பேச்சு:கண்டிப் போர்கள்
இராச்சியம் என்பது தமிழ் சொல் இல்லை என்று நினைக்கிறேன். இராச்சியத்திற்கு இனையான தமிழ் சொல் அரசு என்று நினைக்கிறேன். :வின்சு 03:40, 2 மார்ச் 2011 (UTC)
இராச்சியம் என்பது வடமொழிச் சொல். அரசு என்பதும் ஒருவேளை வடமொழிச் சொல்லா என்பது தெரியவில்லை. தமிழில் வடமொழி கலப்பதற்கு முற்பட்ட காலங்களில் நாடு என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அரசு என்பது அவ்வாறு பயன்படுத்தப்பட்டதா என்பது பற்றி அறியேன்.--பாஹிம் 04:10, 2 மார்ச் 2011 (UTC)
ஆங்கிலச் சொல்லான kingdom என்பதற்கு மன்னராட்சி நிலவும் நாடு என்றே பொருள்படுகிறது. எனவே, தமிழில் மன்னன் என்பதைக் குறிக்கும் கோ என்ற சொல்லையும் நாடு என்பதையும் இணைத்து கோநாடு என்று சொல்லலாமா என்பது பற்றிக் கருத்தறிய ஆவல்.--பாஹிம் 04:13, 2 மார்ச் 2011 (UTC) கோநாடு என்பது தற்போது வழக்கத்தில் இல்லை. எனினும் அதை உபயோகிக்கும் போது தமிழுக்கு புதிதாக ஒரு சொல் கிடைக்கும்.:வின்சு 04:19, 2 மார்ச் 2011 (UTC)
- வின்சு உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதே, ஆனாலும் மன்னராட்சி முறையின் கீழ் அரசு எனும் சொல்லுக்குப் பதிலாக இராச்சியம் எனும் சொல்தான் அதிகமாகப் பயன் படுத்தப்படுகின்றது. எனையவர்களின் கருத்துக்களையும் பார்ப்போம்--P.M.Puniyameen 04:25, 2 மார்ச் 2011 (UTC)
இராச்சியம் என்பதைப் பயன்படுத்தலாம் என்ப்தே என் கருத்து. அரசு என்பது பலவகை ஆட்சி முறைகளையும் குறிக்கப் பயன்படுவதால் மன்னராட்சி/பிற முறைகளைப் பிரித்துக் காட்ட “ராச்சியம்” வசதியாக இருக்கும். விக்கிப்பீடியாவில் பல வடமொழி மூல சொற்களையும் நன்கு பொருந்தி வருமெனில் பயன்படுத்தி வருகிறோம். ஐக்கிய இராச்சியம் (united kingdom) ஆகியவற்றில் இராச்சியம் என்றே அழைத்து வருகிறோம்.--சோடாபாட்டில்உரையாடுக 05:10, 2 மார்ச் 2011 (UTC)
இராச்சியம் என்பது மட்டுமன்று, ஐக்கியம் என்பதும் வடமொழிச் சொல்லாகவே உள்ளது. ஐக்கிய (United) என்பதற்குப் பதிலாக ஒருமைப்பட்ட என்ற சொல் பொருந்தி வருகிறது. அவ்வாறே, Unitary என்பதை ஒன்றுபட்ட என்று தமிழ்ப்படுத்தலாம்.--பாஹிம் 05:16, 2 மார்ச் 2011 (UTC)
தமிழ்நாட்டில் இராச்சியம் என்ற சொல் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்றே தோன்றுகிறது. குறிப்பாக சேரர், சோழர், பாண்டியர், அகபர், குப்தர், அசோகர் போன்றோரின் ஆட்சி பகுதிகளை குறிப்பிட தமிழ்வரலாற்றில் இராச்சியம் என்ற வார்த்தை உபயோக்கப்படுத்தபடவில்லை. மேலும் அவற்றை அம் மன்னர் ஆண்ட பகுதிகள் என்ற வகையிலேயே குறிப்பிட படுகிறது அல்லது இணைந்த பகுதிகள் என்றே கூறப்படுகிறது. ஏன் வழக்கொழிந்த வடமொழிச் சொல்லிற்கு நாம் உயிர் கொடுக்க வேண்டும். இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே. வின்சு
என்னுடைய கருத்தும் அதேதான். රාජ්ය என்று சிங்களத்தில் பயன்படுத்துவது போன்றே இராச்சியம் என்ற சொல் இலங்கையில் தமிழில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. எனினும், நாம் வடமொழிச் சொல்லைத் தவிர்ப்பது நல்லது. வடமொழிக் கலப்பிற்கு முற்பட்ட காலத் தமிழ் மன்னர் ஆண்ட பகுதிகளில் இராச்சியம் என்றொரு சொல் பயன்படுத்தப்படவில்லை.--பாஹிம் 07:23, 2 மார்ச் 2011 (UTC)
Start a discussion about கண்டிப் போர்கள்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve கண்டிப் போர்கள்.