உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கெடா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காழகம் என்பது இக்காலத்துப் பர்மா என்று, அது தொடர்பான கட்டுரையில் இருக்கும் போதே, அதை இக்கட்டுரையில் தவறாக ஆதாரம் சுட்டப்பட்டிருந்தது.--பாஹிம் (பேச்சு) 03:31, 31 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

காழகம் கட்டுரையிலும் மேற்கோள் தரப்படவில்லை.--Kanags \உரையாடுக 03:47, 31 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

செயற்படாத வலைப்பக்க ஆதாரங்கள்

[தொகு]

பின்வரும் இணைப்புக்கள் செயற்படவில்லை

--பாஹிம் (பேச்சு) 03:58, 31 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

new strait times கட்டுரைக்கு இணைப்பு தந்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 04:06, 31 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

பிழையான ஆதாரம்

[தொகு]

கிபி இரண்டாம் நூற்றாண்டில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் இயற்றிய பட்டினப்பாலையில் கெடாவின் பழமைத்துவம் விவரிக்கப் பட்டுள்ளது என்ற வரிகளுக்கு மலாக்கா முத்துக்கிருஷ்ணன் தன்னுடைய சொந்த வலைப்பதிவை ஆதாரமாகக் காட்டுகிறார். அந்த வலைப்பதிவில் காழகம் என்பதைக் கெடா என்பதாக அவர்தான் கூறுகிறார். ஆதாரமற்ற கூற்றை இங்கே ஆதாரப்படுத்துகிறார். இத்தகைய வரிகளையும் பிழையான ஆதாரத்தையும் நீக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 04:08, 31 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

மேற்படி பிழையான ஆதாரம் வழங்குதலின் காரணமாக, மலாக்கா முத்துக் கிருஷ்ணன் பட்டினப்பாலை என்ற துணைத் தலைப்பின் கீழ் தொகுத்துள்ளவற்றை நீக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 04:13, 31 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
காழகம் என்பது இன்றைய பர்மா என்பதற்கு எவ்வித ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை. உங்களிடம் இருந்தால் தாருங்கள். //கடாரம், கடா, கெடாஹ், காலாஹ், காழகம், Kataha, Kietcha முதலிய பெயர்கள் அனைத்தும் கடாரத்தைக் குறிக்கும்// என்று மலேசிய அறிஞர் ஜெயபாரதி எழுதியிருக்கிறார்.--Kanags \உரையாடுக 08:11, 31 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

காழகம் என்றால் பர்மா என்ற கருத்தை செங்கைப் பொதுவன்தான் இட்டுள்ளார். அவரிடமே அதனைக் கேட்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 11:44, 31 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

காழகம் பற்றி மேற்குறிப்பிட்ட இரு கருத்துக்களும் உள்ளன. ஆதாரத்தை சேர்க்கிறேன். ஆதாரம் தேவை வார்ப்புருவின் பயனை சில பேர் அறியாமல் உள்ளது போல் தெரிகிரது. :)- --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:18, 18 சனவரி 2013 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா ஆதாரம் காட்டுதல்

[தொகு]

விக்கிப்பீடியாவின் ஒரு கட்டுரையின் உள்ளடக்கத்தை மற்றொரு கட்டுரைக்கு ஆதாரமாகத் தருவது ஏற்கத் தக்கதா?--பாஹிம் (பேச்சு) 04:41, 31 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

பாஹிம் உங்களுடைய கேள்வி ஆதாரம் சுட்டுதல் தொடர்பிலான பரந்துபட்ட கேள்வி. ஒரு கட்டுரைக்கு இன்னொரு கட்டுரையை அல்லது ஆவணத்தை ஆதாரம் காட்டுவது பல சந்தர்ப்பங்களில் அபத்தமாக அமைந்துவிடுவதைக் கண்டிருக்கின்றோம். ஆயினும் தவிர்க்கமுடியாதபடி அதையே பின்பற்றவும் வேண்டி உள்ளது. ஆதாரம் சொல்லப்பட்டவை எப்போதும் உண்மையே என ஒப்புக்கொள்ளமுடியாது. அதற்காக ஆதாரம் அற்றவை பொய்மையும் அல்ல. ஆய்ந்து முடிவெடுத்தவையும் கூட பொய்யாக இருப்பதுவும் கண்கூடு. தகவல் உலகத்தில் இவைதான் நேர்வு. ஆக இரண்டு நிலைப்பாடுகளையும் கட்டுரையில் உள்ளடக்குவதே சரி எனப்படுகின்றது. விக்கிப்பீடியாவின் ஒரு கட்டுரைத்தகவல் ஆதாரத்துடன் இடப்பட்டிருந்தால் அந்த ஆதாரத்தை சேர்த்துத் தருவதே சரி. காழகம் என்பது பர்மாவைக் குறிப்பதாக சில ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன என கட்டுரையில் காட்டலாம். ( கண்டநகர்வுக் காலத்தின் முன் பர்மா- சிங்கப்பூர் ஒன்றாய் இருந்திருக்குமோ.)--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:25, 31 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]


தலைப்பு

[தொகு]

இக்கட்டுரை மலேசிய மாநிலத்தைப்பற்றி குறிப்பிடுகிறது. கடாரம் என்னும் கட்டுரை இராசேந்திரன் படையெடுத்து வென்ற நிலப்பகுதியை பற்றி குறிப்பிடுகிறது. தகவல்கள் கிடைக்கும் போது அக்கட்டுரை விரிவடையும், இவ்விரண்டு கட்டுரைகளையும் ஒன்றிணைப்பது சரியாக இருக்காது என்பது என் கருத்து. --குறும்பன் (பேச்சு) 17:20, 18 சனவரி 2013 (UTC)[பதிலளி]

கெடா பெயர் மாற்றம்

[தொகு]

கெடா என்பது மலேசியாவில் அனைத்து மலேசியர்களும் பயன்படுத்தும் ஒரு வழக்குச் சொல். ஒரு மாநிலத்தின் பெயர். மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் அனைவரும் கெடா மாநிலத்தை ‘கெடா’ என்று தான் அழைக்கிறார்கள். அழைத்தும் வந்தார்கள். அழைக்கவும் போகிறார்கள். சரி. அந்த ‘கெடா’ எனும் சொல்லை ஏன் போட்டிப் போட்டுக் கொண்டு கடாரம், காழகம் என்று ஓர் இடத்தின் அழைப்புப் பெயரையே மாற்றி அமைக்க வேண்டும். நம்முடைய தனித் தமிழ்ப் பற்றுதலையும் தமிழ்த் தாக்கத்தையும் இப்படி ஒரு மாற்றத்திலா காட்ட வேண்டும். சொல்லுங்கள்.

கெடா என்பதன் தமிழ் வடிவம் கடாரம். சரி. ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், மலேசியாவில் யாரும் கடாரம் என்று அழைப்பது இல்லையே. கெடா என்றுதானே அழைக்கிறார்கள். இங்குள்ள மலேசிய மக்கள் எப்படி அழைக்கிறார்களோ அப்படியே விட்டு விடுங்கள். மாற்றம் செய்ய வேண்டாம். கெடா என்று அப்படியே இருக்கட்டும். அடுத்து, தமிழ் படுத்த வேண்டும் என்றால் இருக்கிற கண்ணையும் கெடுத்து பார்வையைச் சேதப் படுத்துவது போலாகும். -மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு)--ksmuthukrishnan 05:12, 15 பெப்ரவரி 2016 (UTC)

கெடா மாநிலம்

[தொகு]

கெடா என்பது மலேசியாவில் ஒரு மாநிலத்தின் பெயர். ஆகவே, கெடா எனும் பெயரில் இந்தக் கட்டுரை அப்படியே இருக்கட்டும். கடாரம் எனும் தலைப்பில் வேறு ஓர் இலக்கியக் கட்டுரையை எழுதலாமே. கடாரம் என்பது இலக்கியத் தொடர்பானது. கெடா என்பது புவியியல் தொடர்பானது.-மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு)--ksmuthukrishnan 15:02, 15 பெப்ரவரி 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கெடா&oldid=2021955" இலிருந்து மீள்விக்கப்பட்டது