மொழி சிங்களமாக இருந்தப் போதிலும், கிறிஸ்தவ மதத்தினராக மாறியப்போதும், தமது தந்தை வழி தமிழர் என்பதை மறவாததுடன், சைமன் காசிச்செட்டி, பிலிப்பு தெ மெல்லோ போன்றோர், தமிழ் மொழிக்கான பங்களிப்புகளையும் தொடர்ந்து செய்துவந்தனர்.
ஆனால் ஜே.ஆர் ஜயவர்தனா தான் அதிரையன் எனும் செட்டி சிங்களப் பெண்ணை மணம் முடித்ததன் வழியில் தான் ஒரு தந்தை வழி தமிழ் மறபினர் என்பதனால், தனது அரசியல் அபிலாசைகளுக்கு இசைவாக, (Sri lankan Chetti Association என்பதை தோற்றிவித்து அதன் ஊடாக 1989 ஒக்ரோபர் 30 தனியினமாக அங்கிகரித்துக்கொண்டார். இங்கே வியப்பு என்னவெனில் (யாழ்ப்பாணத்திலும்) தமிழரின் ஒரு சாதியமைப்பினரை ஒரு தனி இனத்தினராக மாற்றப் பட்டது தான்.
அவ்வாறு ஜே ஆர் அங்கிகரித்தாலும் இந்த சர்ச்சை இன்று சிங்களவர்களுக்கிடையிலும் உண்டு.
//கொழும்புச் செட்டிகள் எனப்படுவோர் பெரும்பாலானோர் கத்தோலிக்கர்கள், மட்டுமல்ல இவர்களில் பெரும்பாலானோர் சிங்களவர் எனத் தம்மை அடையாளப்படுத்துகின்றனர்.// என்பது முழுமையானதல்லை. ஒரு சிலர் ஜே.ஆர் போன்று தமிழரே அல்ல என்று கூறிக்கொண்டாலும், கிருஸ்தவ மதத்தினராக மாறினாலும்; அவர்கள் தந்தைவழி தமிழ் மரபினர், தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்கள், கொழும்பு செட்டியார் தெருவை தமது நகை வணிகத்தின் பிரதான மையமாக தொடங்கியவர்கள் எனும் அடிப்படையில் ஒன்றுக்கொன்று தொடர்பு உண்டு.
மேலும் பார்க்க:
- Rukmani Devi, was born as Daisy Rasammah Daniels to a Tamil Colombo Chetty Christian
- Roy Luke Dias (born 18 October 1952, Colombo) is a former Sri Lankan cricketer of Negombo chetty Tamil origin
- Sri Lanka Colombo Chetty: First Tamil Barrister in Asia (1849)
இன்னொரு விடயம்
[தொகு]இலங்கையில் தமிழ் செட்டிகள் மட்டுமல்ல இன்னும் பல்வேறு வணிகர்களும் பல நூற்றாண்டுகளாக வாழ்கின்றனர். இவர்களது வரலாறு நீண்டது. இப்படியிருக்க "இலங்கை இந்திய வம்சாவளி தமிழர்" எனும் கட்டுரையை அதற்கேற்றவாறு எழுதவும். "மாங்காய்" என தலைப்பிட்டு விட்டு "தேங்காய்" பற்றி விவரிப்பது போன்று அக்கட்டுரையின் அபத்தம் மலையகத் தோட்டத் தொழிலாளர்களை பற்றியதாகவே உள்ளது. தயவுசெய்து மாற்றவும்.
- உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. இலங்கை இந்திய வம்சாவளி தமிழர் கட்டுரையில் வணிகத்துக்கா நீண்ட காலமாக இலங்கை வந்தவர்களைப் பற்றியும் சேர்த்துக் கொள்வது பொருத்தமே. --Natkeeran (பேச்சு) 17:50, 12 சூலை 2012 (UTC)