பேச்சு:கூலும்
Appearance
கூலாம் அல்லது கூலோம் (ஈழத்து வழக்கு) சரியானது.--Kanags \பேச்சு 12:23, 18 ஆகஸ்ட் 2009 (UTC)
- நமது பள்ளிப் பாட நூல்களில் இவ்வாறு பதிப்பிட்டு இருக்கிறார்கள் . ஈழத்து வழக்கு எனக்கு என்ன வென்று தெரியவில்லை . எது சரி என்று தாங்களே கூறவேண்டும் . -- இராஜ்குமார்
- பல வேற்றுமொழிச் சொற்களுக்கான சரியான ஒலிப்பு (பலுக்கல்) தெரியாததால், தமிழ்நாட்டில் பல சொற்கள் தவறாக எழுதப்படுகின்றன. இவர் பிரான்சிய நாட்டவர். இவர் பெயரை கூலாம் என்று ஒலிக்கின்றார்கள். கூலோம், கூலூம் என்றும் சிலர் எழுதுகிறார்கள். Alexander Graham Bell போன்ற பெயர்களில் வரும் Graham என்பதை கிராம் என்றுதால் ஒலிக்கிறார்கள். ஆனால் தமிழர்கள் கிரஹாம் என்று எல்லா எழுத்தையும் ஒலிப்பது போல எழுதுகிறார்கள். L'Hospital rule என்று நுண்பகுப்பியல் கணக்கில் ஒரு விதி உண்டு இதனை ல-ஆப்பிட்டால் என்று H ஐ விடுத்து ஒலிக்க வேண்டும். இது தெரியாமல் எல்.ஹாஸ்பிட்டால் விதி என்று தமிழர்கள் கூறுகிறார்கள். solder என்னும் சொல்லை சாடர் என்று ஒலிக்க வேண்டும் ஆனால் தமிழர்களாகிய நம்மில் பலர் சோல்டெர் என்று ஒலிக்கின்றோம். sew என்னும் சொல்லை சோ என்று ஒலிக்க வேண்டும். நாம் சியூ என்கிறோம். sewing machine (சோயிங் ம^சீன்) என்பதைத் தவறுதலாக சியூயிங் ம^சீன் என்கிறோம். பெரிய தவறு ஒன்றும் இல்லை. இச்சொலை எம் மொழியில் இப்படித்தான் ஒலிக்கின்றோம் என்று கூறுவதால் தவறில்லை. ஆனால் இன்னும் சற்று நெருக்கமான ஒலிப்பு வேண்டுமெனில், அதுவும் தமிழில் இயலும் எனில், அப்படிச் செய்யலாமே என்பதுதான். ஒரே சீராக இருப்பதும் நல்லது.--செல்வா 12:59, 18 ஆகஸ்ட் 2009 (UTC)
- நமது பள்ளிப் பாட நூல்களில் இவ்வாறு பதிப்பிட்டு இருக்கிறார்கள் . ஈழத்து வழக்கு எனக்கு என்ன வென்று தெரியவில்லை . எது சரி என்று தாங்களே கூறவேண்டும் . -- இராஜ்குமார்
Start a discussion about கூலும்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve கூலும்.