உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கடமான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடமான் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
கடமான் என்ற இக்கட்டுரை, விக்கித்திட்டம் இந்தியத்துணைக்கண்டப் பாலூட்டிகள் என்னும் திட்டத்துள் அடங்கியதாகும்.

இத்திட்டக் கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடையவர், இத்திட்டத்தில் உறுப்பினராகலாம். இத்திட்டத்தில் பங்களிக்க விரும்புவர், இத்திட்டப் பக்கத்திற்குச் சென்றால், அங்கு நிறைவேற்ற வேண்டியப் பணிகளின், பட்டியலைக் காணலாம்.

கடமான் என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


மிளா கட்டுரையை ஒட்டி முன்னர் இருந்த உரையாடல்

[தொகு]

அங்கு உள்ள உரையாடலையும் இங்கே ஒட்டிவிட்டு அதை மாற்றுவழியாக்கலாமா? -- சுந்தர் \பேச்சு 06:00, 16 சூலை 2011 (UTC)[பதிலளி]

கீழே இரண்டையும் இணைத்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 07:29, 16 சூலை 2011 (UTC)[பதிலளி]

வழக்கம் போல் நல்ல கட்டுரை. அருமை.

//மிளா போன்ற விலங்குகளே காடுகளின் வனத்தை தீர்மானிக்கின்றது.//

காடுகளின் வனத்தை?

முற்காடுகள் என்றால்? முள் இருக்கும் காடுகளா? இல்லை, முன்னால் இருந்த காடுகளா? முள்+காடுகள்=முட்காடுகள் என்று வரும்.

வனம் தமிழ்ச்சொல்லா :) --ரவி 13:41, 3 ஆகஸ்ட் 2008 (UTC)

காடுகளின் வளத்தைத் தீர்மானிக்கிறது என்பது பொருந்து வருகிறது அல்லவா?--சிவக்குமார் \பேச்சு 14:22, 3 ஆகஸ்ட் 2008 (UTC)

நன்றி :) "காடுகளின் வளத்தைத் தீர்மானிக்கிறது" என்பதே சரி- திருத்திவிட்டேன் --கார்த்திக் 16:00, 4 ஆகஸ்ட் 2008 (UTC)

17ஆம் ஆதாரம்

[தொகு]

கார்த்தி, நீங்களும் நானும் ஒரே நேரம் திருத்தியதில் 17ஆம் ஆதாரத்தில் ஏதோ பிழை விட்டு விட்டேன். சரி பார்த்து திருத்தி விடுங்கள். வெளி இணைப்புகளும் சரியாகத் தர வேண்டும்--ரவி 13:42, 3 ஆகஸ்ட் 2008 (UTC)

17ஆம் ஆதாரம் சரியாக உள்ளது ரவி. அவ்விடத்தில் இரண்டு ஆதாரங்கள் உண்டு --கார்த்திக் 16:00, 4 ஆகஸ்ட் 2008 (UTC)

கபில நிறம் எதிர் கரும்பழுப்பு நிறம்

[தொகு]

கபில நிறம் என்ற பயன்பாட்டை நான் இதுவரை கண்டதில்லை. மாறாக, கரும்பழுப்பு எளிதில் பொருள் உணர்த்துவதாகவும் நற்றமிழ்ப் பெயராகவும் அமைந்துள்ளது. எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லையெனில் கரும்பழுப்பை முதன்மைப்படுத்திவிட்டு கபில நிறத்தை அடைப்புக்குள் தரலாம். -- சுந்தர் \பேச்சு 09:45, 12 ஆகஸ்ட் 2008 (UTC)

கபில நிறம் என்பது பழுப்பு நிறம். சமசுக்கிருதச் சொல். பழுப்பு, கரும்பழுப்பு, செம்பழுப்பு, மண்ணிறம் போன்று எளிதாகப் பொருள் புரியும் சொற்களை ஆளலாம். சில இடங்களில் கபில நிறம் என்றும் இருக்கலாம். --செல்வா 21:04, 4 ஆகஸ்ட் 2009 (UTC)

அறிவியல் பெயர்

[தொகு]

Cervidae, Cervinae என்பதெல்லாம் இலத்தீன் மொழிச் சொல்லாகிய cervus = deer = மான் என்பதில் இருந்து வந்ததே. ஆகவே மான்குடும்பம் (மான்.கு), மான் துணைக்குடும்பம் (மான் து.கு.) எனக் குறிக்கலாம். இடாய்ட்சு மொழியைப் பாருங்கள். அவர்கள் இக்குடும்பத்தை Hirsche என்கிறார்கள். பேரினத்தை (= Gattung = Genus) Rusa என்கிறார்கள். Cervus என்று கூறுவதில்லை. பிறைக்குறிகளுக்குள் தருகிறார்கள். இதே போல பிரான்சிய மொழிகளில் கூட மரங்களின் அறிவியற் பெயர்களையும் கூட அவர்கள் தங்கள் மொழிப் பெயர்களிலேயே வழங்குகின்றனர். தொடர்புக்காக பிறைக்குறிகளுக்குள் சில நேரம் இலத்தீன் மொழியடிப்படைச் சொற்களைச் சுட்டுகின்றனர். இத்தனைக்கும், பிரான்சிய மொழி இலத்தீன் வழி மொழி (இடாய்ட்சு வேறு கிளை மொழி). எனவே நாம் தயங்காது மான், மான் குடும்பம், மான் பேரினம் எனக் குறிக்கலாம். --செல்வா 21:25, 4 ஆகஸ்ட் 2009 (UTC)

ஆம் செல்வா, வகைப்பாட்டு சட்டத்தை முழுவதும் தமிழில் தரவேண்டும். மேலும் அச்சட்டத்தினுள் சிகப்பு இணைப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். வகைப்பாட்டியலை மேலிருந்து படித்துக் கொண்டு வந்தால் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள இயலும். படிப்படியாக இணைத்து கொண்டுப்போனால் பின்நாளில் நூலிற்கும் அல்லது குறுவட்டு இயற்ற எளிதாக இருக்கும். --கார்த்திக் 21:43, 4 ஆகஸ்ட் 2009 (UTC)

காப்புநிலை சரியானதா?

[தொகு]

Cervus unicolor என்ற அறிவியற் பெயரை The IUCN Red List of Threatened Species இல் இட்டுத் தேடியபோது, கிடைத்த பக்கம் Sambar எனக் காட்டினாலும், அதன் அறிவியற் பெயர் Rusa unicolor என்று தானாகவே மாற்றமடைந்து வருகின்றது. இக்கட்டுரைக்கான ஆங்கிலக் கட்டுரையிலும் Sambar ஆனது Rusa unicolor என்றே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அத்துடன் காப்புநிலையும் Vulnerable = அழிவாய்ப்பு இனம் என்றே வருவதனால் அந்த மாற்றங்களைச் செய்கின்றேன். .--கலை 22:20, 16 ஏப்ரல் 2011 (UTC)

மாற்றுவழியும் பக்க வரலாறும்

[தொகு]

பயனர்:Naa.ganesan என்பவர் ஏற்கனவே த.வி யில் உள்ள மிளா என்னும் கட்டுரையை எடுத்து இங்கு வேறு பெயரில் இட்டுள்ளார். மாற்றுப்பெயருக்கும் வழிமாற்று இருக்கும் எனில் அப்படி அமைக்கலாம். ஆனால் இன்னொரு பெயரில் அதே கட்டுரை இருப்பது வேண்டியதில்லை. இக்கட்டுரையை நீக்குவது வேண்டும். நீக்கும் முன் இக்குறிப்பை இடுகின்றேன்.--செல்வா 15:16, 9 சூலை 2011 (UTC)[பதிலளி]

ஆம், பக்க வரலாறு இங்கு இல்லாமல் வெறும் உரை மட்டும் அந்தக் கட்டுரையில் இருந்து இருப்பது முறையல்ல. இக்கட்டுரையை நீக்கி விடலாம். இதை மிளா கட்டுரைக்கு வழிமாற்றலாம். முதன்மைத் தலைப்பை இறுதி செய்துவிட்டு தேவைப்பட்டால் அக்கட்டுரையை இந்தத் தலைப்புக்குப் (பக்க வரலாற்றுடன்) வழிமாற்றலாம். -- சுந்தர் \பேச்சு 15:46, 9 சூலை 2011 (UTC)[பதிலளி]

கடமான் சொற்பயன்பாடு

[தொகு]

அன்பின் செல்வா,

வணக்கம். கடமான், கடமா, கடமை என்ற சொற்கள் சாம்பர் என்று ஆங்கிலத்தில் சொல்லும் ஒரு எல்க் வலை மான். எல்லா திராவிட மொழிகளிலும் இச்சொல் வழங்கிவருகிறது. பத்திரிகைகளில் பரவலாகப் புழங்கும் கடமான் சொல் எல்லா திராவிட மொழிகளிலும் பாவிக்கின்றனர்.

எனவே, எல்லோருக்கும் பொதுவாய் வழங்கும் கடமான் முதன்மைப் பக்கமாகவும், மிளா என்பதை அங்கு கொண்டு சேர்ப்பதாகவும் செய்துவிட வேண்டுகிறேன்.

கடமான் - இது மிளா என்று போகிறது.

ஆனால், கடமான் என்பது எல்லா இடங்களிலும், பத்திரிகைகளிலும் (கூகுலில் பார்க்கவும்) வழங்கிவரும் பெயர்.

மிளா என்பதை அந்தப் பக்கம் (அதாவது, கடமான்) முதன்மைப் பக்கம் ஆக்கிவிட வேண்டுகிறேன்.


இன்னொன்று: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

இதில் “மிளா” என்பதை “கடமான்/மிளா” என்றும் மாற்றிவிடுங்கள். நன்றி, நா. கணேசன்

நா.கணேசன், நீங்கள் இங்கு பங்களிக்கத் தொடங்கியதை வரவேற்கிறேன். நீங்கள் மிளா கட்டுரையில் இருந்த உரையை எடுத்து கடமான் என்ற தலைப்பில் இன்னொரு கட்டுரையை உருவாக்கியிருந்தீர்கள். அவ்வாறு செய்தால் மிளா கட்டுரையின் பக்க வரலாறு துண்டிக்கப்பட்டுவிடும். இப்போதைக்கு கடமான் கட்டுரையை மிளா கட்டுரைக்கு மாற்றுவழியாக்கியுள்ளேன். எது முதன்மைப் பெயர் என்று சான்றுகளுடன் நிறுவி விட்டால் மற்றதை வழிமாற்றாக்கி விடலாம். கடமான் என்ற பெயரின் பயன்பாட்டுக்கான சான்றுகளை நாங்கள் கட்டுரையில் சேர்த்தால் பயனுள்ளதாக இருக்கும். மிளாவின் பயன்பாட்டையும் பார்த்துவிட்டு முடிவு செய்யலாம். கடமா என்று வேறு ஒரு விலங்கு இருப்பதால் குழப்பத்தைத் தவிர்க்க வேண்டியது இன்றியமையாதது. ஆகையால் உங்கள் மாற்றங்களை முதலில் பேச்சுப் பக்கத்தில் உரையாடிவிட்டுச் செய்தால் நலம். -- சுந்தர் \பேச்சு 15:58, 9 சூலை 2011 (UTC)[பதிலளி]

சுந்தர்,

தமிழ்நாட்டில் எல்லாரும் புழங்குவது கடமான் என்ற பெயரைத்தான். எல்லா திராவிட மொழிகளிலும் உள்ளதை திராவிட வேர்ச்சொல் அகராதியில் பாருங்கள். http://groups.google.com/group/thamizayam/msg/10d532a4c59be45f

கடமா என்று Bos gaurus இலக்கியங்களில் குறிக்கப்படுவதில்லை. சென்னைப் பல்கலைப் பேரகராதி காட்டும் நாலடியார் வெண்பாவில் உள்ள கடமா - மத யானை என்ற பொருள் என்கின்றனர் உரைகாரர்கள். எனவே, கடமான், கடமை, கடமா எல்லாம் சாம்பர் மானுக்கு உரிய பெயர்கள்.

எனவே, Bos gaurus (இலக்கியப் பெயர்: ஆமா, ஆமான்) என்பதாகும். காட்டுமாடு (அ) காட்டா (அ) காட்டுப்பசு என்று அந்தப்பக்கத்தைத் திருத்திவிடலாம். அல்லது, ஆமா = ஆ(பசு) போன்ற காட்டுவிலங்கு. ஆமா (bos gaurus) பற்றி ஏராளமான செய்திகள் உள்ளன. பின்னால் கட்டுரை தருகிறேன். நன்றி, நா. கணேசன்

கடமான் = கடமை, கடமா, Sambar deer


கடமான், கடமை, கடமா என்னும் வார்த்தைகள் ஆங்கிலத்தில் சாம்பார்(Sambar) மான் என்று பெயர்பெறுவது ஆகும். இதன் விலங்கியற் பெயர்: Rusa unicolor en:Sambar_(deer)

கடமானின்/கடமாவின் ஒளிப்படங்கள்:

மதராஸ் தமிழ் அகராதி:


(1) கடமா¹ kaṭam-ā , n. < கடம்² + ஆ. Bison, wild cow. See காட்டா. கடமா தொலைச்சிய


கானுறை வேங் கை (நாலடி, 300).


(2) கடமான் kaṭam-āṉ , n. < கடன்² + ஆன். See கடமா¹. தேனொடு கடமான் பாலும் (கந்தபு.


வள்ளிய. 76).


இவை இரண்டும் Bison, wild cow அல்ல என்பது முழுப்பாடல்களைப் படித்தால் தெரியும். அதை அடுத்துப் பார்ப்போம்.



இப்படி பொருள் மதராஸ் அகராதி கொடுப்பதால், கடமா = bison என்று எமனோ எழுதியுள்ளார். எல்லா திராவிட மொழிகளிலும் கடமா/கடமான்/கடமை என்றால் Rusa unicolor மான் தான்.


கடமான் என்றால் bison அல்ல என்பதைத் சங்க இலக்கியங்களில் இருந்து தமிழிலக்கியங்களில் பார்த்தால் தெளிவாக விளங்கிவிடும். எல்லா திராவிட மொழிகளிலும் இதன் பெயர் கடமான் என்பதை திராவிட வேர்ச்சொல் அகராதி (DEDR 1114) காட்டுகிறது.


(1) நாலடியார் 300:

300. கடமா தொலைச்சிய கானுறை வேங்கை 
இடம்வீழ்ந்த துண்ணா திறக்கும்; -இடமுடைய 
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர், 
மானம் மழுங்க வரின். 


இளவழகனார் உரை (சை. சி. நூ. கழகம், சென்னை):

”கடம் மா தொலைச்சிய கான் உறை வேங்கை இடம் வீழ்ந்தது 
உண்ணாது இறக்கும் - மதம் பொருந்திய யானையை அதன் வலி 
தொலைத்து வீழ்த்திய காட்டிலுறையும் புலி, தனக்கு இடப்பக்கம் வீழ்ந்த 
அவ்வியானையை, தான் பசி மிகுதியால் உயிர்துறக்குந் 
தறுவாயிலிருப்பினும், உண்ணாமல் உயிர்விடும்; ” 

கடமா என்றால் யானை என்கிறார் இளவழகனார், மதறாஸ் அகராதியோ ‘பைசன்’ என்கிறது! கடகரி (பரிபாடல் திரட்டு), கடமா = மதயானை (தேவாரம்) இலக்கிய ஆட்சிகள் உண்டு என்பதால் இளவழகனார் உரையை ஒரு பொருளாகக் கொள்ளலாம். ஆனால், புலி தன் இரைக்காக மிகுதியும் மான்களை அடிக்கும், மதயானை ஒருத்தலைப் புலி கொல்வது மிக, மிக அரிதானது. மலையாளம், துளு, கன்னடம், தெலுங்கு, தமிழ் எல்லாவற்றிலும் கடமா என்றால் Rusa unicolor தான். எனவே, நாலடியார் வெண்பாவில் மானையோ, (அல்லது, யானையையோ) பொருள் கொள்வது பொருத்தமாகும்.


(2) கந்தபுராணம், தக்ஷகாண்டம், வள்ளியம்மை திருமணப்படலம்.

கானவர் தலைவன் ஆங்கே கதுமென வந்து தங்கள் 
மானினி தன்னைக் கண்டு வள்ளியங் கிழங்கு மாவுந் 
தேனொடு கடமான் பாலுந் திற்றிகள் பிறவு நல்கி 
ஏனலம் புனத்தில் நின்ற யாணர்வேங் கையினைக் கண்டான். 76 

சைவ சித்தாந்தக் கழகப் பதிப்பு உரை: கடமான் = ஒருவகை மான். வள்ளியே (மானினி) மான்வயிற்றில் பிறந்தவள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மான், வள்ளி, வேங்கை - புராணம் பழையது. வேங்கை - மரம், புலி இருபொருள் உண்டு, கடமான் பாலுண்டு வளர்ந்த மானினி (மான் போன்ற வள்ளி) வேங்கை (புலி/முருகன் மாறிநிற்கும் மரம்) அருகே. மானும் (Indian elk called Sambur), வேங்கையும் - நயம் காண்க.


ஆக, இரண்டு மேற்கோளிலுமே, பாடற் பொருளும், உரைகளும் கடமான் = ’பைசன்’ என்று குறிப்பிடவில்லை. கடமா = கடம் + மா என்று பிரிக்க வேண்டும். கடம் + ஆ என்று பிரித்தால் பிழை.




கடமா ஏறுகள் மத்தம் பிடிக்கும் மாதங்களில் (rut season) தங்கள் கொம்புகளை மிடைந்து மோதும் காட்சி: http://www.thehindu.com/news/international/article540272.ece http://www.stockphotopro.com/photo_of/Sparring/233391LGP/Sparri


ng_Sambar_Deer_Cervus

(அ) கொலை முதிர் கடமான் முதிர்முகம் படர்ந்து 
கொழுஞ் சினை மிடைந்து குளிரொடு பொதுளிய 
நெடு மரத்து இளங்கா நிலைத்தலானும் (கல்லாடம் 81) 
(சினை - கிளைகளுடன் கூடி, சூலம் (குளிர்) போலுள்ள 
கடமானின் கொம்பு). 


(ஆ) மான் வகைகள்: கலைமா (black buck), மரைமா (antelope), கடமா (sambur)

 தாளறுவன இடைதுணிவன 
 தலைதுமிவன கலைமா 
 வாளிகளொடு குடல்சொரிதர 
 மறிவனசில மரைமா 
 நீளுடல்விடு சரமுருவிட 
 நிமிர்வனமிடை கடமா 
 மீளிகொள்கணை படுமுடலெழ 
 விழுவனபல உழையே. (சேக்கிழார்) 


(இ) கடமை மிடைந்த துடவையஞ் சிறுதினை - குறுந் 392 

கடமை = கடமான் (Sambur).


(ஈ) நாகமும் நறையும் ஊகமும் உழுவையும் 
கடமான் ஏறும் கவரியும் கரடியும் - (பெருங்கதை). 


(உ) கவரி கடமா கதூஉம் படர்சாரல் 
(ஐந்திணைஐம்பது - 288) 


(ஊ) எற்படு பொழுதின் இனந்தலை மயங்கிக் 
கட்சி காணாக் கடமான் நல்லேறு 
மடமான் நாகுபிணை பயிரின் விட முழை (புறம் -157) 
'in a cave as the sun descends, a massive tawny 
male tiger male tiger attends 
to a fine stage trumpeting for his young and bewildered doe 
because he is lost in the forest, separated from his family, 
unable to find his way home" (George L. Hart) 


வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக் 
கட்சி காணாக் கடமா நல்லேறு 
சுடறுமணி கிளரச் சிதறுபொன் மிளிர (புறம் -202) 

இரண்டு பாட்டாலும், கடமா = கடமான் என்பது தெளிவு. உவேசா, புறநானூறு, 6-ம் பதிப்பு, 1963. “கடமானேறு - 157, 202” என்பதால் அறிக. வேட்டுவர் இறைச்சி உண்ணக் கடமான் ஏற்றை வேட்டையாடுவது (புறம் 202). அடுத்த குறுந்தொகை உதாரணமும் கடமானை வேட்டையாடல் குறித்தது.


(எ) ”கல்லென் கானத்துக் கடமா வாட்டி 
எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன” (குறுந்- 179) 

வேட்டுவர் நாய்கள் கடமானை அலைக்கழித்து இளைப்பை அடைந்தன. கடமானை நாய்கள் அலைக்கும். காட்டுச் செந்நாய்கள் குட்டியுடன் உள்ள தாய்க் கடமானை அலைப்பது காண்க: http://www.youtube.com/watch?v=B79dxXqYw-M


வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை மலைபடுகடாம் 175) 

குறிஞ்சி நிலத்தவர் பெண் நாய் கடித்த உடும்பின் இறைச்சி, கடமானின் இறைச்சி, முள்ளம்பன்றியின் இறைச்சியை உண்டனர்.


கடமான் (rusa unicolor) தமிழ்ப் பத்திரிகைகளில் நிறையக் காணலாம். நா. கணேசன்

மிளா குறித்து

[தொகு]

திசைச்சொல் மிழா/மிளா: நாஞ்சில்நாட்டில் மிழா (மிளா) என்னும் திசைச்சொல் வழங்குகிறது. இதை இணையத்தில் பிரபலம் ஆக்குபவர் ஜெயமோகன் ஆவார். மிழா/மிளா ஆண் கடமானுக்கு மாத்திரம் பொருத்தமான சொல். இதனை ஆண் ஆட்டின் பெயரான மேஷம் (< மிஷ்- ) உடன் ஒப்பிடலாம். நாஞ்சில் நாடு சேரர்களுக்கு உட்பட்ட நாடு. அங்கே மருமக்கட் தாயம் உண்டு. எனவே வடசொல்லான மேஷம் (மேழம்) மிழா எனத் திரிந்து பேச்சுவழக்கில் மிளா என்றாகியுள்ளது போலும். மிழா அல்லது மிளா இரண்டும் தமிழ் நூல்களில் எங்கும் காணமுடியாது என்பதும் கருதத்தக்கது.


”முழா - மிழா = திரண்ட மான் (stag) . மிழா - மேழம் = திரண்ட செம்மறியாட்டுக்கடா. மேழம் - மேஷ(வ.) மேழம்” (பாவாணர், பண்டைத் தமிழ்) “Chamois = மலைமிழா; பருத்த மலையாடு. மிழா என்பது மொத்தமான ஆட்டைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல்.” [எழுதியவர் அருளி ஆக இருக்கலாம். ஆனால் மிழா பழந்தமிழ்ச் சொல் அன்று - நா. கணேசன்] http://www.geetham.net/forums/archive/index.php/t-24063.html


வடசொல் ஆன மிழா(மிளா) (< மிஷ்-, மேஷம்) நாஞ்சில்நாட்டு வழக்கு. அத் திசைசொல்லை விட, எல்லாருக்கும் பொதுவான தமிழ்க் கட்டுரைகளில் பழைய, இலக்கிய ஆட்சி மிக்க, எல்லா திராவிட மொழிகளிலும் நிலைத்துள்ள (DEDR 1114) பயன்படுத்துவது சாலச் சிறந்தது. ”செந்தமிழ்ப்பாண்டிநாட்டுக்குத் தென்திசையிலுள்ள தென்பாண்டிநாட்டார் ஆவினைப் பெற்றம் என்றும் சோற்றைச் சொன்றி என்றும் , குட்ட நாட்டார் தாயைத் தள்ளை என்றும் , குட நாட்டார் தந்தையை அச்சன் என்றும் , கற்காநாட்டார் வஞ்சரைக் கையர் என்றும் , வேணாட்டார் தோட்டத்தைக் கிழார் என்றும் , பூழிநாட்டார் சிறுகுளத்தைப் பாழி என்றும் , அருவா நாட்டார் . செய்யைச் செறு என்றும் , சிறுகுளத்தைக் கேணி என்றும் , அருவா வடதலையார் புளியை எகின் என்றும் , சீதநாட்டார் தோழனை எலுவன் என்றும் , தோழியை இருளை என்றும் வழங்குவர் . பிறவும் வந்த இடத்துக் காண்க . [...] சிங்களம் என்றது ஈழநாட்டை. அந்தோ என்பது சிங்களச் சொல் . எருத்தைப் பாண்டில் என்பது தெலுங்குச் சொல் மாமரத்தைக் கொக்கு என்பது துளுவச்சொல். ஒழிந்தன வந்த இடங்களில் காண்க.“ (ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர், நன்னூல், காண்டிகையுரை). நா. கணேசன்


> மரை என்பதை மறை > என்று மாற்றி மறைக்காடு = வேதாரணியம் > என்ற சைவைக் கதைகள் கட்டப்பட்டுவிட்டன.

> தமிழில் Anteopes-க்கு பெயர் “மரை”. > மரையினத்தில் முக்கியமாக நான்கு வகைகள் உள்ளன. > Anteopes - கிரேக்கத்தில் பேர் வந்ததே அதன் > அகண்ட இமைகளால்தான். அச்செய்திகள் > தமிழ் இலக்கியங்களில் சங்கந்தொட்டுப் பல உள.


> மரையா (மரை ஆ), மரை ஆன் - Nilgai. > 19-நூற்றாண்டு வரை நம் ஊர் காடுகளில் இருந்தது. > கோடையைத் தாங்கும் வலிமை பெற்றது. > ஏராளமான சங்கப் பாட்டுகளில் இருக்கும். > பெருங்கதையில் கொங்குவேளிர் மரைஆ > பால் பிலிற்றுவதை அழகாகச் சொல்லி உள்ளார். > எகிப்தியர் சில ஏண்ட்டிலோப் வகைகளை > வளர்ப்பினமாக்க முயன்றுள்ளனர். தமிழரும் > பைசனையும் (ஆமா எனத் தமிழில் பெயர். > சிந்து சமவெளியிலும் நடந்துள்ளது), > மரைஆவினையும் (Nilgai) வனவாசிகள் > பால் கறந்து உணவுடன் காய்ச்சிய அழகான > பாடல் சங்கத்தில் உண்டு.

> மரை என்றால் சௌஸ்ருங்கா (4-horned antelope). தமிழ்நாட்டுக் > கரைக்கடற்புற ஊர்களில் நிறைய. > அதனால், மரைக்காடு வேதாரணியத்தின் > பழந்தமிழ்ப் பெயர். கன்னடத்தில் நீல்காய் - மரவி, மராவு. > Note the connection: Neel gao/gai "cow" in Hindi, > and marai aa(vu) "cow" in Sangam Tamil.

> கலை (கலைமான் = black buck) துர்க்கை, சரசுவதியின் > ஊர்தி. க்ருஷ்ணமிருகம் என்று பெயர். > இதன் தோலை பிரமனுக்கு ஆசனம். > ஆரியர் வாழ்ந்த ஆரியவர்த்தம் கிருஷ்ண > மிருகம் உலவும் பூமி. தென்னாட்டில் அழிந்து > விட்டிருக்கிறது அப்போதே.

> இரலை - கலைமானுக்கும் சொல்லலாம், > கரிய கொம்புடைய சிங்காரா என்னும் > Indian gazelle-க்கும் வரும்.

> More later, > N. Ganesan

நா. கணேசன். நீங்கள் இங்கு பல செய்திகளைச் சொல்லியுள்ளீர்கள். மற்ற பயனர்கள் (குறிப்பாக மிளா கட்டுரையை எழுதிய காட்டுயிர் ஆர்வலர் கார்த்தி) ஏதும் சான்றுகளைக் காட்ட விரும்பினால் இன்னும் ஓரிரு நாட்களில் தரக்கூடும். அனைத்தையும் கருத்தில் கொண்டு தேவைப்பட்டால் மிளா கட்டுரையை இந்தக் கட்டுரைக்கு நகர்த்திவிடலாம். (எனக்குத் தனிப்பட்ட அளவில் இரண்டு பெயர்களுமே உகப்பு தான்.) -- சுந்தர் \பேச்சு 09:22, 11 சூலை 2011 (UTC)[பதிலளி]

நன்றி, சுந்தர். கடமான் என்பது மிகப் பரவலாக அறியப்படும் தமிழ்ப் பெயர். மிளா ஒரு சிறு வட்டாரத் திசைச் சொல் - இலக்கிய ஆட்சி இல்லாதது.

கடமா என்று சென்னைப் பேரகராதி தரும் பொருள் ‘பைசன்’ என்பது பிழையானது. உரையாசிரியர்கள் யாரும் அப்பொருள் தருவதில்லை என்று ஆதாரங்கள் காட்டியுள்ளேன். எனவே, ”கடமா” என்னும் பக்கத்தை காட்டுமாடு அல்லது காட்டா (காடு + ஆ), அல்லது காட்டுப்பசு அல்லது ஆமா அல்லது ஆமான் என்று மாற்றிவிடுங்கள். அக் கட்டுரையில் உள்ள கடமா என்பதை காட்டுமாடு (ஆமா) என்று முழுக்கத் திருத்த வேண்டும். விரிவான கட்டுரை இதற்கும் தருகிறேன்.

நா. கணேசன்

யாரும் மறுப்பு தெரிவிக்காத படியால் பக்கத்தை தக்கபடி வழிமாற்றலாம். ஆனால், இந்த உரையாடல் பக்கத்தையும் பேச்சு:மிளா பக்கத்தில் உள்ள உரையாடலையும் ஒன்றிணைத்த பின்னரே செய்யலாம். நா. கணேசன், பக்க வரலாற்றைக் காத்து இரு கட்டுரைகளையும் ஒன்றிணைக்க வேண்டியுள்ளதால் சற்று பொறுக்க வேண்டுகிறேன். விரைவில் செய்து விடலாம். -- சுந்தர் \பேச்சு 05:06, 13 சூலை 2011 (UTC)[பதிலளி]
தெளிவுக்காக விளக்கம்: நான் வழி மாற்றலாம் எனச் சொன்னது மிளா கட்டுரையை மட்டுமே. அண்மையில் எரவிக்குளம் பரம்பிக்குளம் காட்டுயிர் காப்பகத்தில் மலையாள அலுவலர் ஒருவர் இவ்விலங்கைக் காட்டி கட(ம்பை) மான் என்றார். நாஞ்சில் வழக்கு மலையாளத்தை ஒட்டியது என்றால் பொள்ளாச்சி அருகில் பேசப்படும் மலையாளம் வேறு வழக்கா புரியவில்லை. இருந்தாலும் என்னிடம் போதிய சான்று இல்லாததால் நான் மறுக்கவில்லை.
கடமா கட்டுரையை இப்போது மாற்ற வேண்டாம். அதன் பேச்சுப் பக்கத்தில் தனியே உரையாடி முடிவு செய்யலாம். Bison வேறு, Gaur வேறு விலங்கு. அதனால் முறையாக அறிந்து, தேவைப்பட்டால் மாற்ற வேண்டும். -- சுந்தர் \பேச்சு 08:28, 13 சூலை 2011 (UTC)[பதிலளி]
மாற்றுவழி ஏற்படுத்தியுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 06:00, 16 சூலை 2011 (UTC)[பதிலளி]
நன்றி, சுந்தர். கடமா என்னும் பக்கமும் மாறவேண்டும். நற்கீரன் கடமா பக்கத்தில்

சொல்லியுள்ளார், பார்க்கவும். காட்டுமாடு, ஆமா, ஆமான், காட்டெருமை என்போம். இலக்கியப் பெயரும் அதுவே.

இந்தியாவில் பைசன் என்பது bos gaurus தான்.

நா. கணேசன்

நன்றி. இந்தியாவில் பரவலாக Bos gaurus-ஐ பைசன் என்று கூறுவதை அறிவேன். அதனால், பைசன் பேரினத்துடன் குழப்பிக் கொள்ளக் கூடாது என்றே அவ்வாறு தெரிவித்தேன். -- சுந்தர் \பேச்சு 12:09, 16 சூலை 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கடமான்&oldid=819919" இலிருந்து மீள்விக்கப்பட்டது