உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கங்கன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென்காசியாரின் இது போன்ற நற்பணி தமிழர் வரலாற்றுக்குப் பெருமை. --Sengai Podhuvan (பேச்சு) 00:09, 25 மே 2013 (UTC)[பதிலளி]

அன்புள்ள சண்முகம்,
-Dr.Vincent A.Smith, Oxford History of India, 1919. கருத்தை அடிப்படையாக வைத்து இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
கங்கன் என்னும் சொல்லுக்கும் கங்கை என்னும் சொல்லுக்கும் உள்ள மொழிப்போலி ஒப்புமையை உள்ளதைக் கொண்டு கங்கன் கங்கைப் பகுதியிலிலிருந்து வந்தவன் என்று வடநூலார் எழுதிய வரலாற்றைப் பதிவு செய்துள்ளர். (ஆங்கிலக் கட்டுரை)
இதற்கு யாரும் ஆதாரம் கேட்கவில்லை.
கங்கன் என்னும் சொல் சங்ககால வரலாற்றுப் பதிவாக உள்ளது.
வரலாற்றுப் பதிவைக் கொண்டு கூறும் வரலாற்றுக்கு சான்று கேட்கிறோம்.
எண்ணுவோம்.
நம் பெருமையை நாம்தான் சொல்லவேண்டும்.
ஸ்மித் கூற்று போதும். அவர் கூற்றை ஏற்போம்.
சான்று தேவை குறிப்பை நீக்குவார்களாக. --Sengai Podhuvan (பேச்சு) 19:37, 17 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

அது தான் இங்கு சிக்கலே. Dr.Vincent A.Smith, Oxford History of India, 1919. நூலில் அவரின் கருத்தை பதிவு செய்துவிட்டார். ஆனால் தமிழர் நாம் எந்த நூலிலும் பதிவு செய்யவில்லை. தமிழர் முதலில் இரண்டாம் நிலை மூலங்களான நூல்களில் பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு தான் விக்கி என்ற மூன்றாம் நிலை மூலத்தில் பதிய முடியும். நீங்கள் தயவு செய்து இந்த செய்தியை ஒரு நூலில் பதியுங்கள். இதுமட்டுமல்ல கவுரியர் பற்றிய உங்கள் கருத்து, குறுவழுதி, நல்வழுதி புலவர் மட்டும்தான் போன்றவற்றை நான் முழுவதுமாக ஏற்கிறேன். ஆனால் விக்கியில் எழுத வேண்டும் என்றால் நூலில் பதிய வேண்டும். எனக்குத் தெரிந்து நாம் பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளில் இதே போல சிக்கல்கள் பற்றி உரையாடி இருக்கிறோம். அதனால் இவை எல்லாவற்றையும் சேர்த்து ஒரு நூலாக எழுதினால் பெரிய உதவியாய் இருக்கும். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:01, 18 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

தென்காசியாருக்கு நன்றி
நூல் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என விளங்கவில்லை.
அச்சிட்ட நூலா
வேறு இணையதளப் பதிவு போதாதா
தமிழுக்காக வாழ்கிறோம் --Sengai Podhuvan (பேச்சு) 19:23, 18 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

நூல் எது வேண்டுமானாலும் இருக்கலாம். தமிழ் இணையதளம் என்றால் வரலாறு.காம் அளவுக்காவது தரமானதாக இருக்க வேண்டும். அல்லது ஆய்வரங்குகள் நடக்கும் போது ஒவ்வொன்றுக்கும் நீங்கள் நினைப்பதை ஒவ்வொரு கட்டுரையாக அனுப்பிவிடுங்கள். ஆய்விதழ் கட்டுரைகளை கூட மேற்கோள் காட்டலாம்.

நீங்கள் அப்படிச் செய்துவிட்டால் அடுத்த தலைமுறையில் வருபவர்களுக்கும் உங்கள் கட்டுரையையோ அல்லது நூலையோ மேற்கோள் காட்டும் வாய்ப்பு உண்டாகும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:56, 18 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கங்கன்&oldid=1577015" இலிருந்து மீள்விக்கப்பட்டது