உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கலைமாமணி விருது

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே.ஏ. தங்கவேலு, கா.மு.ஷெரிப், எஸ்.எம்.எஸ். சுப்பையா நாயுடு, டி.வி.நாராயணசாமி ஆகியோர் பெயர்கள் 1968 - 1969 மற்றும் 1969 - 1970 ஆம் ஆண்டுகளுக்கான பட்டியலிலும் இடம் பெற்றிருக்கிறதே. இவர்களுக்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் இருமுறை வழங்கப்பட்டது போல் இருக்கிறது. இவர்களுக்கான ஆண்டைச் சரி பார்த்து சரியானதைப் பதிவு செய்யவும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:14, 26 மார்ச் 2012 (UTC)

'அதிகாரப்பூர்வ விருது பட்டியல்' போன்ற ஆதாரங்களை மேற்கோளில் குறிப்பிடுவது, கட்டுரையின் நம்பகத்தன்மையை உறுதிசெய்யும். ஏனெனில் இந்தக் கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு, பிற பக்கங்கள் நம்மால் விரிவாக்கம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது. உதாரணமாக... டி. வி. கோபாலகிருஷ்ணன் கட்டுரையில் அவர் கலைமாமணி விருது பெற்றது குறிப்பிடப்படவில்லை; பயனர் எவரேனும் டி. வி. கோபாலகிருஷ்ணன் கட்டுரையை இற்றைப்படுத்த முனையும் தருணத்தில்... 'கலைமாமணி விருது' எனும் கட்டுரை தகுந்த ஆதாரங்களுடன் இருப்பது சிறந்தது.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:24, 28 மார்ச் 2012 (UTC)

கட்டுரையின் நம்பகத் தன்மையைப் பாராட்டியுல்ளவர்களுக்கு நன்றி. மேலும் அனைத்தையும் அச்சில் எடுத்து ஒப்பு நொக்கியபின்னரே கலைமாமணி கட்டுரை முற்றுப்பெறும் என்று உறுதி கூறுகின்றேன் சீராசை சேதுபாலா. 18-04-2012 08-31 காலை, முடிந்தவுடன் மிகச் சிறப்பாகவும் இதுவரை இல்லாத அளவிற்குச் சிறப்பாகவும் இருக்கும்.

டிவி.கோபாலகிருஷ்ணன் எந்தப்பிரிவச் சர்ந்தவர் என்பதையும், முடிந்தால் எந்த ஆண்டிற்குள் ஜிடைக்கப்பெற்றிருக்கவேண்டும் என்பதையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

அனைத்தும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சென்னை -28 வெளியிட்டுள்ள புத்தகத்தில் உள்ளபடியே தட்டச்சு செய்யப்பட்டுள்ளது. ஐயப்பாடுகள் எழுந்தா;ல் அவர்களை அணுகுவதே சிறப்பு 2000ம் ஆண்டு பாக்கியுள்ளது.

1 புதுடெல்லி சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள் பட்டியலையும் இணைக்க வேண்டியதும் பாக்கியுள்ளது

2. கலைமாமணி விருது பெற்று பொற்கிழி வ்ழங்கப்பட்ட கலைஞர்கள் ( ரூ1000 ), 1974-75 முதல்1986-87 வரை ஒரு பட்டியல் உள்ளது .

3. ரூ.5000 கொடுக்கப்பட்டதாக 1990-91. 91-92, 92-93. 93-94. கொடுக்கப்பட்டதாகவும் ஒரு பட்டியல் கூறுகின்றது. வேறு எதுவும் இல்லை.

4. ரூ 10,000 கொடுடுக்கப்பட்டதாக. 1994-1995,95-96, 97-98, 98-99, 99-2000 ஒரு பட்டியல் உள்ளது;.

வரிசை எண் இரண்டிலிருந்து நான்குவரை உள்ளவை இசை, நாடகம், பரதம், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, தவில் கலஞர், போன்றவற்றிற்காகக் கொடுக்கப்பட்டவையாக உள்ளன.


இவற்றை நம்பாமல் எப்படி இருக்க முடியும்?. மேற்கொண்டு என்ன செயவதை நேரடியாக வழிகாட்டி ஊக்குவிக்க வேண்டுகின்றேன்.

வீ .கே. டி. பாலன் குறித்த தமிழ்க் கட்டுரைகள் அனைத்தையும் நீக்கிவிட வேண்டுகின்றேன். நன்றியுடன் அன்பு, சீராசை சேதுபாலா.

வீ.கே.டி. பாலன் குறித்தச் கட்டுரையை உள்ளது உள்ளபடி எழுத்திடப் பலர் தை எழுப்புவதால்தான், எழுதவேண்டிய முறைகளைத் தெர்ந்து கொண்டு எழுதலாம் என்ற ஆசையில்தான்!

சீராசை, எதற்காக பாலன் கட்டுரையை நீக்கச் சொல்கிறீர்கள் எனத் தெரிவிக்க வேண்டுகிறேன்.--Kanags \உரையாடுக 04:44, 10 ஏப்ரல் 2012 (UTC)
  • சீராசை சேதுபாலா, தங்களிடம் பலமுறை தொலைபேசியில் தெரிவித்து விட்டேன். கலைமாமணி விருது பட்டியல் தங்களிடமிருக்கும் புத்தகத்தின் அடிப்படையில் எழுதுவதாகச் சொல்கிறீர்கள். அனைத்தையும் ஆண்டு வாரியாகச் சரிபார்த்து தாங்களே சரி செய்வதுதான் சரி. தவறுகள் நிகழ்ந்து விடக் கூடாது எனபதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

//தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சென்னை -28 வெளியிட்டுள்ள புத்தகத்தில் உள்ளபடியே தட்டச்சு செய்யப்பட்டுள்ளது. ஐயப்பாடுகள் எழுந்தால் அவர்களை அணுகுவதே சிறப்பு// என்கிற தங்களின் பதில் சரியாகத் தெரியவில்லை.

மேலும் வீ. கே. டி. பாலன் எனும் கட்டுரை அதே தலைப்பிலும், எவ்வித மாற்றமும் செய்யப்படாமலும் இருக்க வேண்டும் என்றும் விரும்புவதும் சரியானதல்ல. தமிழ் விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம். இதில் எப்படி இருக்க வேண்டும் என்பதை விக்கிப்பீடியா:வாழ்க்கை வரலாறு எழுதுதல் கையேடு, விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும் போன்ற பக்கங்களைப் படித்து முழுமையாக அறிந்து செயல்படவும். தாங்கள் நினைத்தால் கட்டுரையைப் பதிவிட வேண்டும், வேண்டாமென்றால் நீக்கிவிட வேண்டும் என்பது சிறு குழந்தையின் செயல்பாட்டைப் போலுள்ளது.

தமிழ் விக்கிப்பீடியாவில் இடம் பெறும் படைப்புகள் எப்படி இடம் பெறுகின்றன? இதைவிட நாம் எப்படி சிறப்பாகச் செய்யலாம்? என்பதில் ஆர்வம் காட்டுங்கள். நன்றி.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:37, 18 ஏப்ரல் 2012 (UTC)

ஆகஸ்டு 31/ 2016.

31- 08- 2016 ஆம் நாள் (இன்று) நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், பொன்னி, 31 பி.எஸ்.குமாரசாமி இராஜா சாலை சென்னை- 28 லிருந்து ஓர் ப்த்தகம் வந்தது. (1293/அ.4/2016 ).1.கலைமாமணி விருது 2. பொற்கிழி 3.கேடயம் 4. திருவுருவப் படங்கள் பட்டியல் என்று முன் அட்டையில் அச்சிடப்பட்டிருந்தது. முதல் பக்கம் கலைமாமணி விருதாளர்கள், பொற்கிழி வழங்கப்பெற்றவர்கள், சிறந்த கலை நிறுவனங்களின் பட்டியல், சிறந்த நாடகக் குழுக்களின் பட்டியல், மறைந்த கலை மேதைகளின் திருவுருவப் படப் பட்டியல் என்ற தலைப்புக்கள் இடம் பெற்றிருந்தன. 1959- 2000 என்பதும் அடக்கம். இதற்குப்பின் அவர்கள் நடப்பு நாள்வரை வேறு புத்தகம் எதுவும் போடவில்லை என்பதையும் நேரில் சென்றிருந்தபோது தெரிவித்தாகள்.

இயல்துறையில் துவங்கி பிற கலைத்துறை வரை 41 பக்கங்களில் 1959 முதல் 2000 வரை ‘கலைமாமணி’ விருதுபெற்ற கலைஞர்கள் விவரம் என்னும் தலைப்பில் துறைவாரியாக அச்சிடப்பட்டுள்ளது. தற்போது விக்கிபீடியாவில் ஆண்டுவாரியாக ஆதாரங்களைப் பெற்றுப் பதிவு செய்துள்ள பயனர் பெரிதும் பாராட்டுக்குரியவர். ஏனெனில் இதன் கடுமையை அனுபவித்தவன் நான். கலைமாமணி விருது பெற்றவர்கள் பட்டியலில் சிலர் பெயருக்குப் பின்னால் # குறியிடப்பட்டிருந்தது. அதற்கு விளக்கமாக அடிக்குறிப்பில் புதுடில்லி சங்கீத நாடக அகாதமி விருதாளர்கள் என்று குறிக்கப்பட்டுள்ளது. கலைமாமணி விருதுடன் புதுடெல்லி சங்கீத நாடக அகாதமி விருதையும் சேர்த்துப் பெற்றார்களா / தனித்தனியாகவா உள்ள வேறுபாடுகளைச் சேகரிக்க வேண்டும். சங்கீத அகாதமி விருது பெற்றவர்களைத் தனியாகக் காட்டவேண்டுமா அல்லது அவர்களை போன்றே * குறியிட்டால் மட்டும் போதுமா? உரியவர்கள் வழிகாட்டிட வேண்டும். விக்கிபீடியா தகவல்கள் மேலும் துல்லியமாக இருக்கும். நன்றி . சங்கர இராமசாமி

இந்த விருது திரைத்துறையினருக்கு மட்டுமானதா? ந.தேவதாஸ். (பேச்சு) 08:04, 23 பெப்ரவரி 2021 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கலைமாமணி_விருது&oldid=3110940" இலிருந்து மீள்விக்கப்பட்டது