பேச்சு:ஈராக்குது அணை
இந்த அணையின் பெயரை இந்தி விக்கிப்பீடியாவில் हीराकुद என அழைக்கின்றார்கள். தமிழில் இராக்குது அல்லது ஈராக்குது எனப் பெயரிட்டு அழைப்பது பொருந்தும். தமிழில் வல்லின ஒற்றில் முடியுமாறு எழுதுதல் பிழை. எனவே இராக்குது அணை எனப் பெயரை மாற்றுகின்றேன். ஏதும் மறுப்பிருந்தால் தெரிவிக்கவும். --செல்வா (பேச்சு) 01:16, 7 மார்ச் 2017 (UTC)
- இந்தியில் எழுதியுள்ளது ஹீராகுத³ . கடைசி எழுத்து டகரமன்று, மெலிந்த தகரம். பதம், காதம் முதலான சொற்களில் வரும் தகரம். யாரும் மறுப்பு சொல்லவில்லை எனில் ஈராக்குது என மாற்றவிருக்கின்றேன். தலைப்பே இலக்கணப்பிழையுடன் இருப்பது நல்லதன்று.--செல்வா (பேச்சு) 15:36, 7 மார்ச் 2017 (UTC)
- எனினும் இது எவ்வாறான உச்சரிப்பில் அழைக்கடுகிறது ஐயா!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:58, 7 மார்ச் 2017 (UTC)