பேச்சு:கறையான்
- இக்கட்டுரை ஓரிரு வாரங்களில் முழுமைப் பெறும்.---த* உழவன் 09:20, 5 ஆகஸ்ட் 2009 (UTC)தொடர்புக்கு..
பாராட்டுகள்
[தொகு]த* உழவன், உங்கள் உழைப்பு, ஆர்வ வீச்சை இங்கு விக்கிப்பீடியாவில் காண மிக மகிழ்கிறேன். அருமையாக வளர்த்தெடுப்பீர்கள் என்று நம்புகிறேன். துவக்கியதற்கு நன்றி.--செல்வா 14:07, 5 ஆகஸ்ட் 2009 (UTC)
ஆய்த எழுத்துடன் வரும் சகரம்
[தொகு]தென் ஆஃசுதிரேலியா என்று எழுதியிருப்பதை ஆசுத்திரேலியா என்றே எழுதலாம். காசு, பேசு, வீசு, கொசு என்றெல்லா வருவது போல வல்லினம் மிகாமலும், மெல்லின ஒற்று முன் வராமலும் இருக்கும் இடங்களில் சகரம் காற்றொலி சகரமாக இயல்பாய் தமிழில் வழங்குகின்றது. ஆகவே ஆஃசு- என்று ஆய்த எழுத்து வேண்டாம். ஆனால் linux, oxford முதலான இடங்களில், வல்லெழுத்துடன் வரும் காற்றொலி சகரத்தைத் தமிழில் லினக்ஃசு, ஆக்ஃசுபோர்டு என்று குறிக்கலாம். திருவள்ளுவரின் திருக்குறலில்:
- தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
- வேண்டாது சாலப் படும்.
என்பதில் வரும் கஃசா என்பதை kuxsaa அல்லது kahssaa என்று ஒலித்தல் வேண்டும். ஆகவே -xsaa அல்லது -hsaa என வரும் இடங்களில் இதனைப் பயன்படுத்தலாம். தமிழ்வழி புள்ளி வைத்த வல்லின மெய்யெழுத்துக்குப் பின் இப்படி ஆய்தம் வருவது கிடையாது, ஆனால் இது வேற்று மொழிச் சொற்களுக்கான விதிவிலக்காகக் கொள்ளலாம். இப்பக்கத்தில் இது பற்றி எழுதியுள்ளேன்.--செல்வா 14:25, 5 ஆகஸ்ட் 2009 (UTC)
புதைப்படிவக்காலம் பற்றிய வினா
[தொகு]- Cretaceous என்பதே கறையானின் தொன்மைக் காலம் என்றும் கூறுகிறார்கள். எது சரி? அதனை எப்படி உறுதிசெய்வது? இங்கு Triassic என்பதையே கையாண்டுள்ளேன்.த* உழவன் 12:37, 13 ஆகஸ்ட் 2009 (UTC)
- புதைப்படிவக் காலம் சரிபார்க்கப் பட்டது.Cretaceous என்பதே என்று அரியப்பட்டது.த* உழவன் 12:40, 28 டிசம்பர் 2009 (UTC)
கரையான்-கறையான்
[தொகு]கரையான், கறையான் எது சரி?--சிவக்குமார் \பேச்சு 15:47, 23 ஆகஸ்ட் 2009 (UTC)
- கரையான்.
- கறையான் - விக்சனரி -- த* உழவன் 01:43, 24 ஆகஸ்ட் 2009 (UTC){தொடர்புக்கு..}
- விளக்கத்திற்கு நன்றி தகவலுழவரே :) --சிவக்குமார் \பேச்சு 07:46, 24 ஆகஸ்ட் 2009 (UTC)
- சிவா! என்னை உழவரே என்றழைக்காமல், உழவனே என்றழைத்தால், உங்களிடமிருந்து நான் அந்நியப்படாமல் இருப்பேன் அல்லவா?:)த* உழவன்
@தகவலுழவன்: தோழமைக்கு வணக்கம், தாங்களின் கறையான் கட்டுரையில், கரையான்-கறையான் "ரை" - "றை" எனும் எழுத்து ஐயத்தில் அகப்பட்டுள்ளதை அறிந்து, மேற்கோள்களை சரிபார்த்தோடு என்னால் இயன்றவரை வலைகளிலும், நூல்களிலும் ஆராய்ந்ததில் கரையான் என்ற சொல்லே பெருமளவில் கையாளப்பட்டுள்ளதை அறிய நேர்ந்தது, தாங்கள் மேலுமொருமுறை சரிப்பார்ப்பது நன்று. நன்றிகள்!--அன்புமுனுசாமி பேச்சு 12:43 25]4 பிப்ரவரி 2016 (UTC)