பேச்சு:ஒருங்கியம்
கருத்துச்சூழல்
[தொகு]- Nervous Sytem - நரம்புத் தொகுதி, நரம்பு மண்டலம்
- Fuel System - எரிபொருள் உட்செலுத்தல் தொகுதி
- File System - கோப்பு வரைமுறை
- Economic System - பொருளாதார முறைமை
- Political System - அரசாட்சி முறைமை
- Social System - சமூக முறைமை
- Control System - கட்டுப்பாட்டு ஒருங்கியம் ??
- System Engineering - ஒருங்கிய பொறியியல் ??
- operation system - இயங்கு தளம்
- Global Positioning System
பயனர் கருத்துக்கள்
[தொகு]நற்கீரன் கருத்துக்கள்
[தொகு]செல்வா...ஒருவரிக் கட்டுரையை நீக்குவதில் சிக்கலில்லை. ஆனால் ஒருங்கியம் என்ற சொல்லு பொருந்துமா என்று இன்னும் பூரண திருப்தி இல்லை. ஒழுங்கமைப்பு என்பதும் அவ்வளவு பொருத்தமாக இல்லை. முறைமை யும் பொதுச் சொல்லாக இல்லை. கட்டகம் (இராம.கி பரிந்துரை) கட்டமைப்பு (structure) குளப்பி அவ்வளவு பொருத்தமாக இல்லை. ஒருங்கியம் என்று ஒரு நூல்களிலும் கட்டுரைகளிலும் நான் பாக்கவில்லை. பிற பயனர்களின் கருத்துக்களையும் கேட்டறிதல் வேண்டூம். --
ஒருங்குதல் என்றால் Convergence என்றும் அல்லவா பொருள் தருகிறது ?--Natkeeran 22:57, 17 மார்ச் 2009 (UTC)
Natkeeran 22:33, 17 மார்ச் 2009 (UTC)
- நற்கீரன், System என்பது என்ன என்று துல்லியமாய் உணர்தல் வேண்டும். இதனை ஆங்கில விக்கி" is a set of interacting or interdependent entities, real or abstract, forming an integrated whole." என்கிறது. இது ஒருங்கிணைந்து ஒன்றித்து இயங்கும் ஒன்று அல்லவா. அதுவே ஒருங்கியம்.
ஆங்கில விக்கி மேலும், "The concept of an "integrated whole" can also be stated.." என்கிறது. "integrated whole", "interacting or interdependent" என்பன கருவான எண்ணங்கள். Webster அகராதி "a regularly interacting or interdependent group of items forming a unified whole" என்கிறது. ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி, " I. An organized or connected group of objects. 1. A set or assemblage of things connected, associated, or interdependent, so as to form a complex unity; a whole composed of parts in orderly arrangement according to some scheme or plan; rarely applied to a simple or small assemblage of things (nearly = ‘group’ or ‘set’)." என்கிறது. இப்படிப் பல் இடங்களிலும் கருத்தொருமை இருப்பதைப் பார்க்கலாம். ஒருங்கிணைந்து இயங்குவது ஒருங்கியம் (ஒருங்கு+இயம்). இச்சொல்லை நான் மேலோட்டமாக எண்ணி இடவில்லை. கருவான கருத்தை நடுநிறுத்தி உணர்த்தும் சொல். பிற சொற்களோடு சேர்த்துக் கூறும்பொழுது ஒருங்கியம் என்பது முதலில் தனியாக என்ன பொருள் தரும் என்று தெளிவாக உணர்தல் வேண்டும். நரம்பு மண்டலம் என்பது நரம்புகள் தொகுதியைச் சுட்டும், நரம்பு மண்டல ஒருங்கியம் என்னும் பொழுது அவை எவ்வாறு அமைக்கப்பட்டு, எவ்வெவ் வகைகளின் உறவுகொண்டு எவ்வாறு ஒருங்கிணைந்து இயங்குகின்றது என்னும் ஒருங்கிணைந்த இயக்கத்தை, இயங்கு முறையைச் சுட்டும். குருதி ஓட்ட ஒருங்கியம் என்பதும் அப்படியே. கட்டுப்பாட்டு ஒருங்கியம் என்பது கட்டுப்பாட்டுக் கருவிகளும் அவற்றின் அமைப்புகளும் எவ்வாறு ஒருங்கிணைந்து இயங்கி ஓர் ஒருங்கியமாக உள்ளது என்பதைச் சுட்டும். ஆறுகள் ஒருங்கியம் என்பது அப்படிப்பட்டதே. மின்னாற்றல் பகிர்ந்தளிக்கும் ஒருங்கியம் என்பது மின்னாற்றல் எவ்வாறு (எம்முறையாக), சீருடன், தக்க முறையுடன், பல இடங்களுக்கு எடுத்துச் செலப்படுகின்றது என்பதைச் சுட்டும் சொல். இதனை மின்பகிர் ஒருங்கியம் (electrical distribution system) என்று சுருக்கமாகவும் சொல்லலாம். அதாவது ஒருங்கியம் என்பது ஓர் அமைப்பை, அது ஒருங்கிணைந்தவாறு இயங்கும் தன்மையை, உறுப்புகள், அவற்றின் உள் உறவாட்டம், முழு மொத்தம் ஆகைய அனைத்தையும் குறிக்கும் சொல் என்பதனை உணர வேண்டும். சற்று ஆழ எண்ணிப்பார்த்தல் வேண்டும்.--செல்வா 01:07, 18 மார்ச் 2009 (UTC)
- உங்களின் விளக்கம் நன்று. "The concept of an "integrated whole" ...எனபது ஒருங்குதல் என்ற சொல்லில் இருந்து பொருள் தருகிறது என்று நினைக்கிறேன். எனக்கு ஏற்புடையதே (திருப்தி). --Natkeeran 01:25, 18 மார்ச் 2009 (UTC)
ஒருங்கியயியல், ஒருங்கியமியல், ஒருங்கியல்
[தொகு]--Natkeeran 01:27, 18 மார்ச் 2009 (UTC)
- ஒருங்கியவியல். --செல்வா 01:30, 18 மார்ச் 2009 (UTC)
- System Science என்பதை ஒருங்கியம் அறிவியல் என்று கூறலாம், ஆனால் அதனைச் சுருக்கி ஒருங்கியவியல் எனலாம். ஒருங்கியம் என்பதை ஒருங்கம் என்று சொல்லாக்கத்திற்காக சுருக்க முடிந்தால் ஒருங்கம், ஒருங்கு +இயல் => ஒருங்கியல் என்றும் கூறலாம் ஆனால் இவை சரியென்று நினைக்கவில்லை. ஒருங்கியவியல் = system science என்பதே சரியானதாகத் தெரிகின்றது.--செல்வா 01:39, 18 மார்ச் 2009 (UTC)
- ஒருங்கியவியல். --செல்வா 01:30, 18 மார்ச் 2009 (UTC)
ஒருங்கு
[தொகு]ஒருங்கு என்றால் கூகிளில் பல தொடர்புடைய பொருள்கள் கிடைக்கின்றன. முதன்மையாக அச்சொல்லின் பொருள் என்ன?--Natkeeran 01:42, 18 மார்ச் 2009 (UTC)
- தமிழ் லெக்சிகனில் பாருங்கள். ஒருங்கு என்றால் ஒன்று சேர்தல், ஒன்றாய் இருத்தல், ஒன்றுபட்டு இருத்தல். ஒருங்கே என்றால் ஒன்றாக. ஒருங்கிணைப்பு என்றால் எல்லாம் ஒன்றாய் ஒன்றில் இணந்து இருக்கச் செய்வது. Integrated Circuit என்பதற்கு 1968 ஆண்டுக் காலப்பகுதியில் ஒருங்கிணைப்பு சுற்றதர் (அதர்=வழி, அக்காலத்தில் circuit என்பதற்கு சுற்றதர் என்னும் சொல்லை ஆண்டோம். மின்சுற்று என்பதை மின்சுற்றதர் என்றோம்.). ஒருங்கிணைப்பு = Integrated. ஒருங்கு என்பது எளிதாக பொருள் சுட்டுவது. --செல்வா 04:32, 18 மார்ச் 2009 (UTC)
கலைச்சொற்கள்
[தொகு]- ஒழுங்கமைப்பு - system
- கட்டமைப்பு - structure
- செயல்முறையாக்கம், முறைவழியாக்கம் - process
- ஒழுங்கமைப்பியல் - system studies
- செயல், வினை - function
- அமைப்பு - organization
மேலே ஒழுங்கமைப்பு என்பது system என்ற ஆங்கில சொல்லுக்கு இணையாக எல்லா இடங்களிலும் உபயோகிக்க முடியாது. எடுத்துக்காட்டாக Control System என்பதை கட்டுப்பாடு ஒழுங்கமைப்பு என்பதை விட கட்டுப்பாடு கட்டமைப்பு என்பது பொருந்துகிறது. கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது.
Control System என்பதற்கு கட்டுறுத்தியம் என்று சொல்லலாம். தனித்தனி சொற்களாக இருக்க வேண்டும் என்பதில்லை. System என்பதை அமைப்பு அல்லது அமையம் எனலாம். System என்பதற்கு ஒருங்கியம் என்ற சொல் மிகப் பொருத்தமானது. ஒருங்குதல் என்றால் பல்வேறு உறுப்புகளோ, கருத்துகளோ, அமைப்புகளோ ஒன்றோடு ஒன்று இணக்கமுற ஒன்றாக சேர்ந்து இயங்குதல். உடங்குதல் என்றாலும் இணக்கமுற இயங்குதல்/ஒன்றுதல் (harmonious) என்றே பொருள்படும். எனவே ஒருங்கியம் அல்லது உடங்கியம் என்றால் ஒத்து இயங்கும் ஓர் அமைப்பு முறை என்று பொருள்படும். Control System என்பதற்கு கட்டுப்பாட்டு ஒருங்கியம், கட்டுறுத்து ஒருங்கியம் எனலாம். Electrical system என்பதையும் அது ஒரு மின்னியல் ஒருங்கியம் எனலாம். ஒருங்கியம் என்னும் சொல்லின் அடிப்படை, பலவும் ஒன்று சேர்ந்து ஒன்றாக இயங்குவது என்பதுதான்.−முன்நிற்கும் கருத்து செல்வா (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
System = ஒருங்கியம்
[தொகு]Control System என்பதற்கு கட்டுறுத்தியம் என்று சொல்லலாம். தனித்தனி சொற்களாக இருக்க வேண்டும் என்பதில்லை. System என்பதை அமைப்பு அல்லது அமையம் எனலாம். System என்பதற்கு ஒருங்கியம் என்ற சொல் மிகப் பொருத்தமானது. ஒருங்குதல் என்றால் பல்வேறு உறுப்புகளோ, கருத்துகளோ, அமைப்புகளோ ஒன்றோடு ஒன்று இணக்கமுற ஒன்றாக சேர்ந்து இயங்குதல். உடங்குதல் என்றாலும் இணக்கமுற இயங்குதல்/ஒன்றுதல் (harmonious) என்றே பொருள்படும். எனவே ஒருங்கியம் அல்லது உடங்கியம் என்றால் ஒத்து இயங்கும் ஓர் அமைப்பு முறை என்று பொருள்படும். Control System என்பதற்கு கட்டுப்பாட்டு ஒருங்கியம், கட்டுறுத்து ஒருங்கியம் எனலாம். Electrical system என்பதையும் அது ஒரு மின்னியல் ஒருங்கியம் எனலாம். ஒருங்கியம் என்னும் சொல்லின் அடிப்படை, பலவும் ஒன்று சேர்ந்து ஒன்றாக இயங்குவது என்பதுதான். --செல்வா 02:57, 5 ஏப்ரல் 2008 (UTC)
System என்பதற்கு சமைதியம் என்றும் சொல்லலாம். சமை என்றால் ஒரு சேர சேர்ந்து ஆக்குதல் என்று பொருள்படும்.--செல்வா 20:25, 5 ஏப்ரல் 2008 (UTC)
- ஒருங்கியம் நன்றாக உள்ளது. சமைதியம் இயலுறு ஒருங்கியங்களுக்குப் பொருந்தாது, எனினும் செயற்கை ஒருங்கியங்களுக்குப் பயன்படுத்தலாம். -- சுந்தர் \பேச்சு 07:01, 14 ஏப்ரல் 2008 (UTC)
முறைமை System
[தொகு]- முறை - method
- முறையியல் - methodology
- முறைமை - system
- முறைமைக் கட்டுப்பாடு - system control
- System Engineering - முறைமைப் பொறியியல்
இங்கு System என்பதற்கு முறைமை என்பது பொருந்துகிறதா. ஒழுங்கமைப்பு பெரிய சொல்லாகவும், இங்கு அவ்வளவு பொருந்தவும் இல்லை. (அந்த வரையறையை நான் தான் எழுதுநேன்.) முறைமை என்பது இப்போது system இணையாக பல இடங்களின் பயன்படுகிறது. நல்ல சொல்லாகப் படுகிறது. உங்கள் கருத்து அறிய ஆவல். --Natkeeran 19:38, 27 பெப்ரவரி 2009 (UTC)
- நற்கீரன், இங்கே முன்னொரு முறை, இப்படி எழுதினேன்://Control System என்பதற்கு கட்டுறுத்தியம் என்று சொல்லலாம். தனித்தனி சொற்களாக இருக்க வேண்டும் என்பதில்லை. System என்பதை அமைப்பு அல்லது அமையம் எனலாம். System என்பதற்கு ஒருங்கியம் என்ற சொல் மிகப் பொருத்தமானது. ஒருங்குதல் என்றால் பல்வேறு உறுப்புகளோ, கருத்துகளோ, அமைப்புகளோ ஒன்றோடு ஒன்று இணக்கமுற ஒன்றாக சேர்ந்து இயங்குதல். உடங்குதல் என்றாலும் இணக்கமுற இயங்குதல்/ஒன்றுதல் (harmonious) என்றே பொருள்படும். எனவே ஒருங்கியம் அல்லது உடங்கியம் என்றால் ஒத்து இயங்கும் ஓர் அமைப்பு முறை என்று பொருள்படும். Control System என்பதற்கு கட்டுப்பாட்டு ஒருங்கியம், கட்டுறுத்து ஒருங்கியம் எனலாம். Electrical system என்பதையும் அது ஒரு மின்னியல் ஒருங்கியம் எனலாம். ஒருங்கியம் என்னும் சொல்லின் அடிப்படை, பலவும் ஒன்று சேர்ந்து ஒன்றாக இயங்குவது என்பதுதான்.// இதன் படி system என்பதற்கு ஒருங்கியம், உடங்கியம், அமையம் எனலாம். சமைதியம் என்றும் சில இடங்களில் கூறலாம். அதாவது அடிப்படை என்னவென்றால் எப்படி ஒன்றோடு ஒன்று இணக்கமுற ஒன்றுசேர்ந்து ஒன்று இயங்குகின்றது அல்லது அமைந்து உள்ளது என்பது கருத்து. முறைமை என்பதும் சில இடங்களில் மிகப்பொருந்தும். முறை என்பதிலும், எதற்கு அடுத்தாற்போல் எது என்னும் ஒழுக்கப்பாடுகள் வலியுறுத்தும் கருத்து உண்டு. முறை செய்து, முறை வகுத்து என்னும் சொல்லாட்சிகளில் வழங்கும் பொருள் system (order, organization) என்பதுதான். --செல்வா 23:01, 27 பெப்ரவரி 2009 (UTC)
இராம.கி.
[தொகு]மேலே கொடுத்துள்ள சொற்களுக்கு என் பரிந்துரையையும், ஆங்காங்கே சில விளக்கங்களும், கீழே கொடுத்துள்ளேன். வழக்கம் போல் இவற்றை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் உகப்பு.
System - கட்டகம் (அமைப்பு, முறைமை என்பவை பல இடங்களில் சரிவராமல்
போகின்றன. அதோடு கட்டப்பட்ட நிலையை அவை உணர்த்துவதே இல்லை. கூட்டுச்
சொற்களை அமைக்கும் போது கட்டகம் என்பது மிக எளிதாக வளைந்து கொடுக்கிறது.)
Organization - ஒருங்கேற்றம் [ஒருவுதல், ஒருங்குதல் = ஒன்று சேருதல்.
ஒருங்கம் - organ = ஒருங்குபட்ட கூட்டில் இருக்கும் ஓர் உறுப்பு.
ஒருங்குவித்தல் (ஒருங்குதலின் பிறவினை) >ஒருங்கேற்றல் = ஒருசேர அமைத்தல்
= to organize; ஒருங்கேற்றம் = organization, ஒருங்கம் என்ற சொல்லை
முன்பு இதற்கு ஈடாகப் பயன்படுத்தியுள்ளேன். இங்கே கொடுத்திருக்கும்
இணைச்சொற்களை ஒருங்கு சேர வைத்து எண்ணிப் பார்க்கும் போது ஒருங்கேற்றம்
என்பதையே organization க்கு இணையாக வைத்துக் கொண்டு ஒருங்கம் என்பதை
organக்குப் பொருத்தமாய் அமைத்துக் கொள்ளுவதே நல்லது என்று தோன்றுகிறது.
ஒருங்கியம் = organism; endemic organism - உள்ளொடு ஒருங்கியம்; endemic
என்ற சொல்லை சொற்பிறப்பு அகரமுதலி “1662, from Gk. endemos "native,"
from en- "in" + demos "people, district" (see demotic)” என்று
குறிக்கும். ஒடு, ஓடு, உடன் என்ற இடைச்சொற்களின் வேர் ஆக ஒடுதல்/ஒட்டுதல்
என்ற வினையைப் புரிந்து கொள்ளலாம். ஒரு பெரிய கட்டகத்தின் உள்ளே அதனொடு
சேர்ந்தாற்போல் உறையும் ஓர் ஒருங்கியத்தை ”உள் ஒடு ஒருங்கியம்” என்று
சொல்லலாம். உள்ளொடுதல் = to be endemic.]
- மேலே உள்ளதை நண்பர் இராம. கி. எப்பொழுது எழுதினார் என அறியேன், முன்னர் ப்படிக்கவும் இல்லை. System என்பது கட்டகம் என்பது பொருந்தாது (கட்டப்பட்டது கட்டகம், ஆனால் ஒருங்கிணைந்து இயங்குவது என்னும் கருத்து இல்லை). ஒருங்கே என்றால் ஒன்றாக, ஒன்று சேர்ந்து என்று பொருள். ஒருங்கு + இயம் என்பது ஒன்று சேர்ந்து, ஒன்றிணைந்து இயங்கும் அமைப்பு. இதுவே System என்பது என்பது என் கருத்து. --செல்வா 01:23, 18 மார்ச் 2009 (UTC)
- கூகிளில் ஒருங்கு என்பதற்கு நிறைய பக்கங்கள் கிடைக்கின்றன. --Natkeeran 01:33, 18 மார்ச் 2009 (UTC)
ஆங்கில விக்கியில் ஒருங்கியம் பற்றிய தலைப்புகளின் வாயில்
[தொகு]http://en.wikipedia.org/wiki/Wikipedia:WikiProject_Systems
குறிப்புக்காகவும், நினைவூட்டுவதற்காகவும் --செல்வா 04:23, 18 மார்ச் 2009 (UTC)