பேச்சு:கொங்கோ
Appearance
விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
Congo என்பதன் ஒலிப்பு காங்கோ என்பதாகும். ஒலிப்பைப் பார்க்க. தமிழ்நாட்டிலும் காங்கோ என்றுதான் எழுதுகின்றனர். தலைப்பை காங்கோ என மாற்றலாமா?--செல்வா 01:57, 8 அக்டோபர் 2007 (UTC)
- செல்வா, இலங்கையில் கொங்கோ என்றே பாவிக்கின்றனர். மேலும் யாகூ தளத்தில் கொங்கோ என்ற வாறே ஒலிப்பு உள்ளது. காங்கோ, கொங்கோ இரண்டும் இருக்கட்டும். --டெரன்ஸ் \பேச்சு 02:27, 8 அக்டோபர் 2007 (UTC)
- டெரன்ஸ், நீங்கள் சொல்வதுபோல் இரண்டுமே இருக்கட்டும். கருத்துப் பகிர்வுக்காக மட்டுமே => நீங்கள் குறிப்பிட்ட்டிருந்த யாஃகூ தளத்திலும் காங்கோ என்றுதான் ஒலிப்பு இருப்பதாக என் காதுகளுக்குக் கேட்கின்றது :) மேலும் அதே தளத்தில் ஆங்கில எழுத்து ǒ வின் ஒலிப்பு pot என்பது போல் இருக்கவேண்டும் என்று கொடுத்துள்ளது. POT என்பதை நீங்கள் பொட் என்றுதான் ஒலிப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அது பாட் என்று ஒலிக்க வேண்டும் (pawt என்பது போல என்று கூறலாம்). பொட் என்றால் குறில் ஒகர ஒலி. உண்மையில் அது நெடில். இவையனைத்தும் பகிர்வதற்காக மட்டுமே உங்கள் உள்வாங்கல் வேறாக இருக்கும் என்றே நினைக்கிறேன். --செல்வா 02:45, 8 அக்டோபர் 2007 (UTC)
- ஒலிப்பு என்பது காதுகள் பழக்கப்பட்ட விதம் என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். எனக்கு முதலாவது காங்கோ என்றும் இரண்டாவது கொங்கோ என்றும் தான் கேட்கிறன. --டெரன்ஸ் \பேச்சு 02:50, 8 அக்டோபர் 2007 (UTC)
- டெரன்ஸ், நீங்கள் சொல்வதுபோல் இரண்டுமே இருக்கட்டும். கருத்துப் பகிர்வுக்காக மட்டுமே => நீங்கள் குறிப்பிட்ட்டிருந்த யாஃகூ தளத்திலும் காங்கோ என்றுதான் ஒலிப்பு இருப்பதாக என் காதுகளுக்குக் கேட்கின்றது :) மேலும் அதே தளத்தில் ஆங்கில எழுத்து ǒ வின் ஒலிப்பு pot என்பது போல் இருக்கவேண்டும் என்று கொடுத்துள்ளது. POT என்பதை நீங்கள் பொட் என்றுதான் ஒலிப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அது பாட் என்று ஒலிக்க வேண்டும் (pawt என்பது போல என்று கூறலாம்). பொட் என்றால் குறில் ஒகர ஒலி. உண்மையில் அது நெடில். இவையனைத்தும் பகிர்வதற்காக மட்டுமே உங்கள் உள்வாங்கல் வேறாக இருக்கும் என்றே நினைக்கிறேன். --செல்வா 02:45, 8 அக்டோபர் 2007 (UTC)
செல்வா, தயவு செய்து பிபிசி ஆங்கில ஒலிபரப்பைக் கேளுங்கள்:).--Kanags 08:36, 8 அக்டோபர் 2007 (UTC)